பட்ஜெட் காருக்கு தேவையான 10 அத்தியாவசியமான ஆக்சஸெரீகள்!

By Saravana

கார் வாங்கும்போது பட்ஜெட்டை கருதி சிலர் பேஸ் மாடல்களை தேர்வு செய்கின்றர். போதிய வசதிகளை தரும் வேரியண்ட்டைவிட பேஸ் மாடலின் விலை கைக்கு எட்டுவதாக அமைவதுதான் இதற்கு காரணம்.

இருப்பினும், மிட் வேரியண்ட் மற்றும் டாப் வேரியண்ட்டில் இருக்கும் வசதிகளை பேஸ் மாடலிலேயே பெறுவதற்கான வசதிகள் தற்போது டீலர்களில் செய்து தரப்படுகின்றன. வசதி, விருப்பம் மற்றும் பட்ஜெட்டை பொறுத்து இந்த கூடுதல் ஆக்சஸெரீகளை டீலர்களில் பொருத்தித் தரப்படுகிறது.

பெரும்பாலான கார்களின் பேஸ் மாடல்களில் ஏசி, பவர் ஸ்டீயரிங் மட்டுமே நிரந்தர அம்சங்களாக வழங்கப்படுகின்றன. அவை தவிர்த்து, கார் வாங்கிய பின்னர் வாங்கி பொருத்திக் கொள்ளக்கூடியதும், அத்தியாவசியமாக தேவைப்படுவதுமான கார் முக்கிய கார் ஆக்சஸெரீகளை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

1.ரிமோட் லாக்கிங் சிஸ்டம்

1.ரிமோட் லாக்கிங் சிஸ்டம்

தற்போது பெரும்பாலான கார்களில் இந்த வசதி கொடுக்கப்படுகிறது. ஆனால், பேஸ் மாடல்கள் மற்றும் பட்ஜெட் கார் மாடல்களில் இந்த வசதி இருக்காது. ஆனால், இதனை கூடுதல் ஆக்சஸெரீயாக பொருத்திக் கொள்ளலாம். காரின் பாதுகாப்புக்கு சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம் உதவுகிறது. மேலும், அதன் நவீன வசதியாக ரிமோட் கன்ட்ரோல் நுட்பம் மூலம் காரின் சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டத்தை பூட்டித் திறக்கும் வசதிதான் ரிமோட் லாக்கிங். தூரத்திலிருந்து கூட காரை பூட்டித் திறக்க முடிவதோடு, பெரிய பார்க்கிங் லாட்டுகளில் கார் எளிதாக கண்டுபிடிப்பதற்கும் இந்த வசதி உதவும். காரை பூட்டும்போதும், திறக்கும்போது இன்டிகேட்டர்கள் ஒளிர்வதும், எச்சரிக்கை ஒலி எழுப்புவதன் மூலம் எளிதாக கார் நிற்கும் இடத்தை கண்டறியலாம். இதிலும் தற்போது நவீன வசதியாக கீ லெஸ் என்ட்ரி வருகிறது. பாக்கெட்டில் சாவி இருந்தால் போதும். காருக்கு மிக நெருக்கமாக வரும்போது கார் திறந்துகொள்ளும். காரில் ரிமோட் சென்ட்ரல் லாக்கிங் வசதியை பெறுவதற்கு ரூ.3,000 வரை செலவாகும். வெளி மார்க்கெட்டில் ஆட்டோகாப் உள்ளிட்ட நிறுவனங்களின் ரிமோட் லாக்கிங் சிஸ்டம் சிறந்ததாக இருக்கின்றன.

2. நேவிகேஷன் சிஸ்டம்

2. நேவிகேஷன் சிஸ்டம்

தற்போது மிக அத்தியாவசியமான கார் ஆக்சஸெரீகளில் நேவிகேஷன் சிஸ்டம் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. செல்லுமிடத்திற்கு மிக துல்லியமாக, யாருடைய துணையும் இல்லாமல் செல்வதற்கு நேவிகேஷன் சிஸ்டம் உதவுகிறது. மேலும், அருகிலுள்ள பெட்ரோல் நிலையங்கள், மருத்துவமனைகள், ஓட்டல்கள், பொழுதுபோக்கு மையங்களை பற்றிய விபரங்களையும் இந்த நேவிகேஷன் சிஸ்டம் மூலம் பெற முடியும். ரூ.5,000 விலை முதல் மேப்மை இந்தியா உள்ளிட்ட பிராண்டுகளின் நேவிகேஷன் சிஸ்டம்கள் கிடைக்கின்றன.

3.மியூசிக் சிஸ்டம்

3.மியூசிக் சிஸ்டம்

காரில் எது இருக்கிறதோ இல்லையோ, மியூசிக் சிஸ்டம் இல்லாமல் இருப்பதை நினைக்க முடியாது. ஆரம்ப வேரியண்ட்டுகளில் மியூசிக் சிஸ்டம் கொடுக்கப்படுவதில்லை. அதற்காக வருந்த வேண்டியதில்லை. உங்களுக்கு தோதான பட்ஜெட்டில், சிறந்த ஆடியோ சிஸ்டத்தை காரில் பொருத்திக் கொள்ள முடியும். ரூ.5,000 விலையிலிருந்து ஆடியோ சிஸ்டம்கள் கிடைக்கின்றன. வசதிகளுக்கு தகுந்தாற்போல் லட்சங்களில் கூட மியூசிக் சிஸ்டத்தை வாங்கி பொருத்திக் கொள்ளலாம். ஆனால், விபரமறிந்த உங்களது நண்பர்களிடம் மியூசிக் சிஸ்டம் காம்பினேஷனை தெரிந்து வாங்கி அசெம்பிள் செய்வது சிறப்பான ஒலி துல்லியத்தை பெற வழிவகுக்கும்.

4.ரியர் பார்க்கிங் சென்சார்

4.ரியர் பார்க்கிங் சென்சார்

காரை பின்புறமாக நகர்த்தும்போது பின்னால் இருக்கும் பொருட்கள் கண்ணுக்கு தெரியாது. இதனால், விபத்துக்கு வழிகோலும் ஆபத்து இருக்கிறது. எனவே, பின்னால் இருக்கும் பொருட்கள் குறித்து எச்சரிக்கை செய்யும் விதத்தில் பயன்படும் சாதனம்தான் பார்க்கிங் சென்சார். மிக பயனுள்ள இந்த பார்க்கிங் சென்சார்கள் ரூ.4,000 முதல் கிடைக்கின்றன.

5.ஃபுல் வீல் கவர்

5.ஃபுல் வீல் கவர்

அலாய் வீல்கள் இல்லாமல் ஸ்டீல் வீல்களுடன் வரும் கார்களில் ஃபுல் வீல் கவர் பொருத்துவது காரின் தோற்றத்திற்கு கூடுதல் மதிப்பை தரும். ரூ.1,500 விலை முதல் வீல் கவர்கள் கிடைக்கின்றன. சில ஃபுல் வீல் கவர்கள் அலாய் வீல் தோற்றத்தை வழங்குவதாக இருக்கும்.

6.சீட் கவர்

6.சீட் கவர்

காரின் இருக்கைகள் பயன்படுத்தும்போது அழுக்கடைவதற்கான வாய்ப்புகள் அதிகமிருக்கின்றன. இதை தவிர்ப்பதற்காக கூடுதலாக சீட் கவர் போட்டுவிடுவது அவசியம். ரூ.2,500 முதல் சிறந்த சீட் கவர்கள் மார்க்கெட்டில் கிடைக்கின்றன.

7.மிதியடிகள்

7.மிதியடிகள்

காலணிகளால் காரின் தரைப்பகுதி அழுக்கடைவதை தவிர்க்கும் விதத்தில், மிதியடிகள் பயன்படுத்துவது அவசியம். ரப்பர் மற்றும் ரெக்ஸின் மிதியடிகள் பயன்பாட்டை பொருத்து வாங்கிக்கொள்ளலாம். அனைத்து கால நிலைகளுக்கும் பொருத்தமான மிதியடிகளை வாங்குவது நல்லது. ரூ.1,000 விலை முதல் சிறந்த மிதியடிகள் கிடைக்கின்றன.

8. புளுடூத் கார் கிட்

8. புளுடூத் கார் கிட்

காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மொபைல்போன், ஹெட்போன் ஆகியவற்றை வயர்லெஸ் முறையில் இணைத்து பல்வேறு வசதிகளை பெறுவதற்கு துணைபுரியும் சாதனம் இது. கார் ஓட்டும்போது வயர்லெஸ் முறையில் மொபைல்போனில் அழைப்புகளை செய்வதற்கும், பெறுவதற்கும் புளுடூத் வசதி வரப்பிரசாதமாக அமைந்திருகக்கிறது. ஹேட்போன், காரின் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், மொபைல்போன் ஆகிய அனைத்தையும் வயர்லெஸ் முறையில் இணைத்து வசதிகளை பெறுவதற்கு இந்த புளுடூத் கார் கிட் பேருதவி புரியும். ரூ.2,000 விலை முதல் புளுடூத் கார் கிட் கிடைக்கிறது.

9.பனி விளக்குகள்

9.பனி விளக்குகள்

பனிக்காலங்களில் ஹெட்லைட் ஒளியின் பிரகாசம் தரையில் போதுமான அளவு பார்வை திறனை வழங்காது. எனவே, காரின் பம்பர் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் பனி விளக்குகள் மூலமாக தரைப் பகுதியை தெளிவாக காண முடியும். ஆரம்ப நிலை வேரியண்ட்டுகளில் பனி விளக்குகளை டீலர்களில் அல்லது வெளிச்சந்தையில் வாங்கி பொருத்திக் கொள்ளலாம். ரூ.2,500 விலை முதல் பனி விளக்குகள் கிடைக்கின்றன.

 10.லம்பார் சப்போர்ட்

10.லம்பார் சப்போர்ட்

நீண்ட நேரம் காரை ஓட்டும்போதும், அமர்ந்து செல்லும்போதும் முதுகுப் பகுதியில் தசைப்பிடிப்பு மற்றும் வலி ஏற்படும். இதனை தவிர்ப்பதற்காக கிடைக்கும் லம்பார் சப்போர்ட் சற்று நிவாரணம் தரும். மேலும், வசதியாக அமர்ந்து ஓட்டுவதற்கும் இது உதவியாக இருக்கும்.

வெளிச்சந்தையிலும்...

வெளிச்சந்தையிலும்...

கார் டீலர்கள் மட்டுமின்றி, வெளிச்சந்தையிலும் கார் ஆக்சஸெரீகள் கைக்கு ஏதுவான விலையில் கிடைக்கின்றன. எனவே, பட்ஜெட்டை பொறுத்து உங்களுக்கு தேவையான ஆக்சஸெரீகளை வாங்கி ஒவ்வொன்றாக கூட பொருத்திக் கொள்ள முடியும்.

Most Read Articles
English summary
Here are given top 10 essential Accessories for Budget Cars.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X