உலகின் டாப் - 10 அதிவேக எலக்ட்ரிக் கார்கள்!

By Saravana

பெட்ரோல், டீசல் கார்களை போன்று எலக்ட்ரிக் கார்கள் பெர்ஃபார்மென்ஸ் இருக்காது என்ற கருத்து இருக்கிறது. மைலேஜ் மற்றும் கார்பன் புகை வெளியிடாது என்ற அடிப்படையிலேயே எலக்ட்ரிக் கார்களுக்கு முன்னுரிமை தரப்படுகிறது என்ற கருத்து நிலவுகிறது.

இதனை தவிடுபொடியாக்கிடும் வகையில், சில நிறுவனங்கள் அதிவேக எலக்ட்ரிக் கார் மாடல்களை உருவாக்கி அசர வைத்துள்ளன. பெட்ரோல், டீசலில் இயங்கும் கார்களுக்கு இணையான டாப்ஸ்பீடு மற்றும் ஆக்சிலரேசன் நம்பர்கள் மூலம் நம்மை கிறங்கடிக்கும் எலக்ட்ரிக் கார் மாடல்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.


பட்டியல்

பட்டியல்

ஆக்சிலரேஷன், டாப்ஸ்பீடு என இரண்டிலும் கலக்கலான உலகின் அதிவேக எலக்ட்ரிக் கார் விபரங்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

10. தெஸ்லா ரோட்ஸ்டெர் ஸ்போர்ட்

10. தெஸ்லா ரோட்ஸ்டெர் ஸ்போர்ட்

தெஸ்லா மாடல் எஸ் எலக்ட்ரிக் செடான் காருக்கு முன்னதாக விற்பனையில் இருந்த தெஸ்லா ரோட்ஸ்டெர் ஸ்போர்ட் காரின் செயல்திறன் வியக்க வைப்பதாக இருக்கின்றன. இது ஓர் எலக்ட்ரிக் காரா என்று ஆட்டோமொபைல் நிபுணர்களை வியக்க வைத்த மாடல் இது. ஆம். இந்த கார் 0- 97 கிமீ வேகத்தை 3.9 வினாடிகளில் எட்டும் வல்லமை கொண்டது. அதிகபட்சமாக மணிக்கு 201 கிமீ வேகத்தில் செல்லும். ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 393 கிமீ தூரம் வரை செல்லும் என்பது இதன் சிறப்பு. 1.20 லட்சம் டாலர் விலை கொண்ட இந்த கார் மாடலை 2012ல் உற்பத்தி நிறுத்தப்பட்டது. 2,450 கார்கள் விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

9. டெட்ராய்ட் எலக்ட்ரிக் எஸ்பி: 01

9. டெட்ராய்ட் எலக்ட்ரிக் எஸ்பி: 01

டெட்ராய்ட் எலக்ட்ரிக் நிறுவனத்தின் எலக்ட்ரிக் ரோட்ஸ்டெர் மாடல்தான் எஸ்பி:01. இந்த எலக்ட்ரிக் காரில் 150kW எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கிறது. 201 பிஎச்பி பவரையும், 225என்எம் டார்க்கையும் வழங்க வல்ல இந்த மோட்டார் மூலம் 0 -100 கிமீ வேகத்தை 3.7 வினாடிகளில் இந்த கார் எட்டிவிடும். மணிக்கு 249கிமீ வேகத்தில் திறன் கொண்டது.

8.ரெனோவோ கூபே

8.ரெனோவோ கூபே

மஸில் கார் ரகத்தில் பழமையான டிசைனை நினைவூட்டும் இந்த காரின் மின் மோட்டார் 500 எச்பி பவரை வழங்க வல்லது. இந்த கார் 0 -100 கிமீ வேகத்தை 3.4 வினாடிகளில் எட்டிவிடும். அடுத்த ஆண்டு மார்க்கெட்டுக்கு வர இருக்கிறது. மணிக்கு 193 கிமீ வேகம் வரை செல்லும். இதிலுள்ள குயிக் சார்ஜ் ஆப்ஷம் மூலம் அரை மணிநேரத்தில் முழு சார்ஜ் செய்துவிடும் ஆப்ஷன் உள்ளது.

7. தெஸ்லா மாடல் எஸ்

7. தெஸ்லா மாடல் எஸ்

எலக்ட்ரிக் கார்களுக்கான மகத்துவத்தையும், அந்தஸ்தையும் உணர வைத்த மாடல் இது. உலகின் மிக பாதுகாப்பான கார் மாடல்களில் ஒன்றாக கூறப்படும் தெஸ்லா மாடல் எஸ் காரில் பொருத்தப்பட்டிருக்கும் இரண்டு எலக்ட்ரிக் மோட்டார்கள் இணைந்து 691 எச்பி பவரை அளிக்க வல்லது. 0 -97 கிமீ வேகத்தை 3.2 வினாடிகளில் எட்டிவிடும். அதிகபட்சமாக மணிக்கு 249 கிமீ வேகத்தில் செல்லும் வல்லமை கொண்டது.

6. ட்ரேசன் ரேஸிங்

6. ட்ரேசன் ரேஸிங்

லிமிடேட் எடிசன் ரோட்ஸ்டெர் மாடலான இந்த கார் லீமான்ஸ் 24 ஹவர்ஸ் பந்தயத்துக்கு ஏற்ற வகையிலான வடிவமைப்பு கொண்டது. பெட்ரோல் எஞ்சின் மாடலான இதனை ஓர் முழுமையான எலக்ட்ரிக் காராக மாற்றியுள்ளனர். 850 எச்பி பவரை அளிக்கும் மின் மோட்டார் கொண்ட இந்த கார் 0 -97 கிமீ வேகத்தை 3.0 வினாடிகளில் எட்டிவிடும். அதிகபட்சமாக மணிக்கு 321 கிமீ வேகத்தில் பறக்கும் வல்லமை கொண்டது.

 5. ஸ்பார்க் - ரெனோ எஸ்ஆர்டி_01E

5. ஸ்பார்க் - ரெனோ எஸ்ஆர்டி_01E

எலக்ட்ரிக் கார்களுக்கான ஃபார்முலா - 1 பந்தயத்துக்காக ரெனோ வடிவமைத்த எலக்ட்ரிக் ரேஸ் கார். 0- 100 கிமீ வேகத்தை 3.0 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 225 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.

4.ரைட்ஸ்பீடு எக்ஸ்1

4.ரைட்ஸ்பீடு எக்ஸ்1

இது ஏரியல் ஆட்டம் காரல்லவோ என்று கேட்கத்தோன்றுகிறதா? ஆம், இது ஏரியல் ஆட்டம் கார்தான். ஆனால், அதிலிருக்கும் பெட்ரோல் எஞ்சினை கழற்றிவிட்டு ரைட்ஸ்பீடு நிறுவன எஞ்சினியர்கள் ஓர் முழுமையான எலக்ட்ரிக் காராக மாற்றியுள்ளனர். 0 - 96 கிமீ வேகத்தை இந்த கார் வெறும் 2.9 வினாடிகளில் எட்டிவிடும். அதிகபட்சமாக மணிக்கு 167 கிமீ வேகத்தில் செல்லும். ஒருமுறை சார்ஜ் செய்தால் 160 கிமீ தூரம் செல்லலாம்.

Image Credit:Scott Beale via Flickr

3. ரிமாக் கான்செப்ட் ஒன்

3. ரிமாக் கான்செப்ட் ஒன்

இந்த எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் 9.80 லட்சம் டாலர் விலை கொண்டது. இந்த காரில் இருக்கும் மின் மோட்டார் 1,088 எச்பி பவரை அளிக்கும் வல்லமை கொண்டது. 0 -100 கிமீ வேகத்தை 2.8 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 305 கிமீ வேகம் வரை செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிமீ தூரம் வரை பயணிக்கும்.

2. பிளாஸ்மாபாய் ரேஸிங் ஒயிட் ஸாம்பி

2. பிளாஸ்மாபாய் ரேஸிங் ஒயிட் ஸாம்பி

1972 டட்சன் 1200கூபே மாடலில் மாற்றங்களை செய்து பெர்ஃரபார்மென்ஸ் வகை எலக்ட்ரிக் காராக மாற்றியுள்ளனர்.0 -97 கிமீ வேகத்தை வெறும் 1.8 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 207 கிமீ வேகத்தில் செல்லும் என்பதும் மற்றொரு ஆச்சரியம். ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 193 கிமீ தூரம் வரை செல்லலாம்.

1.தி கிரிம்செல்

1.தி கிரிம்செல்

சுவிட்சர்லாந்தை சேர்ந்த எஞ்சினியர் குழுவால் உருவாக்கப்பட்ட இந்த கார் உலகின் அதிவேக ஆக்சிலரேஷன் கொண்ட எலக்ட்ரிக் கார் மாடலாக கூறப்படுகிறது. 0- 97 கிமீ வேகத்தை இந்த கார் வெறும் 1.785 வினாடிகளில் எட்டிவிடும். அதுவும் 30 மீட்டர் தூரத்திற்குள் இந்த வேகத்தை எட்டி சாதனையும் புரிந்துள்ளது.

Most Read Articles
English summary
Electric cars have long since been known for its limited range and being slow. Think again. Here we take a look at the top 10 fastest electric cars in the world 
Story first published: Wednesday, November 26, 2014, 17:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X