இந்தியாவின் 10 அதிவேக ரயில்கள்!

பரந்து விரிந்த நம் நாட்டு போக்குவரத்து தேவையை நிறைவு செய்வதில் ரயில்வே துறை மிக பெரிய பங்கு வகிக்கிறது. ஆனாலும், போக்குவரத்து தேவையையும், கால மாற்றத்தையும் ஒப்பிடும்போது இந்தியாவில் ரயில்களின் வேகம் மெச்சும்படியாக இல்லை.

பல நாடுகள் புல்லட் ரயில்களை விட்டு புளித்த ஏப்பம் விட்டுவிட்ட நிலையில், இப்போதுதான் நம் நாட்டில் புல்லட் ரயில்களை இயக்குவதற்கான முயற்சிகள் முனைப்புடன் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டம் செயல்படுத்தி, புல்லட் ரயில் வருவதற்கு இன்னும் பல ஆண்டுகள் பிடிக்கும் நிலை இருக்கிறது. இந்த நிலையில், தற்போது நம் நாட்டில் இயக்கப்படும் 10 அதிவேக ரயில்களின் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.


நம்ம நாட்டு புல்லட் ரயில்கள்

நம்ம நாட்டு புல்லட் ரயில்கள்

மணிக்கு 581 கிமீ வேகத்தில் செல்லும் ரயிலை ஜப்பான் சோதனை செய்துவிட்டது. ஆனால், நம் நாட்டில் மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்லும் இந்தியாவின் அதிவேக ரயிலின் சோதனை ஓட்டம் ஜூலை மாதம் வெற்றிகரமாக நடந்தது. இந்த ஆறுதலான விஷயத்தோடு, இந்தியாவின் 10 அதிவேக ரயில்களின் விபரங்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

1. போபால் சதாப்தி எக்ஸ்பிரஸ்

1. போபால் சதாப்தி எக்ஸ்பிரஸ்

1988ம் ஆண்டு சேவையை துவங்கிய புதுடெல்லி- போபால் இடையே இயக்கப்படும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்தான் இந்தியாவின் அதிவேக ரயிலாக குறிப்பிடப்படுகிறது. 703 கிமீ தூரத்தை 8 மணி 7 நிமிடங்களில் கடக்கிறது. இதன் சராசரி வேகம் மணிக்கு 91 கிமீ. இந்த ரயில் டெல்லி- ஆக்ரா இடையிலான தடத்தில் அதிகபட்சமாக மணிக்கு 160 கிமீ வேகத்தில் இயக்கப்படுகிறது.

2. டெல்லி- சியல்டா

2. டெல்லி- சியல்டா

மேற்குவங்க தலைநகர் கோல்கட்டாவிலுள்ள சியல்டாவிலிருந்து நாட்டின் தலைநகர் டெல்லிக்கு இயக்கப்படும் துரந்தோ ரயில் இந்தியாவின் அதிவேக ரயில்களில் ஒன்றாகும். 1458 கிமீ தூரத்தை 17 மணிநேரத்தில் கடக்கிறது. இதன் சராசரி வேகம் மணிக்கு 97.13 கிமீ என்து குறிப்பிடத்தக்கது.

Picture credit: V Malik via Wiki Commons

3. மும்பை ராஜ்தானி

3. மும்பை ராஜ்தானி

1972ம் ஆண்டில் சேவையை துவங்கிய டெல்லி- மும்பை இடையிலான ராஜ்தானி உயர்வகுப்பு ரயில் இந்தியாவின் இரண்டாவது அதிவேக ரயிலாக குறிப்பிடப்படுகிறது. டெல்லி- மும்பை இடையிலான 1,385 கிமீ தூரத்தை 19.05 மணி நேரத்தில் கடக்கிறது. இதன் சராசரி வேகம் மணிக்கு 90.46 கிமீ என்று தெரிவிக்கப்படுகிறது.

Picture credit: V Malik via Wiki Commons

 4. கான்பூர் சதாப்தி

4. கான்பூர் சதாப்தி

2009ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட டெல்லி- கான்பூர் இடையிலான கான்பூர் ரிவர்ஸ் சதாப்த எக்ஸ்பிரஸ் ரயில் அதிவேக ரயில்களில் ஒன்றாகும். டெல்லி- கான்பூர் இடையிலான 441 கிமீ தூரத்தை 4 மணி 44 நிமிடங்களில் கடக்கிறது. இதன் சராசரி வேகம் மணிக்கு 89.63 கிமீ என்பது குறிப்பிடத்தக்கது.

Picture credit: abhinavnfr via Flickr

 5. கோல்கட்டா ராஜ்தானி

5. கோல்கட்டா ராஜ்தானி

டெல்லி- கோல்கட்டா இடையிலான ராஜ்தானி ரயிலும் அதிவேக ரயில்களில் ஒன்று. 1969ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த ரயில்தான் இந்தியாவின் முதல் ராஜ்தானி ரயிலாகும். 1,445 கிமீ தூரத்தை 17 மணி 20 நிமிடங்களில் கடக்கிறது. முதல்முறையாக வைஃபை இன்டர்நெட் சேவை அறிமுகம் செய்யப்பட்ட ரயில் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. இது சராசரியாக மணிக்கு 88.21 கிமீ வேகத்தில் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

Picture credit: Smeet Chowdhury via Flickr

 6. ஹவுரா துரந்தோ

6. ஹவுரா துரந்தோ

டெல்லி- கோல்கட்டா இடையிலான ஹவுரா துரந்தோ இடைநில்லா ரயில் இந்தியாவின் அதிவேக ரயில்களின் பட்டியலில் 6வது இடத்தில் உளளது. கிழக்கு ரயில்வே பிராந்தியம் சார்பில் இயக்கப்படும் இந்த அதிவேக ரயில் 1,441 கிமீ தூரத்தை 17 மணி 10 நிமிடங்களில் கடக்கிறது. சராசரியாக மணிக்கு 87.06 கிமீ வேகத்தில் செல்கிறது.

Picture credit: Wiki Commons

7.அலஹாபாத் துரந்தோ

7.அலஹாபாத் துரந்தோ

டெல்லி- அலஹாபாத் இடையிலான இந்த ரயில் 2012ம் ஆண்டு முதல இயக்கப்படுகிறது. 1268 கிமீ தூரத்தை 14 மணி 45 நிமிடங்களில் கடக்கிறது. இந்த ரயில் சராசரியாக மணிக்கு 86.85 கிமீ வேகத்தில் செல்கிறது.

Picture credit: Superfast1111 via Wiki Commons

 8. நிஜாமுதீன்- பந்த்ரா

8. நிஜாமுதீன்- பந்த்ரா

டெல்லியிலுள்ள நிஜாமுதீன் ரயில் நிலையத்திலிருந்து மும்பையின் பந்த்ரா ரயில் நிலையத்திற்க இடையிலான ஏழைகளின் ரதம் ரயில் முழுவதும் குளிர்சாதன வசதி கொண்டது. கடந்த 2005ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த ரயில் பிற குளிர்சாதன வசதி கொண்ட ரயில்களைவிட குறைவான கட்டணத்தில் இயக்கப்படுவதால் அதிக வரவேற்பை பெற்றது. குறைவான கட்டணம்தானே தவிர, டாப்- 10 அதிவேக ரயில்களின் பட்டியலில் இந்த ஏழைகளின் ரதம் எக்ஸ்பிரஸ் இடம்பிடிக்க தவறவில்லை. 1,366 கிமீ தூரத்தை 16 மணி 30 நிமிடங்களில் கடக்கிறது. அதிகபட்சமாக 130 கிமீ வேகம் வரை இந்த ரயில் இயக்கப்படுகிறது.

Picture credit: Akshay gupta via Flickr

 9. டெல்லி- லக்னோ சதாப்தி

9. டெல்லி- லக்னோ சதாப்தி

டெல்லி- லக்னோ இடையில் இயக்கப்படும் சதாப்தி ரயில் டாப்-10 அதிவேக ரயில் பட்டியலில் இடம்பெறுகிறது. ஜெர்மனியிலிருந்து தருவிக்கப்பட்ட பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயில் 513 கிமீ தூரத்தை 6 மணி 15 நிமிடங்களில் கடக்கிறது. இந்த ரயில் சராசரியாக மணிக்கு 85.03 கிமீ வேகத்தில் செல்கிறது.

Picture credit: Vishalkh via Wiki Commons

 சென்னை துரந்தோ

சென்னை துரந்தோ

டாப்-10 பட்டியலில் தென் இந்தியாவிலிருந்து செல்லும் ரயில்கள் இடம்பெறவில்லை. ஆனால், சென்னையிலிருந்து டெல்லியிலுள்ள நிஜாமுதீனுக்கு இயக்கப்படும் துரந்தோ அதிவிரைவு ரயில்தான் தென்இந்தியாவின் அதிவேக ரயிலாக கூறலாம். 18வது இடத்திலிருக்கும் சென்னை துரந்தோ இடைநில்லா விரைவு ரயிலை 10வது இடத்தில் ஏற்றியுள்ளோம். 2,175 கிமீ தூரத்தை 27 மணி 55 நிமிடங்களில் நிஜாமுதீன்- சென்னை துரந்தோ எக்ஸ்பிரஸ் கடக்கிறது. ராஜ்தானிக்கு இணையான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சராசரியாக மணிக்கு 77.37 கிமீ வேகத்தில் செல்கிறது.

நம்ம ஊர் புல்லட் ரயில்

இன்னும் சில ஆண்டுகளில் நம் நாட்டிலும் புல்லட் ரயில் கனவு மெய்ப்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. மேலும், சென்னை- பெங்களூர் இடையே புல்லட் ரயில் விடப்படும் என்ற தகவலும் நமது ஆவலைத் தூண்டுகிறது. ஆனால், அரசியல் சீதோஷ்ண நிலை ஒத்து வந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.

எங்களது அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்.

Most Read Articles
English summary
Here is a list of 10 fastest trains of India. Have a look.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X