உலகின் சிறந்த டாப் - 10 போர் விமானங்கள்: சிறப்புத் தொகுப்பு

அண்டை நாடுகள் மற்றும் எதிரி நாடுகளால் ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எளிதாக சமாளிப்பதற்கு வலுவான விமானப் படை ஒவ்வொரு நாட்டிற்கும் அவசியமாகியுள்ளது. அதிலும், நவீன வசதிகள் பொருந்திய போர் விமானங்களை வைத்திருக்கும் நாடுகளிடம் சண்டையிடவும், வம்புக்கு செல்வதற்கும் எதிரி நாடுகள் யோசிக்கும்.

அந்தளவு நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட தற்போது ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதுகெலும்பாக விளங்குகின்றன. அதில், உறுதித்தன்மை, வேகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட விஷயங்களில் முதன்மை வகிக்கும் டாப்- 10 விமானங்கள் பற்றிய தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். மேலும், போர் விமானங்கள் பற்றிய பைலட்டுகள் தந்த விஷயங்களும் கவனத்தில்கொள்ளப்பட்டு இந்த பட்டியலை வெளியிட்டுள்ளனர்.


பயன்பாடு

பயன்பாடு

பயன்பாட்டில் உள்ள போர் விமானங்கள் மட்டுமே பட்டியலில் இடம்பெற்றுள்ளன. மேலும், நேரடி சண்டையில் மட்டுமின்றி, போர் ஒத்திகையின்போது சிறப்பாக செயல்பட்ட விமானங்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. அவற்றை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் தொகுத்துள்ளோம்.

10. செங்க்டு ஜே-10(சீனா)

10. செங்க்டு ஜே-10(சீனா)

செங்க்டு ஜே- 10 என்ற இந்த போர் விமானம் சீனாவின் முதல் போர் விமானம். இது ரஷ்யாவின் நான்காம் தலைமுறை மிக்-29 மற்றும் சுகோய் 27 விமானங்களுக்கு இணையான அம்சங்களை கொண்டது. சோவியத் யூனியனை சமாளிக்கும் விதத்தில் முதலில் இந்த விமானத்தை சீனா உருவாக்கி வந்தது. ஆனால், சோவியத் யூனியன் உடைந்த பிறகு, தேவைகள் மாறியதால் இந்த விமானத்தின் டிசைன் மற்றும் பயன்பாட்டு அம்சங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டது. மேற்கத்திய டிசைன் மற்றும் தொழில்நுட்பங்கள் ஏராளமாக இந்த விமானத்தில் கையாளப்பட்டிருப்பதாக விமர்சனங்கள் உள்ளன. இது மல்டிரோல் காம்பேட் போர் விமான ரகத்தை சேர்ந்தது.

9. சாப் ஜேஏஎஸ் 39 கிரிபென்(சுவீடன்)

9. சாப் ஜேஏஎஸ் 39 கிரிபென்(சுவீடன்)

இதுவும் நான்காம் தலைமுறை போர் விமானங்களின் அம்சங்களை கொண்டது. வான் தற்காப்பு, இடைமறித்தல், தரை தாக்குதல்களிலிருந்து எளிதாக தப்பிக்கும் வசதிகள் கொண்டது. வெகு லாவகமாக செல்லும் ஏரோடைனமிக் டிசைன் கொண்டதாக வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர். குறைவான நீளம் கொண்ட ஓடுதளத்திலிருந்தும் இயக்க முடியும். இந்த விமானத்திற்காகன பெரும்பான்மையான பாகங்கள் அமெரிக்காவை சேர்ந்த சப்ளையர்களிடமிருந்து பெறப்படுகிறது. மேலும், மிக குறைவான இயக்குதல் செலவீனம் கொண்ட விமானமாகவும் குறிப்பிடப்படுகிறது. செக் குடியரசு, ஹங்கேறி, தென் ஆப்ரிக்கா, தாய்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

 8. லாக்ஹீட் மார்ட்டின் எஃப்- 16(அமெரிக்கா)

8. லாக்ஹீட் மார்ட்டின் எஃப்- 16(அமெரிக்கா)

உலக அளவில் பிரபலமான போர் விமான மாடல் இது. அமெரிக்காவின் லாக்ஹீட் நிறுவனத்தின் தயாரிப்பான இந்த மாடல் மல்டி ரோல் காம்பேக்ட் பயன்பாட்டு வகையை சேர்ந்தது. தரை தளங்களை துல்லியமாக குறிவைத்து தாக்குதல் நடத்துவதற்கு ஏதுவான மாடல். இதுவரை 4,500 எஃப்- 16 போர் விமானங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. மேலும், உலக முழுவதும் 26 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றன. 2025ம் ஆண்டு வரை அமெரிக்க விமானப் படையில் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக எஃப்-35 லைட்னிங் 2 என்ற விமானத்தை அமெரிக்க விமானப் படை சேர்க்கவுள்ளது.

7. மிகோயான் மிக்- 31(ரஷ்யா)

7. மிகோயான் மிக்- 31(ரஷ்யா)

சோவியத் விமானப் படை உருவாக்கிய இந்த விமானம் அதிவேக போர் விமானமாக குறிப்பிடப்படுகிறது. தொலைதூரத்திலிருந்து எதிரி விமானங்களை சுட்டு வீழ்த்தும் வசதி கொண்டது. இந்த விமானத்தின் மேம்படுத்தப்பட்ட மாடலாக மிக்-31 பிஎம் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவும் மல்டிரோல் காம்பேட் ரகத்தை சேர்ந்தது. ரஷ்ய விமானப் படையின் முதுகெலும்பாக இந்த மாடல் குறிப்பிடப்படுகிறது.

6.மெக்டொனல் டக்ளஸ் எஃப்-15(அமெரிக்கா)

6.மெக்டொனல் டக்ளஸ் எஃப்-15(அமெரிக்கா)

எதிரி நாட்டு வான் எல்லையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் அம்சங்கள் கொண்ட இந்த எஃப்-15 போர் விமானங்கள் கடந்த 30 ஆண்டுகளாக அமெரிக்க விமானப் படையில் செயலாற்றி வருகிறது. எதிரி விமானத்தை கண்டறிந்து, அதனை கண்காணித்து துல்லியமாக தாக்குதல் நடத்தும் வசதி கொண்டது. இதன் எஃப்-15 ஈகிள் மாட்ல தற்போது அமெரிக்க விமானப் படையில் சேவையில் உள்ளது. இஸ்ரேல், ஜப்பான் மற்றும் சவூதி அரேபிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது.

5. சுகோய் எஸ்யூ-27(ரஷ்யா)

5. சுகோய் எஸ்யூ-27(ரஷ்யா)

சோவியத் யூனியன் விமானப் படையின் முதுகெலும்பாக இந்த மாடலை கூறுகின்றனர். தொலைதூரம் சென்று தாக்குதல் நடத்துவதற்கான அம்சங்களை கொண்டது. அமெரிக்காவின் எஃப்- 15 விமானத்திற்கு இணையான அம்சங்களை கொண்டது. 10 ஏவுகணைகளை தாங்கிச் சென்று செலுத்தும். சுகோய் எஸ்யூ27 வரிசையில் மேம்படுத்தப்பட்ட மாடல்களாக எஸ்யூ30, எஸ்யூ35 ஆகிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. சுகோய் ரக விமான மாடல்கள் மேற்கத்திய நாடுகளின் நவீன போர் விமானங்களுக்கு பெரும் சவாலாக விளங்குகின்றன.

4. டஸ்ஸால்ட் ரஃபேல்(பிரான்ஸ்)

4. டஸ்ஸால்ட் ரஃபேல்(பிரான்ஸ்)

பிரான்ஸ் விமானப் படை மற்றும் கப்பற்படையில் இந்த விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மல்டி ரோல் காம்பேட் பயன்பாட்டு ரகத்தை சேர்ந்த இந்த போர் விமானம் நவீன கால தொழில்நுட்பங்களை கொண்டது. 40 இலக்குகளை கண்காணிக்கவும், 4 இலக்குகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் திறன் கொண்டது. அமெரிக்காவின் எஃப்- 16 போர் விமானத்துக்கு இணையான அம்சங்களை கொண்டது.

 3. யூரோஃபைட்டர் தைபூன்(ஐரோப்பிய யூனியன்)

3. யூரோஃபைட்டர் தைபூன்(ஐரோப்பிய யூனியன்)

இரட்டை எஞ்சின் கொண்ட இந்த போர் விமானத்தை ஏர்பஸ் குழுமம் உள்பட ஐரோப்பாவை சேர்ந்த மூன்று நிறுவனங்கள் இணைந்து வடிவமைத்தன. 1983ல் துவங்கப்பட்ட இந்த விமான தயாரிப்புத் திட்டத்தில் இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் இணைந்து தயாரித்தன. பல நாடுகள் இணைந்து தயாரித்ததால் பல்வேறு இழுபறிகளுக்கு பின்னர் 1994ல் முதல் விமானம் தயாரிக்கப்பட்டு பறக்கவிட்டு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. தரை இலக்குகளை குறி வைத்து தாக்குவதில் துல்லியமாக செயல்படக்கூடியது. எதிரிகளின் ரேடாரிலிருந்து தப்பிக்கக்கூடிய அம்சங்களுடன் டிசைன் செய்யப்பட்டது.

2.போயிங் சூப்பர் ஹார்னெட்(அமெரிக்கா)

2.போயிங் சூப்பர் ஹார்னெட்(அமெரிக்கா)

அமெரிக்க விமானப் படையின் மல்டி ரோல் காம்பேட் போர் விமானம். வான் வழி தாக்குதல் மற்றும் தரை வழி தாக்குதல் என இரண்டையும் செய்யும் தொழில்நுட்ப சிறப்பு கொண்டது. அமெரிக்கா மட்டுமின்றி, ஆஸ்திரேலிய விமானப் படையின் முக்கிய போர் விமானமாகவும் பயன்படுத்தப்பட்டது.

1.லாக்ஹீட் மார்டின்/போயிங் எஃப்- 22 ராப்டர்(அமெரிக்கா)

1.லாக்ஹீட் மார்டின்/போயிங் எஃப்- 22 ராப்டர்(அமெரிக்கா)

எதிரி நாட்டு வான் எல்லையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான பயன்பாட்டு வகையை சேர்ந்தது. அதிசக்தி வாய்ந்த ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது. தற்போது நவீன தொழில்நுட்ப அம்சங்களும், அதிக விலை கொண்டதாகவும் குறிப்பிடப்படுகிறது. இதன் தொழில்நுட்ப ரகசியங்கள் கசியாதவாறு இந்த விமானத்தை ஏற்றுமதி செய்வதை அமெரிக்கா தவிர்த்து வருகிறது. நேச நாடுகளுக்கு கூட இல்லை என்று கைவிரித்து விட்டது.

இந்திய விமானப்படை போர் விமானங்கள்

இந்திய விமானப்படை போர் விமானங்கள்

இந்திய விமானப்படையில் சுகோய்- 30 எம்கேஐ, மிராஜ் 200, மிக்- 29, மிக் 27, மிக்- 21 பைசன் உள்ளிட்ட முக்கிய போர் விமானங்கள் உள்ளன.

சொந்த போர் விமானம்

சொந்த போர் விமானம்

நம் நாட்டிலேயே உருவாக்கப்படும் புதிய இலகு ரக போர் விமானம் தேஜஸ் என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன் புரோட்டோடைப் மாடல் கோவா, பதான்கோட் உள்ளிட்ட இடங்களில் வைத்து சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, பல்வேறு நிலை சோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டு வருகிறது. இந்த புதிய போர் விமானத்தை பற்றிய அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Here are given World's Top 10 combat air-crafts list. Take a look.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X