இந்திய சந்தையில் தாக்குபிடிக்க முடியாமல் தோல்யுற்ற கார் மாடல்கள்!

By Saravana

விற்பனை எண்ணிக்கையை வைத்து கார்களின் வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்படுவது வழக்கம். ஆனால், வேறு சில காரணங்களாலும் சில சிறந்த கார் மாடல்களும் தோல்வியை சந்தித்திருக்கின்றன. அது நல்ல காராக இருந்தாலும், விற்பனையை வைத்து தோல்வியுற்ற மாடலாக கருத வேண்டிய நிர்பந்தம் ஏற்படுவது துரதிருஷ்டம்.

அதுபோன்று, இந்தியாவில் சில காரணங்களால் தோல்வி கண்ட கார் மாடல்களை இந்த செய்தித் தொகுப்பில் தொகுத்து வழங்கியுள்ளோம். தோல்வி என்றவுடன் அது சிறந்த கார் மாடல் இல்லை என்று கணக்குப்போட்டுவிட வேண்டாம். தரமான கார்களும் வேறு சில காரணங்களால் தோல்வியை தழுவிய மாடல்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது.


காரணங்கள் பல...

காரணங்கள் பல...

விற்பனையில் குறைந்து போவதற்கு பல காரணங்கள் உள்ளன. தயாரிப்பாளரின் விற்பனைக்கு பிந்தைய சேவை, தரமின்மை, பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்ட காரணங்களால் சில கார் மாடல்கள் தோல்வியை தழுவியுள்ளன. சில தரமான கார் மாடல்கள் தயாரிப்பாளர் அல்லது வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாமல் தோல்வியை தழுவியுள்ளன. அந்த கார் மாடல்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

1. பீஜோ 309: [1994 - 1997]

1. பீஜோ 309: [1994 - 1997]

பீஜோ 309 கார் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட சிறந்த வெளிநாட்டு மாடல்களில் ஒன்று. இந்த காரில் 70 பிஎச்பி பவரையும், 110 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 57 பிஎச்பி பவரையும், 97 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல்களில் விற்பனை செய்யப்பட்டது. இந்த காரை விற்பனை செய்த பிரிமியர் ஆட்டோமொபைல் நிறுவனத்தின் சேவை குறைபாடுகள், டீலர் நெட்வொர்க் ஆகியவை இந்த கார் மாடலை தோல்வியுறச் செய்தது. எனவே, சில ஆண்டுகளில் இந்த கார் இந்திய மார்க்கெட்டிலிருந்து வெளியேறியது.

2. மாருதி பலேனோ அல்டூரா - [1999 - 2007]

2. மாருதி பலேனோ அல்டூரா - [1999 - 2007]

மாருதியின் பலேனோ பெர்ஃபார்மென்ஸ் விரும்பிகளுக்கான மாடலாக திகழ்கிறது. இதன் எஸ்டேட் வேகன் மாடலாக விற்பனை செய்யப்பட்ட அல்டூரா, அதற்கு நேர்மாறாக பெரும் தோல்வியை சந்தித்தது. இந்த காரில் 94 பிஎச்பி பவரையும், 130 என்எம் டார்க்கையும் வழங்கும் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் இருந்தது.

3. ஒபெல் வெக்ட்ரா - [2003 - 2005]

3. ஒபெல் வெக்ட்ரா - [2003 - 2005]

செவர்லே பிராண்டுக்கு முன்பாக அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஒபெல் பிராண்டு கார்களை விற்பனை செய்தது. அதில், ஒபெல் வெக்ட்ராவும் ஒன்று. இந்த காரில் 146 பிஎச்பி பவரையும், 203 என்எம் டார்க்கையும் வழங்கும் 2.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் இருந்தது. இந்த காரை ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் இறக்குமதி செய்து விற்பனை செய்ததால், விலை மிக அதிகம். அதைவிட, பராமரிப்பு செலவும் எக்கச்சமாக இருந்தது. மைலேஜும் இல்லையென்பதால், இந்தியர்கள் இந்த காரை சீக்கிரமே பேக்கப் செய்து அனுப்பிவிட்டனர்.

4. செவர்லே எஸ்ஆர்வி- [2006 - 2009]

4. செவர்லே எஸ்ஆர்வி- [2006 - 2009]

மிக வித்தியாசமான டிசைன் கொண்ட ஹேட்ச்பேக் மாடலாக பெரிய எதிர்பார்ப்புடன் ஜெனரல் மோட்டார்ஸ் அறிமுகம் செய்த மாடல். இந்த காரில் 100 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க்கையும் வழங்கும் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருந்தது. ஆனால், எஸ்ஆர்வி வெகு சீக்கிரமாகவே இந்தியாவில் ஜோலியை முடித்துக் கொண்டு கிளம்பிவிட்டது. இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட 100 பிஎச்பி பவர் கொண்ட அதிசக்திவாய்ந்த ஹேட்ச்பேக் மாடல்களில் இதுவும் ஒன்று. சிறந்த பெர்ஃபார்மென்ஸ் கொண்ட இந்த மாடலின் விலைதான் இந்த காரின் தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது.

5.ஃபோர்டு ஃபியூஷன் - [2006- 2010]

5.ஃபோர்டு ஃபியூஷன் - [2006- 2010]

ஃபோர்டு ஃபிகோவுக்கு முன்னர் விற்பனை செய்யப்பட்ட ஃபோர்டு ஃபியூஷன் காரில் 101 பிஎச்பி பவரை அளிக்கும் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 68 பிஎச்பி பவரை அளிக்கும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருந்தது. ஃபியஸ்ட்டா பிளாட்ஃபார்மில் வடிவமைக்கப்பட்ட இந்த கார் ஓர் மினி எம்பிவி காரை போன்ற டிசைன் கொண்டது. இந்த டிசைன் வாடிக்கையாளர்களை கவரவில்லை என்பதுடன், ஃபோர்டு நிறுவனத்தின் உதிரிபாகங்கள் விலை மற்றும் சர்வீஸ் நெட்வொர்க்கும் இந்த கார் மீது ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை.

6. டாடா சுமோ கிராண்ட்- [2008 முதல்...]

6. டாடா சுமோ கிராண்ட்- [2008 முதல்...]

சுமோ எஸ்யூவிக்கு ஊரக மார்க்கெட்டுகளில் கிடைத்த வரவேற்பை பார்த்து மற்றொரு மாடலாக சுமோ கிராண்ட் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரில் 118 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க்கையும் வழங்கும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு உள்ளது. டாடா சுமோ கிராண்ட் வர்த்தக மார்க்கெட்டில் ஓரளவு விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்தது. ஆனால், தனி நபர் மார்க்கெட்டில் படு மோசமான நிலையை பெற்றது. கடந்த ஆண்டு இந்த காரை மோவஸ் என்று பெயர் மாற்றம் செய்து டாடா மோட்டார்ஸ் வெளியிட்டது. இந்த காரின் டிசைன்தான் இந்த காருக்கு மிகப் பெரிய மைனஸ்.

 7. ஸ்கோடா ஃபேபியா - [2008 - 2013]

7. ஸ்கோடா ஃபேபியா - [2008 - 2013]

ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் கீழ் செயல்படும் செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் தயாரிப்புகளின் தரம் பெருமையாக பேசப்பட்டாலும், அந்த பேச்சு வர்த்தகத்துக்கு உதவவில்லை. அந்த நிறுவனத்தின் ஹேட்ச்பேக் மாடலான ஸ்கோடா ஃபேபியா காரில் 75 பிஎச்பி மற்றும் 85 பிஎச்பி பவரையும் அளிக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடல்களிலும், 68 பிஎச்பி பவரையும், 155 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனிலும் விற்பனை செய்யப்பட்டது. தரமான கட்டமைப்பு கொண்ட இந்த கார் மாடல் தோல்வியுற்றதற்கு தயாரிப்பாளரான ஸ்கோடாவின் விற்பனைக்கு பிந்தைய சேவை, உதிரிபாகங்கள் விலை மற்றும் காரின் விலை ஆகியவை முக்கிய காரணமாக அமைந்தது. இதனால், நம்பர் கேமில் ஃபேபியா பின்தங்கியது. மேலும், கடைசி கட்டத்தில் இந்தியாவில் ஒவ்வொரு காரையும் ரூ.1.5 லட்சம் நஷ்டத்திற்கு விற்பனை செய்வதாக ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் தெரிவித்தது. அத்துடன் உற்பத்தியையும் நிறுத்திக் கொண்டது. சமீபத்தில் புதிய ஸ்கோடா ஃபேபியா மாடல் வெளியிடப்பட்டாலும், அதனை இந்தியா கொண்டு வருவது குறித்த எந்த தகவலும் இல்லை.

8. சுஸுகி கிசாஷி - [2011 -2014]

8. சுஸுகி கிசாஷி - [2011 -2014]

பட்ஜெட் கார்களுக்கு பெயர் பெற்ற மாருதி தன்னிடம் ஒரு பிரிமியம் மாடலாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தாய் நிறுவனமான சுஸுகி நிறுவனத்தின் கிசாஷி செடான் காரை இந்தியாவில் விற்பனை செய்து வந்தது. இந்த காரில் 175 பிஎச்பி பவரையும், 230 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் 2.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருந்தது. ஆனால், சிறிய கார் மார்க்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் மாருதிக்கு பிரிமியம் கார் மார்க்கெட்டில் பாட்சா பலிக்கவில்லை. டீசல் எஞ்சின் இல்லாதது, இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு விற்பனை செய்தது உள்ளிட்ட பிரச்னைகளால் இந்திய மார்க்கெட்டிலிருந்து வெளியேறியது.

9. மஹிந்திரா குவான்ட்டோ

9. மஹிந்திரா குவான்ட்டோ

காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்ட்டில் இருக்கும் வர்த்தக வாய்ப்புகளை பார்த்து அவசரமாக ஸைலோவை கத்தரி போட்டு மஹிந்திரா நிறுவனம் களமிறக்கிய மாடல்தான் குவான்ட்டோ. இந்த காம்பேக்ட் எஸ்யூவியில் 100 பிஎச்பி பவரையும், 240 என்எம் டார்க்கையும் வழங்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. சிறந்த செயல்திறன் மிக்க எஞ்சின், நல்ல மைலேஜ் இருந்தாலும், தோற்றத்தில் நம் நாட்டு வாடிக்கையாளர்களை கவரவில்லை. இதனால், விற்பனையிலும் எதிர்பார்த்த இலக்குகளை பெற முடியாமல் தோல்வி மாடலாக மாறிவிட்டது குவான்ட்டோ. குவான்ட்டோவை மேம்படுத்தி அறிமுகம் செய்யவும், புதிய காம்பேக்ட் எஸ்யூவிகளை அறிமுகம் செய்வதில் தற்போது மஹிந்திரா முனைப்பு காட்டி வருகிறது.

10. மஹிந்திரா வெரிட்டோ வைப்

10. மஹிந்திரா வெரிட்டோ வைப்

மஹிந்திரா வெரிட்டோ செடான் காரை நாட்ச்பேக் மாடலாக மாற்றி வெரிட்டோ வைப் என்ற பெயரில் மஹிந்திரா அறிமுகம் செய்தது. ஆனால், அவலட்சணமான தோற்றத்தை பெற்றதால் வாடிக்கையாளர்களை கவரவில்லை. விற்பனையில் சிறிய எண்ணிக்கையை வைத்துக் கொண்டு காலம் தள்ளி வருகிறது. வாடிக்கையாளர்கள் தவிர்க்கும் மாடல்களின் பட்டியலில் இந்த காரையும் போட்டுவிடலாம்.

உங்கள் கருத்து

உங்கள் கருத்து

இந்த பட்டியலில் இடம்பெறாமல் இந்திய மார்க்கெட்டில் தோல்வியை தழுவிய மாடல்கள் அல்லது நீங்கள் தோல்வியடைந்த மாடலாக கருதும் கார் மாடல்கள் குறித்த தகவல்களை கருத்துப் பெட்டியில் பகிர்ந்து கொள்ளலாம்.

Most Read Articles
English summary
We take a look at 10 cars that have failed to make an impression in the country's automobile market over the years. That some of these cars saw poor success came as a surprise even to industry experts-let's get right into the (black)list.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X