'பெரிய' எஞ்சினுடன் மார்தட்டும் உலகின் டாப் - 10 மோட்டார்சைக்கிள்கள்!

By Saravana

மோட்டார்சைக்கிள்களை அதன் எஞ்சின் சிசி.,யை அடிப்படையாகக் கொண்டு பிரிக்கின்றனர். எரிபொருள் சிக்கனம், செயல்திறன் மற்றும் பயன்பாட்டை பொறுத்து இந்த எஞ்சின்களின் தொழில்நுட்பத்திலும் பல்வேறு வேறுபாடுகள் இருக்கின்றன.

இந்த நிலையில், விலையுயர்ந்த மோட்டார்சைக்கிள்களில் அதிக செயல்திறனை வழங்கும் எஞ்சின்கள் பொருத்தப்படுகின்றன. மயக்கம் போட வைக்கும் விலையில் வரும் அந்த மோட்டார்சைக்கிள்களின் எஞ்சின் நம்மூரில் பிரபலமாக இருக்கும் சில கார்களின் எஞ்சினைவிட இரு மடங்கு அதிக சிசி கொண்டதாக இருக்கின்றன. அதில், உலகின் அதிக சிசி கொண்ட எஞ்சினுடன் வரும் 10 மோட்டார்சைக்கிள்களின் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.


பட்டியல்

பட்டியல்

அடுத்தடுத்த ஸ்லைடுகளில் அதிக சிசி எஞ்சின் கொண்ட டாப் - 10 மோட்டார்சைக்கிள்களை காணலாம்.

10. டிரையம்ஃப் தண்டர்பேர்டு ஸ்டார்ம்

10. டிரையம்ஃப் தண்டர்பேர்டு ஸ்டார்ம்

இந்த பட்டியலில் 10-வது இடத்தை டிரையம்ஃப்ட் தண்டர்பேர்டு ஸ்டார்ம் பெறுகிறது. இந்த மோட்டார்சைக்கிளில் 1,699சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கும் மோட்டார்சைக்கிள்களில் பேரலல் ட்வின் எஞ்சின் கொண்ட ஒரே மாடல் இதுதான். இந்த மோட்டார்சைக்கிளின் எஞ்சின் 98 பிஎஸ் பவரையும், 156 என்எம் டார்க்கையும் வழங்கும்.

9. விக்டரி ஃப்ரீடம் வி- ட்வின் (ஹேமர் 8- பால்)

9. விக்டரி ஃப்ரீடம் வி- ட்வின் (ஹேமர் 8- பால்)

விக்டரி ஃப்ரீடம் மோட்டார்சைக்கிளில் 1,731சிசி வி- ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 97 எச்பி பவரையும், 153 என்எம் டார்க்கையும் வழங்கும். ஒவ்வொரு கிலோமீட்டரையும் புத்துணர்வோடு கடப்பதற்கான பயண அனுபவத்தை வழங்கும்.

8. சுஸுகி எம்1800/சி 1800

8. சுஸுகி எம்1800/சி 1800

இந்த பட்டியலில் 8வது இடத்தில் சுஸுகி எம்1800 மோட்டார்சைக்கிள் உள்ளது. இந்த மோட்டார்சைக்கிளில் 1,783சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளின் கண்களுக்கு பல இந்திய கார்கள் விளையாட்டு பொம்மைகள் போன்றுதான் தெரியலாம். ஏனெனில், இந்த மோட்டார்சைக்கிளின் எஞ்சின் 125 பிஎஸ் பவரையும், 160 என்எம் டார்க்கையும் அளிக்கும். சில எஸ்யூவிகள் கூட இந்த மோட்டார்சைக்கிளை பார்த்து பொறாமைப்படலாம்.

7. ஹோண்டா விடிஎக்ஸ் 1800

7. ஹோண்டா விடிஎக்ஸ் 1800

பட்டியலில் 7ம் இடத்தை ஹோண்டா விடிஎக்ஸ் 1800 மோட்டார்சைக்கிள் பெறுகிறது. இந்த மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்ட தருணத்தில், அதிக சிசி கொண்ட பைக் என்ற பெருமையை பெற்றது. இதில், பொருத்தப்பட்டிருக்கும் வி- ட்வின் எஞ்சின் 89 எச்பி பவரையும், 134 என்எம் டார்க்கையும் அளிக்கும்.

 6. ஹார்லி டேவிட்சன்

6. ஹார்லி டேவிட்சன்

உலகம் முழுவதும் மோட்டார்சைக்கிள் பிரியர்களின் கனவு பிராண்டாக விளங்கும் ஹார்லி டேவிட்சனின் சில மாடல்கள் 1,801சிசி எஞ்சினுடன் வருகின்றன. இந்த மோட்டார்சைக்கிள்கள் 156 என்எம் டார்க்கை வழங்கும் வல்லமை கொண்டது.

5. இந்தியன் சீஃப்

5. இந்தியன் சீஃப்

பட்டியலில் 5ம் இடத்தில் இடம்பெற்றிருக்கும் இந்தியன் சீஃப் மோட்டார்சைக்கிளில் 100 பிஎச்பி பவரையும், 139என்எம் டார்க்கையும் வழங்கும் 1,811சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 1953ம் ஆண்டு கடும் நிதி நெருக்கடி சூறாவளியில் சிக்கிய இந்த நிறுவனம் தற்போது போலரிஸ் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

4. ஹோண்டா கோல்டுவிங்

4. ஹோண்டா கோல்டுவிங்

சமீபத்தில் இந்தியாவில் விற்பனைக்கு வந்த ஹோண்டா கோல்டுவிங் மோட்டார்சைக்கிளில் இல்லாத வசதிகளே இல்லை எனலாம். இந்த மோட்டார்சைக்கிளில் 118 எச்பி பவரையும், 167 என்எம் டார்க்கையும் வழங்கும் 1,832சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. ஏர்பேக் பொருத்தப்பட்டு வர்த்தக ரீதியில் விற்பனைக்கு வந்த முதல் மோட்டார்சைக்கிள் மாடல் இது என்பது நினைவுகூறத்தக்கது.

3. யமஹா விஎக்ஸ்1900

3. யமஹா விஎக்ஸ்1900

மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்த வல்லமை பொருத்திய யமஹா மோட்டார்சைக்கிளில் 1,854சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த எஞ்சின் 89 எச்பி பவரை அளிக்கும். மணிக்கு 90 கிமீ முதல் 120 கிமீ வேகத்தில் செல்லும்போது, அதிகபட்சமாக 155 என்எம் டார்க்கையும் வாரி வழங்கும்.

2. கவாஸாகி விஎன் 2000

2. கவாஸாகி விஎன் 2000

இரண்டாம் இடத்தில் கவாஸாகி நிறுவனததின் விஎன் 2000 மோட்டார்சைக்கிள் இடம்பெற்றிருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளில் 103 பிஎச்பி பவரையும், 177என்எம் டார்க்கையும் வழங்கும் 2,053சிசி எஞ்சின் உள்ளது. இதற்கு மேலே ஒரு ஜாம்பவான் இருக்கிறான். அவன் யாரென்று பார்க்க அடுத்த ஸ்லைடுக்கு வாருங்கள்.

1: டிரையம்ஃப் ராக்கெட் - III

1: டிரையம்ஃப் ராக்கெட் - III

இங்கிலாந்தை சேர்ந்த டிரையம்ஃப் நிறுவனத்தின் ராக்கெட்- III மாடல்தான் மிக அதிக சிசி எஞ்சின் கொண்ட மோட்டார்சைக்கிள் மாடல். 2,294சிசி எஞ்சின் கொண்ட இந்த மோட்டார்சைக்கிள் 146 பிஎச்பி பவரையும், 220என்எம் டார்க்கையும் வழங்கும். இதன மஸில் ஸ்ட்ரீட்ஃபைட்டர் என்று டிரையம்ஃப் அழைக்கிறது.

Most Read Articles
English summary
When it comes to performance figures on these big displacement tourers, the torque delivered is what matters more than the horsepower. These motorcycles have enough torque delivered to their rear wheels to move the earth under them.
Story first published: Wednesday, December 10, 2014, 16:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X