விபத்துக்களில் நடந்த. ஆச்சரியம், ஆனால் உண்மை!!

எந்தநேரத்திலும், யாரும் எதிர்பாராத விதத்தில் நிகழும் விபத்துக்களால் உயிர் சேதத்தையும், பொருட் சேதத்தையும் விலையாக கொடுக்க வேண்டியிருக்கின்றன. ஆனால், இங்கே தொகுக்கப்பட்டிருக்கும் சம்பவங்களில் விபத்து ஏற்பட்ட விதமும், அதற்கான காரணமும் வித்தியாசமானவையாக இருக்கிறது.

ஒருவர் விபத்தால் உயிர் பிழைத்தார் என்ற அதிசயமும், பிற சம்பவங்களில் அஜாக்கிரதையும், பதட்டமும் விபத்துக்களை ஏற்படுத்தியதோடு, அதனால் பிறருக்கும் எந்தளவு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை இந்த சம்பவங்கள் மூலம் தெரிந்துகொள்ளாம். மேலும், எதிர்காலத்தில் கார் ஓட்டுவதில் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்கவும் இந்த சம்பவங்கள் பாடம் கற்றுத்தருகின்றன.


விபத்து சம்பவங்கள்

விபத்து சம்பவங்கள்

வித்தியாசமான காரணம் கொண்ட விபத்து சம்பவங்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

ஆர்டிஓ அலுவலகத்துக்குள் புகுந்த கார்

ஆர்டிஓ அலுவலகத்துக்குள் புகுந்த கார்

கடந்த 2010ம் ஆண்டு வாஷிங்டனி நகரின் ஸ்போக்கன் வாலி என்ற இடத்திலுள்ள ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்க வந்தவர் தனது காரை அந்த அலுவலகத்தில் பார்க்கிங் பகுதியில் நிறுத்த முயன்றார். அப்போது கால் தவறி பிரேக்குக்கு பதிலாக ஆக்சிலேட்டரை கொடுத்ததில் அந்த கார் ஓட்டுனர் உரிமம் வழங்கும் அலுவலகத்துக்கு சீறிப்பாய்ந்தது. மேலும், அந்த காரை ஓட்டிவந்தவர் காரிலிருந்து கீழே குதித்து உயிர் தப்பிவிட்டார். போலீசாரும், மீட்புப் படையினரும் விரைந்து வந்து அலுவலகத்தில் இருந்தவர்களை மீட்டனர். இதில் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த அலுவலகம் அன்றைய தினம் மூடப்பட்டது.

பீட்சா சாப்பிட போன கார்

பீட்சா சாப்பிட போன கார்

கடந்த ஆண்டு லிங்கன் பகுதியிலுள்ள பிரபல பீட்சா கடை வாசலில் நின்று கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் தனது ஹோண்டா ஃபிட்(ஜாஸ்)காருக்குள் அமர்ந்தபடி பீட்சா ஆர்டர் செய்துள்ளார். பீட்சா வருவதற்குள் கால் ஆக்சிலேட்டர் பெடல் பகுதியில் சிக்கியது. இதனால், கார் முறுக்கிக் கொண்டு பீட்சா கடையின் வாயில் வழியாக கச்சிதமாக உள்ளே சீறிப் புகுந்ததுவிட்டது. காருக்குள் அதிர்ச்சியில் இருந்த கார் ஓட்டுனரை மீட்புப் படையினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

விபத்தால் தப்பிய உயிர்

விபத்தால் தப்பிய உயிர்

விபத்தால் உயிர்கள் பறிபோவது வழக்கம். ஆனால், இங்கு விபத்தால் உயிர் பிழைந்த டிரக் டிரைவரை பற்றி படிக்க போகிறோம். 2011ம் ஆண்டு அமெரிக்காவில் பேலர் என்ற 55வயது டிரக் டிரைவர் ஒருவர் நெடுஞ்சாலை ஒன்றில் டிரெய்லர் ஒன்றை ஓட்டிச்சென்றார். அப்போது, ஆப்பிள் ஒன்றை கடித்து விழுங்க முயன்றுள்ளார். அது தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறி மயங்கியுள்ளார். அடுத்த வினாடி சாலையின் நடுவில் இருந்த கான்கிரீட் தடுப்பில் டிரெய்லர் மோதி விபத்துக்குள்ளானது. அந்த வேகத்தில் பேலர் தொண்டையில் சிக்கியிருந்த ஆப்பிள் துண்டும் வெளியே வந்து விழுந்துவிட்டது. உடனடியாக, அவர் மீட்புக் குழுவினர் மூலம் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நலம் பெற்றார். இந்த விபத்தால் அந்த நெடுஞ்சாலையில் 5 மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. கான்கிரீட் தடுப்பில் மோதியதால்தான் பேலரின் தொண்டையில் சிக்கியிருந்த ஆப்பிள் துண்டு வெளியே வந்து அவர் உயிர் பிழைத்தார். இதனை போலீசாரும் விசாரணை மூலம் உறுதிப்படுத்தினர்.

போலீஸ் நிலையத்தின் மீது மோதிய திருட்டு வாகனம்

போலீஸ் நிலையத்தின் மீது மோதிய திருட்டு வாகனம்

கடந்த 2012ம் ஆண்டு அமந்தா ஜெஃப்ரிஸ் என்ற 27வயது பெண் ஒரு பிக்கப் டிரக்கை திருடிக் கொண்டு பறந்தார். விபரமறிந்த போலீசார் அவரை பிடிக்க துரத்திச் சென்றனர். அப்போது அந்த பிக்கப் டிரக்கை அருகிலிருந்த போலீஸ் நிலையத்தில் மோதி மாட்டிக் கொண்டார்.

இது எப்படி

இது எப்படி

2007ம் ஆண்டில் மாசாசூட்ஸ் மாகாணத்தில் மேற்கு யார்மவுத் என்ற இ"த்தில் 53வயது பெண் ஒருவர் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தினார். போலீஸ் விசாரணையில் அவரது காருக்குள் காபி கப் உள்ளிட்ட கழிவுப் பொருட்களை ஏற்றி வந்தது தெரியவந்தது. மேலும், பிரேக் போட்டபோது பின்னால் இருந்த காபி கப்புகள் உள்ளிட்ட கழிவுப்பொருட்கள் ஆக்சிலேட்டர் மற்றும் பிரேக் பெடலுக்குள் புகுந்து கொண்டதால் கார் கட்டுப்பாட்டை இழந்ததாக தெரிவித்தார்.

 இவருக்கு நேர்ந்த விபத்து

இவருக்கு நேர்ந்த விபத்து

உட்டா சால்க் லேக் சிட்டியை சேர்ந்த லீ ரெட்மான்ட் என்பவர் அதிக நீளம் கொண்ட விரல் நகங்களை கொண்டதற்காக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தனர். இவருக்கு 28 அடி நீள நகம் இருந்தது. கடந்த 1979ம் ஆண்டு முதல் விரல் நகத்தை வெட்டாமல் இருந்து வந்தார். இந்த நிலையில், 2009ம் ஆண்டு நடந்த கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் படுகாயமடைந்தார். அப்போது அவரது நகங்கள் கடுமையாக சேதமடைந்தது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு பின் உடல் நலம் தேறி வீடு திரும்பிய லீ மான்ட் அதன்பிறகு நகம் வளர்ப்பதில்லை என்று முடிவுக்கு வந்துவிட்டார்.

இந்த கதையை பாருங்க..

இந்த கதையை பாருங்க..

2011ல் ரோல்ஸ்வில்லி போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதியில் 24 வயது இளைஞர் ஒருவர் ஓடும் காரை பிரேக் பிடிக்காமல் காலால் தரையில் தேய்த்து நிறுத்த முயன்றுள்ளார். ஆனால், கார் கட்டுப்பாட்டை இழந்து முன்னே சென்ற 4 கார்கள் மீது மோதி சேதப்படுத்தியது. உடனடியாக அவரை கைது செய்த போலீசார் அவரது ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்தனர். மேலும், அவ்வாறு செய்ததற்கான காரணத்தை நீதிபதி முன்பு தெரிவிக்க வேண்டும் என்று அவருக்கு நோட்டீஸ் அனுப்பினர்.

கன்ஃபியூஸ் ஆயிட்டாரு...

கன்ஃபியூஸ் ஆயிட்டாரு...

பிரேக், ஆக்சிலேட்டர் தெரியாமல் 66வயதான மூதாட்டி ஒருவர் அடுத்தடுத்த இரு தினங்களில் இரு கார் விபத்துக்களை ஏற்படுத்தினார். கடந்த 2012ம் ஆண்டு நடந்த இந்த விபத்துக்களின்போது பிரேக் எது, ஆக்சிலேட்டர் எது என்று குழப்பம் ஏற்பட்டு விபத்தை ஏற்படுத்திவிட்டதாக போலீசாரிடம் தெரிவித்தார். முதல் விபத்தில் மரத்தடுப்புகள் மீது மோதியும், இரண்டாவது நாளில் தடுப்பு சுவர் மீது மோதியும் விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.

திருட்டு காரில் விபத்து

திருட்டு காரில் விபத்து

2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நியூஜெர்ஸியை சேர்ந்த 13வயது நிரம்பிய சிறுவன் ஒருவன் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த டொயோட்டா கேம்ரி காரை திருடிக் கொண்டு சென்றுள்ளார். அப்போது எதிர்திசையில் அவரது தாயார் வருவதை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த சிறுவன் பயத்தில் ஒரு மரத்தில் காரை மோதிவிட்டான். மூக்குடைந்து ரத்தம் வழிய வழிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவன் சில தினங்கள் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினான்.

 அஜாக்கிரதை

அஜாக்கிரதை

கடந்த ஆண்டு ஜார்ஜியாவிலுள்ள கிரேசன் என்ற இடத்தில் நடந்த விபத்து இது. தனது 2வயது குழந்தையை பிக்கப் டிரக்கின் கேபினில் அமரவைத்துவிட்டு பின்னால் இருந்த பொருட்களை ஒருவர் இறக்கியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஹேண்ட் பிரேக்கை குழந்தை எடுத்துவிட்டு விட்டது. இதனால், மெதுவாக அந்த தெருவில் உருண்டோடிய அந்த பிக்கப் டிரக் வழியிலிருந்த தண்ணீர்குழாய், வீட்டு ஜன்னலகள், தடுப்புச்சுவர்களை இடித்து ஒரு வீட்டில் மோதி நின்றது. ஆனால், அதிர்ஷ்டவசமாக குழந்தை தப்பியது.

Via: Oddee.com

Most Read Articles
English summary
Strange accidents occur all over the world, every day. We see these accidents on the news and all over the internet, but some of the strangest accidents that have ever happened can be found in history books. Here are just a few of those strange accidents in history.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X