உலகின் அதிவேகமான டாப் 10 கார்கள்: நம்பர் 1 இடத்தில் இருப்பது யார்?

By Saravana

விரைவான போக்குவரத்துக்காக உருவாக்கப்பட்ட வாகனங்கள் ஆரம்ப கட்டத்தில் நடராஜாவுக்கு இணையான வேகத்தில்தான் இருந்தன. ஆட்டோமொபைல் துறையின் படிப்படியான வளர்ச்சி காரணமாக, இன்று மணிக்கு 400 கிமீ வேகத்தை தொட வல்ல கார்கள் சந்தையில் கிடைக்கிறது.

இந்த நிலையில், அதிகபட்ச வேகத்தின் அடிப்படையில் உலகின் அதிவேகமான டாப் 10 சூப்பர் கார்களை இந்த செய்தித் தொகுப்பில் வழங்கியிருக்கிறோம். இதில், உங்கள் அபிமான அல்லது கனவு கார் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை இந்த பட்டியலை வைத்து தெரிந்துகொள்ளலாம்.

10. கும்பர்ட் அப்போலோ

10. கும்பர்ட் அப்போலோ

டாப் ஸ்பீடு: மணிக்கு 359 கிமீ வேகம்

10வது இடத்தில் கும்பர்ட் அப்போலோ சூப்பர் கார் உள்ளது. இந்த காரில் இருக்கும் இரட்டை டர்போசார்ஜர்கள் பொருத்தப்பட்ட 4.8 லிட்ர் வி8 எஞ்சின் ஆடி நிறுவனத்திடம் இருந்து சப்ளை பெறப்படுகிறது. அதிகபட்சமாக 641 பிஎச்பி பவரை வெளிக்கொணரும். இந்த கார் 0 -100 கிமீ வேகத்தை வெறும் 3.1 வினாடிகளில் எட்டிவிடும்.

09. நோபுள் எம்600

09. நோபுள் எம்600

டாப் ஸ்பீடு: மணிக்கு 362 கிமீ வேகம்

கடந்த 2010ம் ஆண்டு குட்வுட் ஆஃப் ஸ்பீடு விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட இங்கிலாந்து நாட்டு தயாரிப்பு. இந்த காரில் இருக்கும் இரட்டை டர்போசார்ஜர்கள் கொண்ட 4.4 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 650 பிஎச்பி பவரை அளிக்கும். 0 - 100 கிமீ வேகத்தை 3 வினாடிகளில் தொட்டுவிடும்.

08. ஸென்வோ எஸ்டி1

08. ஸென்வோ எஸ்டி1

டாப் ஸ்பீடு: மணிக்கு 375 கிமீ வேகம்

ஸ்வீடன் நாட்டு தயாரிப்பான ஸென்வோ எஸ்டி1 சூப்பர் கார் 8வது இடத்தில் உள்ளது. இந்த சூப்பர் காரில் இருக்கும் டர்போசார்ஜர் மற்றும் சூப்பர்சார்ஜர் கொண்ட 6.8 லிட்டர் வி8 எஞ்சின் 1,100 பிஎச்பி பவரையும், 1,430 என்எம் டார்க் திறனையும் வாரி இறைக்கும் வல்லமை கொண்டது. இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 3 வினாடிகளில் எட்டிவிடும்.

07. மெக்லாரன் எஃப்1

07. மெக்லாரன் எஃப்1

டாப் ஸ்பீடு: மணிக்கு 386 கிமீ வேகம்

அறிமுகம் செய்யப்பட்டபோது, உலகின் அதிவேக தயாரிப்பு நிலை கார் என்ற பெருமையை பெற்றது. இந்த காரில் டர்போசார்ஜர் இல்லாத 6.2 லிட்டர் வி12 எஞ்சின் உள்ளது. அதிகபட்சமாக 618 பிஎச்பி பவரை அளிக்க வல்லது. இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 3.2 வினாடிகளில் எட்டிவிடும். மொத்தமாகவே 106 கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டன.

06. கோனிக்செக் சிசிஎக்ஸ்

06. கோனிக்செக் சிசிஎக்ஸ்

டாப் ஸ்பீடு: மணிக்கு 395 கிமீ வேகம்

இந்த காரில் இருக்கும் இரட்டை டர்போசார்ஜர்கள் கொண்ட 4.7 லிட்டர் வி8 எஞ்சின் அதிகபட்சமாக 1018 பிஎச்பி பவரை அளிக்கும் வல்லமை கொண்டது. இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 3.2 வினாடிகளில் எட்டிவிடும். மொத்தமாக 49 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டன.

05. சலீன் எஸ்7 ட்வின் டர்போ

05. சலீன் எஸ்7 ட்வின் டர்போ

டாப் ஸ்பீடு: மணிக்கு 399 கிமீ வேகம்

இந்த பட்டியலில் 5வது இடத்தில் சலீன் எஸ்7 கார் உள்ளது. இந்த காரில் இருக்கும் இரட்டை டர்போசார்ஜர் கொண்ட 7.0 லிட்டர் வி8 எஞ்சின் அதிகபட்சமாக 750 பிஎச்பி பவரை அளிக்க வல்லது. இந்த கார் 0 -100 கிமீ வேகத்தை வெறும் 2.8 வினாடிகளில் எட்டிவிடும்.

04. எஸ்எஸ்சி அல்டிமேட் ஏரோ

04. எஸ்எஸ்சி அல்டிமேட் ஏரோ

டாப் ஸ்பீடு: மணிக்கு 412 கிமீ வேகம்

2006ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டபோது, உலகின் அதிவேக கார் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தது. இந்த காரில் இருக்கும் 6.4 லிட்டர் இரட்டை டர்போசார்ஜர் கொண்ட வி8 எஞ்சின் அதிகபட்சமாக 1183 பிஎச்பி பவரை அளிக்க வல்லது. நிறுவனத்தின் தகவலின்படி, அதிகபட்சமாக 437 கிமீ வேகத்தை தொட வல்லதாக தெரிவிக்கப்பட்டது.

 03. கோனிக்செக் அகெரா ஆர்

03. கோனிக்செக் அகெரா ஆர்

டாப் ஸ்பீடு: மணிக்கு 418 கிமீ வேகம்

இந்த காரில் இருக்கும் டர்போசார்ஜர் கொண்ட 5.0 லிட்டர் வி8 எஞ்சின் அதிகபட்சமாக 1124 பிஎச்பி பவரை அளிக்க வல்லது. இந்த கார் 0 -100 கிமீ வேகத்தை வெறும் 2.8 வினாடிகளில் எட்டிவிடும். நிறுவனத்தின் தகவலின்படி, 439 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது. இந்த கார் 6 உலகின் அதிவேக சாதனைகளை படைத்த பெருமைக்குரியது. இந்த கார் 0 - 300 கிமீ வேகத்தை 14.53 வினாடிகளில் எட்டிவிடும்.

 02. ஹென்னிஸி வேனோம் ஜிடி

02. ஹென்னிஸி வேனோம் ஜிடி

டாப் ஸ்பீடு: மணிக்கு 435 கிமீ வேகம்

இந்த கார் உலகின் அதிவேக கார் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த கார் லோட்டஸ் எக்ஸியேஜ் சேஸீயில் கட்டமைக்கப்பட்டது. இந்த காரில் இருக்கும் 7.0 லிட்டர் வி8 எஞ்சின் அதிகபட்சமாக 1,244 பிஎச்பி பவரை அளிக்க வல்லது. 0 - 300 கிமீ வேகத்தை வெறும் 13.63 வினாடிகளில் எட்டிவிடும்.

 01. புகாட்டி சிரோன்

01. புகாட்டி சிரோன்

டாப் ஸ்பீடு: மணிக்கு 463 கிமீ வேகம்

இந்த கார் மணிக்கு 420 கிமீ வேகம் வரை செல்லும் வேக வரம்புடன் கட்டுப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த காரில் இருக்கும் டர்போசார்ஜர்கள் துணையுடன் இயங்கும் 8.0 லிட்டர் டபிள்யூ16 எஞ்சின் அதிகபட்சமாக 1,500 பிஎச்பி பவரை அளிக்க வல்லது. 0 - 100 கிமீ வேகத்தை 2.4 வினாடிகளில் எட்டிவிடும். தற்போது உலகின் அதிவேக தயாரிப்பு நிலை கார் என்ற பெருமையை பெற்றிருக்கிறது.

புகாட்டி வேரான்

புகாட்டி வேரான்

டாப் ஸ்பீடு: 408.84 கிமீ வேகம்

அறிமுகம் செய்யப்பட்டபோது உலகின் அதிவேக தயாரிப்பு நிலை கார் என்ற பெருமையை பெற்றதுடன், மணிக்கு 430.9 கிமீ வேகத்தை தொட்டு சாதனை படைத்தது. இந்த காருக்கு மாற்றாக தற்போது புகாட்டி சிரோன் கார் விற்பனைக்கு வந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

டாப் 10 சூப்பர் பைக்குகள்!

டாப் 10 சூப்பர் பைக்குகள்!

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Here are top 10 fastest cars in the world.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X