வித்தியாசமும், வினோதமும் நிறைந்த கார் மாடல்கள்: சிறப்புத் தொகுப்பு

By Saravana

பயன்பாடு, வடிவமைப்பாளரின் எண்ண ஓட்டத்திற்கு ஏற்றவாறு கார்களின் வடிவமைப்பு நாளுக்கு நாள் மாறிவருகிறது. அதில், சிலர் வழமையான வடிவமைப்பு தத்துவத்திலிருந்து மாறுபட்டு, தங்களது எண்ண சிறகை பறக்கவிட்டு உருவாக்கிய சில வாகன மாடல்கள் வினோதமான தோற்றத்துடன் பார்ப்பவர்களை சிந்திக்கத் தூண்டும்.

சில கார் மாடல்கள் எதிர்காலத்தை மனதில் வைத்து அவர்கள் உருவாக்கியிருப்பதை காண முடியும். அதுபோன்று, வடிவமைப்பு நிபுணர்கள் சிலர் உருவாக்கிய வித்தியாசமான கான்செப்ட் கார் மற்றும் இதர கார் மாடல்களை ஸ்லைடரில் காணலாம்.


1.,ஸ்டவுட் ஸ்கராப்

1.,ஸ்டவுட் ஸ்கராப்

அமெரிக்காவை சேர்ந்த பிரபல வாகன வடிவமைப்பு நிபுணர் வில்லியம் ஸ்டவுட் வடிவமைத்த கார் மாடல் இது. இவர் விமான துறையிலும் பிரபலமாக அறியப்படுவர். முதல்முறையாக விமானப் பயணத்தில் பணிப்பெண்கள் மற்றும் உணவு வழங்கும் முறையையும் அறிமுகம் செய்தவர். சொகுசு அம்சங்களுக்கு முன்னுரிமை தரும் இவரது கைவண்ணத்தில் உருவான மாடலை படத்தில் காணலாம். இவர் ஃபோர்டு நிறுவனத்திலும் அதிகாரியாக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Picture credit: larrysphatpage

 2. 1942 ஆயிஃப் எலக்ட்ரிக்

2. 1942 ஆயிஃப் எலக்ட்ரிக்

முட்டை வடிவத்தில் இருக்கும் இந்த கார் மூன்று சக்கர வாகனம் பேட்டரியில் இயங்கும் எலக்ட்ரிக் கார். ரயில் எஞ்சின் வடிவமைப்பு நிபுணராகவும், ஓவியராகவும் இருந்த பால் ஆர்ஸென்ஸ் இந்த காரை வடிவமைத்தவராவார். அலுமினியம் மற்றும் பிளெக்ஸி கண்ணாடியால் இந்த காரை வடிவமைத்து அப்போதைய ஆட்டோமொபைல் உலகை திரும்பி பார்க்க வைத்தார்.

1947 நார்மன் டிம்ப்ஸ் ஸ்பெஷல்

1947 நார்மன் டிம்ப்ஸ் ஸ்பெஷல்

மிகவும் வித்தியாசமான வடிவமைப்பு கொண்ட இந்த காரை இண்டி ரேஸ் கார் வடிவமைப்பு பொறியாளர் டிம்ப்ஸ் உருவாக்கிய மாடல் இது. புயிக் ஸ்ட்ரெயிட் 8 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. அக்கால ஆட்டோமொபைல் துறையினரால் சிலாகித்து பேசப்பட்டது இதன் வித்தியாசமான வடிவமைப்பு.

Picture credit: Peter Eimon via Flickr

1953 ஜெனரல் மோட்டார்ஸ் ஃபயர்பேர்டு ஐ எக்ஸ்பி- 21

1953 ஜெனரல் மோட்டார்ஸ் ஃபயர்பேர்டு ஐ எக்ஸ்பி- 21

போர் விமானத்திற்கு ஒப்பாக இன்றைய சூப்பர் கார்களின் செயல்திறனை போற்றுவதுண்டு. ஆனால், இந்த கார் போர் விமானத்தின் வடிவமைப்பிலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது. காக்பிட் டிசைன் கூட அசல் போர் விமானத்தை போன்ற இருப்பதை காணலாம். இந்த காரின் எஞ்சின் ஒரு நிமிடத்திற்கு 26,000 முறை சுழலும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கார் 370 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன்கொண்டது.

5. 1955 கிறைஸ்லர் ஸ்ட்ரீம்லைன் எக்ஸ் கில்டா

5. 1955 கிறைஸ்லர் ஸ்ட்ரீம்லைன் எக்ஸ் கில்டா

இத்தாலியை சேர்ந்த கியா என்ற நிறுவனம் வடிவமைத்த கில்டா காரில் 1.5 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

 6. உருமாறிய ஃபெராரி

6. உருமாறிய ஃபெராரி

1970ம் ஆண்டு ஜெனீவா மோட்டார் ஷோவுக்காக ஃபெராரி 512எஸ் மோடுலோ காரின் சேஸீயில் வித்தியாசமான பாடியை பொருத்தி அசத்தியவர் டிசைனர் பாவ்லோ மார்ட்டின்.

7. 1970 லான்சியா ஸ்ட்ராடோஸ் எச்எஃப் ஸீரோ

7. 1970 லான்சியா ஸ்ட்ராடோஸ் எச்எஃப் ஸீரோ

தரையிலிருந்து இந்த கார் வெறும் 33 இஞ்ச் மட்டுமே உயரம் கொண்டது. வைன்ட்ஷீல்டை தூக்கிவிட்டுதான் ஓட்டுனர் உள்ளே செல்ல முடியும்.

8. 2001 பிஎம்டபிள்யூ கினா லைட் விஷனரி

8. 2001 பிஎம்டபிள்யூ கினா லைட் விஷனரி

பிஎம்டபிள்யூவின் டிசைன் பிரிவு இயக்குனர் கிறிஸ் பேங்கிள் எண்ணத்தில் உருவான கான்செப்ட் மாடல்.

9. 1935 புகாட்டி டைப்57எஸ் காம்படிஷன் கூபே ஏரோலித்

9. 1935 புகாட்டி டைப்57எஸ் காம்படிஷன் கூபே ஏரோலித்

1935ம் ஆண்டு பாரீஸ் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்ட மாடல் இது.

Picture credit: Peter Eimon via Flickr

10. 1932 ஃபோர்டு ஸ்பீட்ஸ்டெர்

10. 1932 ஃபோர்டு ஸ்பீட்ஸ்டெர்

இந்த காரில் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. ஹென்றி ஃபோர்டின் மகன் எட்செல் ஃபோர்டு மற்றும் டிசைனர் யூஜின் கிரிகோரி உருவாக்கிய மாடல் இது.

Most Read Articles
English summary
We are listed out top 10 bizzre cars ever designed. Have a look.
Story first published: Tuesday, January 20, 2015, 12:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X