உலகின் அதிவேக படகுகள்... அசரடிக்கும் வைக்கும் வேகம்!

மோட்டார் உலகத்தின் தொழில்நுட்பங்களின் வல்லமையை காட்டுவதில் வாகனங்களின் வேகம் என்பது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனாலும், தண்ணீரில் செல்லும் வாகனங்களின் வேகம் என்பது பிற போக்குவரத்துகளை காட்டிலும் குறைவானதாகவே இருந்து வருகிறது.

இந்தநிலையில், தொழில்நுட்ப வல்லமையின் உச்சமாக சில நீர்வழி போக்குவரத்து சாதனங்கள் வியக்க வைக்கும் வேகம் கொண்டதாக தயாரிக்கப்பட்டிருக்கின்றன. அந்த விதத்தில், வெவ்வேறு வகையில் உலகின் அதிவேகமான 10 படகுகளை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

10. சோவியத் கே-222

10. சோவியத் கே-222

உலகின் மிக அதிவேகமான நீர்மூழ்கி கப்பல் என்ற பெருமையை சோவியத் கே-222 பெறுகிறது. மிகவும் உறுதியான டைட்டானியம் உலோகத்தால் ஆன உடல்பாகத்தை பெற்றிருக்கிறது. இந்த நீர்மூழ்கி கப்பலில் 177 மெகாவாட் மின் திறன் கொண்ட அணுஉலைகள் மூலமாக தண்ணீர் வெப்பப்படுத்தப்பட்டு கிடைக்கும் நீராவி மூலமாக இயங்கும் ஸ்டீம் டர்பைன் எஞ்சின்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இந்த எஞ்சின்கள் 80,000 குதிரைசக்தி திறன் கொண்டது.

இந்த அணுசக்தி நீர்மூழ்கி கப்பலில் 82 பணியாளர்கள் இருக்க முடியும். மேலும், எதிரி கப்பல்களை நோக்கி ஏவுவதற்கான 22 ஏவுகணைகள் இந்த கப்பலில் உள்ளன. அதிகபட்சமாக மணிக்கு 82.78 கிமீ வேகத்தில் செல்லும் வல்லமை கொண்டது. இதுவரை தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி கப்பல்களில் இதுவே மிக அதிக வேகம் செல்லும் திறன் கொண்டதாக கருதப்படுகிறது. 1968ம் ஆண்டில் சோவியத் யூனியன் கடற்படையில் சேர்க்கப்பட்டு, 1989ம் ஆண்டு சேவையிலிருந்து விலக்கப்பட்டுவிட்டது.

09. எச்சிஎம்எஸ் பிராஸ் D'Or 400

09. எச்சிஎம்எஸ் பிராஸ் D'Or 400

உலகின் அதிவேக போர்க்கப்பல் என்ற பெருமைக்குரியது எச்சிஎம்எஸ் பிராஸ் டி ஓஆர் 400. டெலிபோனை கண்டுபிடித்தவரும், புதுமையான கண்டுபிடிப்புகளுக்கு பெயர் போன அலெக்ஸான்டர் கிரஹாம் பெல் இதுபோன்ற அதிவேக கப்பல்களை உருவாக்குவதற்கான தொழில்நுட்ப யோசனைகளை 20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் தெரிவித்திருந்தார். அவரை பெருமைப்படுத்தும் விதமாகவே, அவரது பிறந்த தீவின் பெயர் வைக்கப்பட்டது.

ஹைட்ரோஃபாயில் என்ற ரகத்தில் வடிவமைக்கப்பட்ட கப்பல் இது. இந்த டர்போபேன்கள் மூலமாக கப்பல் தண்ணீர் பரப்பிலிருந்து சற்றே மேலே தொட்டுக் கொண்டு செல்லும். இதன்மூலம், தண்ணீருடனான இழுவை பிணைப்பு குறைந்து அதிவேகத்தில் செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கிரது. சோதனை ஓட்டங்களின்போது மணிக்கு 117 கிமீ வேகத்தில் சென்று சாதனை படைத்தது. இன்று வரை இந்த சாதனைகளை முறியடிக்கப்படவில்லை. அதேநேரத்தில், இந்த கப்பலின் பராமரிப்பு செலவு, தயாரிப்பு செலவு அதிகமாகிக் கொண்டே போனதால், ஆயுதங்கள் பொருத்தப்படாமல் சேவையிலிருந்து விலக்கப்பட்டது. மேலும், கனடாவிலுள்ள கப்பல்சார் பொருட்களின் அருங்காட்சியகத்தில் காட்சி பொருளாகிவிட்டது. இதற்கடுத்து, மணிக்கு 110 கிமீ வேகத்தில் செல்லும் திறன் வாய்ந்த நார்வே நாட்டின் Skjold-class corvettes என்ற போர்க்கப்பல் அதிவேக போர்க்கப்பல் என்ற பெருமைக்குரியது. ஆயுதங்கள் முழுமையாக பொருத்தப்பட்ட போர்க்கப்பல் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

08. வெஸ்டாஸ் செயில்ராக்கெட் 2

08. வெஸ்டாஸ் செயில்ராக்கெட் 2

உலகின் அதிவேக பாய்மர படகு என்ற பெருமையை பெற்றிருப்பது வெஸ்டாஸ் செயில்ராக்கெட் 2 என்ற படகுதான். முற்றிலும் நவீன தொழில்நுட்பத்திலும், கட்டுமானத்திலும் உருவாக்கப்பட்டிருக்கிறது. டச்சு நாட்டை சேர்ந்த வெஸ்டாஸ் நிறுவனத்தின் ஸ்பான்சரில் உருவான இந்த படகின் சாதனை வியக்க வைக்கிறது.

ஆம், எஞ்சின் இல்லாமல் பாய்மரத்தின் உதவியுடன் செல்லக்கூடிய இந்த படகு அதிகபட்சமாக மணிக்கு 125.95 கிமீ வேகத்தில் சென்று சாதனை படைத்திருக்கிறது. கடல் காற்றின் வேகத்தை சிறப்பாக பயன்படுத்தி வெறும் 500 மீட்டருக்குள் இந்த வேகத்தை எட்டியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

07. அதிவேக உல்லாச படகு

07. அதிவேக உல்லாச படகு

The World is Not Enough என்ற பெயரை கேட்டவுடன் ஜேம்ஸ்பாண்ட் படம்தான் பலருக்கு நினைவுக்கு வரும். ஆனால், அதே பெயரில் தயாரிக்கப்பட்ட இந்த படகுதான் உலகின் அதிவேக உல்லாச படகு. அமெரிக்காவிலுள்ள மில்லெனியம் சூப்பர்யாட் நிறுவனம் தயாரித்த இந்த படகு 2004ம் ஆண்டு உரிமையாளரிடம் டெலிவிரி கொடுக்கப்பட்டது. 10 விருந்தினர்கள் இந்த படகில் தங்கலாம்.

சகல வசதிகளுடன் கூடிய இந்த உல்லாச படகில் 5,300 எச்பி பவரை அளிக்க வல்ல இரண்டு பேக்ஸ்மேன் டீசல் எஞ்சின்களும், 4,700 எச்பி பவரை அளிக்க வல்ல 2 லேலண்ட் டீசல் எஞ்சின்களும் உள்ளன. மணிக்கு 129.64 கிமீ வேகத்தில் செல்லும் வல்லமை கொண்டது.

06. சிகரெட் ஏஎம்ஜி எலக்ட்ரிக் டிரைவ் கான்செப்ட்

06. சிகரெட் ஏஎம்ஜி எலக்ட்ரிக் டிரைவ் கான்செப்ட்

உலகின் அதிவேக மின்சார படகு என்ற பெருமையை ஏஎம்ஜி நிறுவனத்தின் இந்த கான்செப்ட் மாடல் படகு பெறுகிறது. சிகரெட் ரேஸிங் கூட்டணியுடன் சேர்ந்து மெர்சிடிஸ் பென்ஸ் பல சக்திவாய்ந்த படகு மாடல்களை வெளியிட்டு இருக்கிறது. ஆனால், இந்த படகின் மாதிரி மாடல் மின்சார மோட்டார்களில் இயங்கும் சக்திவாய்ந்த மாடல் என்பதே சிறப்பு. மெர்சிடிஸ் ஏஎம்ஜி நிறுவனத்தின் எஸ்எல்எஸ் எலக்ட்ரிக் காரின் தாத்பரியங்களை மனதில் வைத்து இதனை உருவாக்கியிருக்கின்றனர்.

இந்த அதிவேக மின்சார படகில் 2,220எச்பி பவரை வழங்க வல்ல 12 மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. மணிக்கு 161 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது. தரையில் மட்டுமல்ல, கடலிலும் சீறுவதில் மெர்சிடிஸ் ஏஎம்ஜி பிராண்டு பிரபலமானது என்பதை இந்த படகும் பரைசாற்றுகிறது.

 05. உலகின் அதிவேக மிதவை படகு

05. உலகின் அதிவேக மிதவை படகு

இந்த மிதவை படகுகள் தற்காலிக பாலம் போல பயன்படுத்தப்படுகின்றன. ஏரோடைனமிக்ஸ் தாத்பரியம் எல்லாம் இதில் பார்க்க முடியாது என்தால் வேகம் என்பது இவற்றிருக்கு சாதாரணமான விஷயம்தான். ஆனால், இதிலும் வேகத்தை காட்டுவதற்காக உருவாக்கப்பட்ட மிதவையின் பெயர் பிராட் ரோலண்ட் சவுத் பே 925சிஆர் ஆகும். இந்த மிதவை படகு மணிக்கு 211.128 கிமீ வேகத்தில் பறந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

 04. ஸ்பிரிட் ஆஃப் கத்தார்

04. ஸ்பிரிட் ஆஃப் கத்தார்

உலகின் அதிவேக தெப்பம் என்ற பெருமைக்குரியது ஸ்பிரிட் ஆஃப் கத்தார். 9,000 எச்பி பவரை அளிக்க வல்ல டர்பைன் எஞ்சினுடன் மணிக்கு 392.624 கிமீ வேகத்தில் சென்று சாதனை படைத்தது. அதாவது, நினைத்து பார்த்திராத வேகத்தில் இந்த தெப்பம் தண்ணீரை கிழித்து சென்று பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியது.

03. அதிவேக ஹைட்ரோ பிளேன்

03. அதிவேக ஹைட்ரோ பிளேன்

உலகின் அதிவேக பந்தய நீர் விமானம் என்ற பெருமையை பிராப்ளம் சைல்டு பெற்றிருக்கிறது. ரேஸ் கார்கள் போன்றே தண்ணீரில் செல்லும் ரேஸ் காராக இதனை எடுத்துக் கொள்ளலாம். 8,000 எச்பி பவரை அளிக்க வல்ல ஹெமி வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த நீர் விமான படகு மணிக்கு 485.224 கிமீ வேகத்தை தொட்டு சாதனை படைத்துள்ளது.

02. புளூபேர்டு கே7

02. புளூபேர்டு கே7

இது சாதாரண வகை உலகின் அதிவேக நீர் விமானம். 1955 முதல் 1964ம் ஆண்டு வரை 7 முறை உலகின் அதிவேக சாதனையை படைத்திருக்கிறது. கடைசி முறையின்போது மணிக்கு 511.152 கிமீ வேகத்தை தொட்டு மிரள வைத்தது. ஆனால், 1967ம் ஆண்டில் மணிக்கு 300 மைல் [555கிமீ] வேகம் என்ற இலக்குடன் செலுத்தப்பட்டபோது துரதிருஷ்டவசமாக இந்த படகு விபத்தில் சிக்கி, இதனை இயக்கிய பைலட் டொனால்டு கேம்ப்பெல் மரணமடைந்தார்.

01. ஸ்பிரிட் ஆஃப் ஆஸ்திரேலியா

01. ஸ்பிரிட் ஆஃப் ஆஸ்திரேலியா

உலகின் அதிவேக படகு என்ற பெருமையை ஸ்பிரிட் ஆஃப் ஆஸ்திரேலியா பெறுகிறது. கென் வார்பி என்பவரால் தயாரிக்கப்பட்ட இந்த படகு 1978ம் ஆண்டில் துமுத் ஆற்றில் வைத்து அதிவேக சோதனை சாதனை நிகழ்த்தப்பட்டது. மணிக்கு 511.11 கிமீ வேகத்தில் சென்று இந்த படகு சாதனை படைத்தது. இன்று வரை இந்த படகுதான் உலகின் அதிவேக படகு என்ற பெருமையை தக்க வைத்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது சிட்னி நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் இந்த படகு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

ரோட்டில் மட்டுமல்ல கடலிலும் சீறும் கார் நிறுவனங்கள்!

ரோட்டில் மட்டுமல்ல கடலிலும் சீறும் கார் நிறுவனங்கள்!

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Top 10 Fastest Boats in The World. Read the complete details in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X