உலகின் பிரம்மாண்ட டாப்-10 பேருந்துகள் பற்றிய ஆச்சரியத்தக்க தகவல்கள்..!

பிரம்மிக்க வைக்கும் உலகின் டாப்-10 பிரம்மாண்ட பேருந்துகள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

Written By:

பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் போக்குவரத்து சாதனமாக ரயிலுக்கு அடுத்த நிலையில் இருப்பவை பேருந்துகள் தான்.

இன்னும் சொல்லப்போனால், ரயில் வசதி இல்லாத பல ஊர்களுக்கும் பேருந்து சேவை இருப்பதாலும், நினைத்த நேரத்தில் உடனடியாக சென்று சேர முடிவதாலும் ரயிலை விடவும் பேருந்துகளையே மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.

சராசரியாக நாம் பார்க்கும் பேருந்துகளால் 30 முதல் 45 பயணிகளை தான் ஏற்றிச்செல்ல முடியும். ஆயினும் உலகின் சில வினோதமான அளவுகளில் பேருந்துகள் உள்ளன.

இந்த வினோதமான மற்றும் அளவில் பெரிய பேருந்துகள் பற்றிய டாப்-10 பட்டியலை தான் இந்த தொகுப்பில் நாம் காண இருக்கிறோம். இந்த பட்டியலில் கீழ் இருந்து மேலாக அதாவது 10ல் இருந்து 1 வரை வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

10. நியோபிளான் ஜம்போ க்ரூசர்

இந்த பட்டியலில் முதலில் நாம் பார்க்க இருப்பது ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த நியோபிளான் ஜம்போக்ரூசர் பேருந்து பற்றி தான்.

10. நியோபிளான் ஜம்போ க்ரூசர்

நியோபிளான் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த பேருந்து 18மீட்டர் (60அடி) நீளமும், 2.50 மீட்டர் அகலமும், 4 மீட்டர் உயரமும் கொண்டதாகும். இதன் பின்பகுதியில் டீசல் இஞ்சின் உள்ளது.

10. நியோபிளான் ஜம்போ க்ரூசர்

இது ஒரு மல்டி ஆக்ஸில் டபுள் டெக்கர் பேருந்து ஆகும். டபுள் டெக்கர் என்றால் இரட்டை அடுக்கும் என்பதாகும். இந்த பேருந்தில் மொத்தம் 170 பேர் பயணிக்கலாம்.

10. நியோபிளான் ஜம்போ க்ரூசர்

1975ஆம் ஆண்டு முதல் 1992 ஆம் ஆண்டு வரை தயாரிப்பில் இருந்த இந்த பேருந்துகள் அக்காலகட்டத்தில் மிகவும் பிரம்மாண்ட பேருந்தாக விளங்கியது. இது உலகின் பிரம்மாண்ட பேருந்து என்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

10. நியோபிளான் ஜம்போ க்ரூசர்

பெல்ஜியம் முதல் ஸ்பெயின் வரை சேவையில் இருந்தது இந்த பிரம்மாண்ட பேருந்து பேருந்து. உலகில் இதைப் போன்று ஒன்று மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

9. நோவா பஸ் எல்எஃப்எஸ்

வட அமெரிக்காவைச் சேர்ந்த பிரபலமான நோவா பஸ் நிறுவனத்தினரால் 1995ஆம் ஆண்டு முதல் இந்த மாடல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

9. நோவா பஸ் எல்எஃப்எஸ்

62 அடி நீளம் கொண்ட இந்த பேருந்து மாடல் நியூயார்க் நகர பேருந்து சேவையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

8. நியூ ஃபிளையர் எக்ஸ்டிஈ60

அமெரிக்காவின் மேரிலாண்ட் நகரில் பயணிகள் பயண்பாட்டில் உள்ள இந்த நியூ ஃபிளையர் எக்ஸ்டிஈ60 பேருந்து ஒரு இணைப்பு பேருந்து ஆகும்.

8. நியூ ஃபிளையர் எக்ஸ்டிஈ60

ஆங்கிலத்தில் இந்த வகை Articulated bus என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. ஒரு பேருந்தின் பாடியுடன் மற்றொன்று பேருந்தும் இணைப்பு பெற்றிருக்கும். இந்த வகை பேருந்துகள் தமிழகத்திலும் கூட பயன்பாட்டில் உள்ளது.

8. நியூ ஃபிளையர் எக்ஸ்டிஈ60

நியூ ஃபிளையர் எக்ஸ்டிஈ60 பேருந்து ஒரு ஹைபிரிட் பேருந்தாகும். இதில் டீசல் இஞ்சினுடன் எலக்ட்ரிக் மோட்டார் ஒன்றும் இணைந்து செயல்படுகிறது.

7. வால்வோ 7900 ஹைபிரிட்

உலக அளவில் சொகுசு பேருந்துகளுக்கு பெயர் போன வால்வோ நிறுவனத்தின் பிரம்மாண்ட பேருந்து மாடல் இந்த 7900 ஹைபிரிட் பேருந்தாகும்.

7. வால்வோ 7900 ஹைபிரிட்

154 பேரை ஏற்றிச் செல்லும் கொள்ளளவு கொண்ட இந்த பேருந்து ஒரு ஹைபிரிட் பேருந்து ஆகும். இது 30% எரிபொருள் சிக்கனத்தையும், 50% குறைவான மாசு உமிழ்வையும் கொண்டுள்ளது சிறப்பானதாகும்.

6. ஹெஸ் லைஃஹ் டிராம் 02795

ஸ்விட்சர்லாந்து நகர சாலைகளில் வலம் வரும் இந்த பேருந்தை டிராலி பஸ் என்று அழைக்கின்றனர். இது ஒரு பை-ஆர்டிகுலேட்டட் பேருந்தாகும்.

6. ஹெஸ் லைஃஹ் டிராம் 02795

இந்த பேருந்தில் மூன்று பேருந்துகளின் பாடி இணைப்பு பெற்றிருக்கிறது. இந்த பேருந்தின் மொத்த நீளம் 82அடியாகும். இதில் ஒரே நேரத்தில் 180 பேர் பயணிக்கலாம்.

5. 0530 மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்

சொகுசுக் கார் தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான மெர்சிடிஸ் நிறுவனத்தின் இந்த மாடல் ஐரோப்பிய நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது.

5. 0530 மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்

அங்கு அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் நீளம் கொண்டதாக இந்த மாடல் உள்ளது. இந்த பேருந்தின் மொத்த நீளம் 64 அடியாகும்.

5. 0530 மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்

ஒரே சமயத்தில் 180க்கும் மேற்பட்டவர்கள் பயணிக்கக்கூடிய இந்த பேருந்து 2007 முதல் தயாரிப்பில் உள்ளது.

4. ரேட் இண்டெகிராடா டே டிரான்ஸ்போர்ட்

பிரேசில் நாட்டின் பொதுப்போக்குவரத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் இந்த பேருந்து, வால்வோ மற்றும் மார்கோபோலோ நிறுவனங்கள் இணைந்து தயாரித்த முதல் பேருந்து என்ற பெருமை பெற்றதாகும்.

4. ரேட் இண்டெகிராடா டே டிரான்ஸ்போர்ட்

ஏப்ரல் 5, 2011 முதல் சேவையில் உள்ள இந்த பேருந்து, அக்காலகட்டத்தில் மிகவும் பிரம்மாண்ட பேருந்தாக கருதப்பட்டது. இதன் மொத்த நீளம் 92 அடியாகவும், அகலம் 8.5 அடியாகவும் உள்ளது.

4. ரேட் இண்டெகிராடா டே டிரான்ஸ்போர்ட்

ஒரே நேரத்தில் இந்த பேருந்தில் 250 பேர் வரை பயணிக்கலாம், இந்த பேருந்தின் மற்றொரு சிறப்பு என்னவெனில் இது சோயா மூதல் உற்பத்தி செய்யப்படும் பயோடீசல் மூலம் இயங்குகிறது என்பதே.

3. வேன் ஹூல் ஏஜிஜி300

82 அடி நீளம் கொண்ட இந்த பை-ஆர்டிகுலேட்டட் பேருந்து உலகப்புகழ் பெற்ற வேன் ஹூல் நிறுவனத்தினரால் தயாரிக்கப்பட்டதாகும்.

3. வேன் ஹூல் ஏஜிஜி300

1990களின் தொடக்கத்தில் இந்த வகை பேருந்துகள் பெல்ஜியம் மற்றும் அங்கோலா நாடுகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. பின்னர் இந்த பேருந்துகள் பல நாடுகளிலும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

2. யங்மேன் ஜேஎன்பி 6280ஜி

உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் ஓடும் பேருந்துகள் உலகின் பிற நாடுகளில் உள்ள பேருந்துகளை விட சற்று கூடுதல் பிரம்மாண்டமாகவே உள்ளன.

2. யங்மேன் ஜேஎன்பி 6280ஜி

சீனாவின் உள்நாட்டு தயாரிப்பான இந்த பேருந்தில் 300 பேர் வரை ஒரே நேரத்தில் பயணிக்கலாம். இது வரைமுறையருக்கப்பட்ட அளவைக்காட்டிலும் 13 அடி கூடுதல் நீளம் கொண்டவையாக உள்ளது.

2. யங்மேன் ஜேஎன்பி 6280ஜி

இந்த பேருந்தின் மொத்த நீளம் 82 அடியாக உள்ளது. இதில் 40 பயணிகள் இருக்கையும், 5 கதவுகளும் உள்ளது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 80கிமீ ஆகும்.

1. ஆட்டோ டிராம் எக்ஸ்டிரா கிராண்ட்

உலகின் பிரம்மாண்ட மற்றும் விலையுயர்ந்த பேருந்து என்ற பெருமைமிக்கது ஜெர்மனியைச் சேர்ந்த இந்த பேருந்து.

1. ஆட்டோ டிராம் எக்ஸ்டிரா கிராண்ட்

இந்த பேருந்தின் விலை 8 கோடி ரூபாய்க்கும் சற்று கூடுதலாகும். இந்த காஸ்ட்லி பேருந்தின் மொத்த நீளம் 101அடியாகும்.

1. ஆட்டோ டிராம் எக்ஸ்டிரா கிராண்ட்

இந்த பேருந்து எலக்ட்ரானிக் முறையில் கட்டுப்பட்டுத்தப்படும் கம்ப்யூட்டர் ஸ்டீரிங் சிஸ்டம் கொண்டதாக உள்ளது.

1. ஆட்டோ டிராம் எக்ஸ்டிரா கிராண்ட்

ஆபத்துக்காலத்தில் ஓட்டுநரை எச்சரிக்கும் சிஸ்டமும் இந்த பேருந்தில் பொருத்தப்பட்டுள்ளது. அதிக பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்ததாகவும் இந்த பேருந்து திகழ்கிறது.

உலகின் பிரம்மாண்ட டாப்-10 பேருந்துகள்

இதுவே உலகின் பிரம்மாண்ட பேருந்துகள் குறித்த பட்டியல் ஆகும். மக்கள் தொகையில் இரண்டாவது இடம் வகிக்கும் இந்தியாவில் இந்த பிரம்மாண்ட பேருந்துகள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அதிகம் வாசிக்கப்படும் இதர செய்திகள்...

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Read in Tamil about Worlds biggest buses and their details.
Please Wait while comments are loading...

Latest Photos

LIKE US ON FACEBOOK