உலகின் அதிவேக போர் விமானங்கள்... லிஸ்ட்ல நம்ம விமானம் ஒண்ணுகூட இல்லைங்க!

Written By:

தரைப்படை, கடற்படை போன்றவை எதிரி நாடுகளுக்குள் புகுந்து இலக்குகளை அழிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஏவுகணைகள் இருந்தாலும், எதிரி நாடுகளில் உள்ள ராணுவ தளம், ஆயுத கிடங்கு போன்ற முக்கிய இலக்குகளை பொதுமக்களுக்கு இடையூறு அதிகம் இல்லாமல் குறி வைத்து அழிப்பது என்பது சவாலான காரியமே. இதற்கு தீர்வான உருவாக்கப்பட்டவைதான் போர் விமானங்கள். மேலும், எதிரிநாடுகளுக்குள் புகுந்து போர் விமானத்தை பயன்படுத்தி தாக்குவதிலும் நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன.

எதிரி நாட்டு ராணுவ ரேடார்கள், ஏவுகணைகளை மீறி தாக்குதல் நடத்துவம் சிரமம்தான். அதற்கு ஏதுவாக மிக அதிவேகத்தில் பறக்கும் திறனுடன், எளிதாக வளைந்து நெளிந்து தப்பிக்கும் வகையில் பிரத்யேக அம்சங்களுடன் உருவாக்கப்பட்ட முக்கிய ராணுவ ஆயுதம்தான் போர் விமானங்கள். ஆம், இந்த விமானங்கள் குறைந்தது மேக் 2.0 [ஒரு மேக் என்பது மணிக்கு 1,194 கிமீ வேகம்] வேகத்தில் பறக்கும் திறன் கொண்டதாக தயாரிக்கப்படுகின்றன. அதில், இதுவரை தயாரிக்கப்பட்ட விமானங்களில் மிக அதிவேகத்தில் செல்லும் திறன் கொண்ட உலகின் டாப் 10 அதிவேக போர் விமானங்கள் குறித்த தகவல்களை தொடர்ந்து படிக்கலாம்.

10. சுகோய் எஸ்யூ- 27

அதிகபட்ச வேகம்: மேக் 2.35

ரஷ்ய தயாரிப்பான இந்த போர் விமானம் அமெரிக்காவின் எஃப்-15 போர் விமானத்துக்கு இணையானதாக கருதப்படுகிறது. அதிகபட்சமாக மேக் 2.35 வேகத்தில் பறக்கும். 1985ல் அறிமுகம் செய்யப்பட்ட இந்த விமானம் அமெரிக்காவின் எஃப் 14 டாம்கேட் போர் விமானத்துக்கு போட்டியாக இறக்கப்பட்டது. இதுவரை 800 விமானங்கள் உற்பத்தி செய்யப்பட்டிருக்கின்றன. ரஷ்யா, அங்கோலா, இந்தோனேஷியா, உக்ரைன், எத்தியோபியா ஆகிய நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது.

 

09. ஜெனரல் டைனமிக்ஸ் எஃப்-111

அதிகபட்ச வேகம்: மேக் 2.5

அதிவேகம் மட்டுமில்லை, தாக்குதல் திறன் அடிப்படையிலும் இவை பல்வேறு ரகத்தில் உருவாக்கப்படுகின்றன. அந்த வகையில், குண்டு வீச்சு பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த விமானம். அமெரிக்காவின் ஜெனரல் டைனமிக்ஸ் நிறுவனம் தயாரித்தது. தற்போது பயன்பாட்டில் இல்லை. அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பயன்பாட்டில் இருந்தது.

08. மெக்டெனல் டக்ளஸ் எஃப் 15 ஈகிள்

அதிகபட்ச வேகம்: 2.5 மேக்

அனைத்து சீதோஷ்ண நிலைகளிலும் சிறப்பாக செயல்படும். 1972ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது போயிங் நிறுவனத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படுகிறது. வளைந்து நெளிந்து பறந்து தப்புவதில் அசகாய சூரனாக வர்ணிக்கப்படுகிறது. இதுவும் மேக் 2.5 வேகத்தில் பறக்கும்.

07. மிகோயன் மிக் 31

அதிகபட்ச வேகம்: 2.5 மேக்

அனைத்து சீதோஷ்ண நிலைகளிலும் சிறப்பாக செயல்படும். 1972ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது போயிங் நிறுவனத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படுகிறது. வளைந்து நெளிந்து பறந்து தப்புவதில் அசகாய சூரனாக வர்ணிக்கப்படுகிறது. இதுவும் மேக் 2.5 வேகத்தில் பறக்கும்.

06. மிகோயன் மிக் 25

அதிகபட்ச வேகம்: 2.5 மேக்

ஃபாக்ஸ்பேட் என்ற செல்லப்பெயரில் அழைக்கப்படும் இந்த போர் விமானமும் ரஷ்ய தயாரிப்புதான். இந்த விமானம் பிரத்யேக துருப்பிடிக்காத ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் உலோக கட்டுமானத்தில் தயாரிக்கப்பட்டது. மேக் 2.85 வேகத்தில் பறக்கும். 1964ல் அறிமுகம் செய்யப்பட்டு, 1970ல் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

05. எக்ஸ்பி-70 வல்கைரி

அதிகபட்ச வேகம்: மேக் 3.0

பொதுவாக போர் விமானங்கள் அதிவேகத்திலும், எளிதாக தப்புவதற்கு வசதியாக இலகு எடை கொண்டதாக இருக்கும். ஆனால், இந்த விமானம் 2,40,000 கிலோ எடைகொண்டது. இந்த விமானத்தில் 6 எஞ்சின்கள் துணையுடன் வேக பிரச்னையை எளிதாக சமாளிக்கிறது. இந்த விமானம் அணுகுண்டு தாக்குதலின்போது ஏற்படும் அதிக வெப்ப நிலை பகுதிகளில் கூட மேக் 3.0 வேகத்தில் பறக்கும். ரஷ்யா அணுகுண்டு தாக்குதல் நடத்தினால் எளிதாக தப்பும் விதத்தில் இந்த விமானத்தை அமெரிக்கா தயாரித்தது. இரண்டு விமானங்கள் தயாரிக்கப்பட்டது. இப்போது பயன்பாட்டில் இல்லை.

04.பெல் எக்ஸ்2 ஸ்டார்பஸ்டர்

அதிகபட்ச வேகம்: மேக் 3.0

இது அதிவேக போர் விமானத்திற்கான மாதிரி மாடலாக உருவாக்கப்பட்டது. 1945ம் ஆண்டு காலத்தில் தயாரிக்கப்பட்ட இந்த போர் விமானம் மேக் 2 முதல் மேக் 3 வேகத்தில் செலுத்துவதற்கான அடிப்படை ஆராய்ச்சிக்காக உருவாக்கப்பட்டது. இந்த விமானமும் மேக் 3.0 வேகத்தில் பறக்கும். நாங்க எல்லாம் அப்பவே அப்படி என்று சொல்ல வைக்கிறது இந்த விமானத்தின் வேகம்.

03. லாக்ஹீட் ஒய்எஃப்-12

அதிகபட்ச வேகம்: மேக் 3.0

எதிரி விமானங்களை இடைமறித்துதாக்கும் தாக்கும் ரகத்தை சேர்ந்தது. அமெரிக்க விமானப்படையில் பயன்பாட்டில் உள்ளது. லாக்ஹீட் நிறுவனத்தின் ஏ-12 உளவு விமானத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட போர் விமான மாடல். 74,000 அடி உயரத்தில் மேக் 3.2 வேகத்தில் பறக்கும்.மொத்தமே மூன்று விமானங்கள்தான் தயாரிக்கப்பட்டன.

02. லாக்ஹீட் எஸ்ஆர்71 பிளாக்பேர்டு

அதிகபட்ச வேகம்: மேக் 3.0+

இதுவும் லாக்ஹீட் ஏ12 உளவு விமானத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது. மொத்தமே 32 பிளாக்பேர்டு விமானங்களை தயாரிக்கப்பட்டன. துரதிருஷ்டவசமாக 12 விமானங்கள் விபத்தில் சிக்கி இழக்கப்பட்டுவிட்டது. இதுவும் மேக் 3.0 வேகத்தை தாண்டி பறக்கும்.

01. நார்த் அமெரிக்கன் எக்ஸ்-15

அதிகபட்ச வேகம்: மேக் 6.72

உலகின் அதிவேக போர் விமான மாடல் இதுதான். மேக் 6.72 என்ற அதிகபட்ச வேகத்தை எட்டும் வல்லமைகொண்டது. இரண்டு ராக்கெட் எஞ்சின்கள் பொருத்தப்பட்ட போர் விமான மாடல். தற்போது ஒற்றை எஞ்சின் கொண்டதாக மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

வாசகர்கள் படித்துவரும் மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள்...

மேலும்... #ராணுவம் #military
Story first published: Friday, September 30, 2016, 15:23 [IST]
English summary
Here are the top 10 fastest aircraft in the world. Read in Tamil.
Please Wait while comments are loading...

Latest Photos