இன்றைய ஸ்பெஷல்... போர்ஷே பற்றி அறிந்திராத சுவாரஸ்யங்கள்!

ஜெர்மனியை சேர்ந்த போர்ஷே நிறுவனம் உயர்வகை கார்களை தயாரிப்பதில் உலக அளவில் மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது. இந்த நிறுவனத்தின் தனித்துவமான டிசைன், செயல்திறன் மிக்க எஞ்சின் போன்றவை கார் பிரியர்களால் சிலாகித்து பேசப்படும் விஷயங்கள். பிரபல ஆட்டோமொபைல் டிசைனரும், ஹிட்லரின் கனவு காரான ஃபோக்ஸ்வேகன் பீட்டில் கார் டிசைனில் முக்கிய பங்களித்தவருமான பெர்டினான்ட் போர்ஷே உருவாக்கிய நிறுவனம்தான் போர்ஷே.

இதன் காரணமாகவே, போர்ஷே கார்களின் டிசைனில் பீட்டில் காரின் டிசைன் தாக்கம் இருப்பதை காணலாம். புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்பது போல ஃபெர்டினான்ட் போர்ஷே மகன் ஃபெர்ரி போர்ஷேவும் சிறந்த ஆட்டோமொபைல் வல்லுனர். தந்தையுடன் இணைந்து போர்ஷே நிறுவனத்தின் வளர்ச்சியில் உறுதுணையாக இருந்தவர்.

உலகின் முதல் பெட்ரோல்- எலக்ட்ரிக் ஹைபிரிட் காரை உருவாக்கியவராகவும் புகழப்பெறும் சிறந்த ஆட்டோமொபைல் வல்லுனரான ஃபெர்டினான்ட் போர்ஷே ஸ்தாபிதம் செய்த போர்ஷே நிறுவனம் இன்று இந்தியா உள்பட உலகின் ஏராளமான நாடுகளில் வர்த்தகத்தை பரப்பியுள்ளது.

தற்போது ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் கீழ் செயல்பட்டு வரும் போர்ஷே நிறுவனம் போர்ஷே 911, பாக்ஸ்டர், கேமேன், பனமெரா, கேயென், மசான் மற்றும் 918 ஆகிய கார் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. ஃபோக்ஸ்வேகன் குழுமத்தில் இருக்கும் துணை கார் நிறுவனங்களில் அதிக லாபத்தை ஈட்டித் தரும் நிறுவனம் போர்ஷேதான். உலகின் மிகவும் பிரத்யேகமான கார் விரும்பிகளின் முதல் சாய்ஸ் பிராண்டாக இருந்து வரும் போர்ஷே நிறுவனத்தின் முக்கிய சிறப்புகளை ஸ்லைடரில் காணலாம்.


1.போர்ஷே லோகோ

1.போர்ஷே லோகோ

ஸ்டட்கர்ட் பகுதியில் குதிரை வளப்புப் பண்ணையாக இருந்த இடத்தில்தான் போர்ஷே கார் நிறுவனம் அமைக்கப்பட்டது. அதனை நினைவூட்டும் வையில், குதிரை உருவத்துடன் போர்ஷே லோகோ வடிவமைக்கப்பட்டது.

2. முதல் கார்

2. முதல் கார்

போர்ஷே நிறுவனம் துவங்கப்பட்ட 10 ஆண்டுகள் வரை கார் தயாரிப்பில் ஈடுபடவில்லை. வாகன டிசைனில் மட்டுமே கவனம் செலுத்தியது. 1939ம் ஆண்டு போர்ஷே நிறுவனம் 64 என்ற கார் மாடலை வடிவமைத்தது. ஃபோக்ஸ்வேகன் மாடல் 64 பீட்டில் காரின் பல முக்கிய பாகங்கள் இந்த காரில் பயன்படுத்தப்பட்டிருந்தது. இதில் பொருத்தப்பட்டிருந்த எஞ்சின் 50 பிஎச்பி ஆற்றலை மட்டுமே வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருந்தது. ஆனால், அப்போது இருந்த தொழில்நுட்ப வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது இது சிறந்ததாக கருதப்படுகிறது. பின்னர், 1948ல் 200 தொழிலாளர்களுடன் முறைப்படி போர்ஷே நிறுவனம் ஸ்தாபிதம் செய்யப்பட்டது. முதல் தயாரிப்பு நிலை மாடலாக போர்ஷே 356 கூபே கார் வெளியிடப்பட்டது.

3. போர்ஷே ஸ்பைடர் 550

3. போர்ஷே ஸ்பைடர் 550

தங்களது தொழில்நுட்ப வல்லமையை காட்டுவதற்காக மோட்டார்ஸ்போர்ட்ஸ் துறையை முக்கிய விளம்பர மையமாக பயன்படுத்திக் கொள்ள போர்ஷே முடிவு செய்தது. இதன் காரணமாக ரேஸ் கார் மாடல்களை உருவாக்குவதில் ஃபெர்ரி போர்ஷே தீவிரம் காட்டினார். அதன்விளைவாக போர்ஷே 356 மாடல் உருவாக்கி வெற்றிக் கண்டது. ஆனால், அதைவிட ஒரு சிறந்த காரை உருவாக்க வேண்டும் என்று போர்ஷே காட்டிய ஆர்வத்தில் உருவான மாடல்தான் போர்ஷே 550 ஸ்பைடர்.

4. போர்ஷே 917/30

4. போர்ஷே 917/30

1970 மற்றும் 71ம் ஆண்டுகளில் 24 ஹவர்ஸ் லீமான்ஸ் பந்தயத்தில் வெற்றி பெற்ற போர்ஷே நிறுவனம் வெற்றி பெற்றது. அதற்கு பயன்படுத்தப்பட்ட கார் மாடல் போர்ஷே 917 என்ற மாடல்தான். 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 2.3 வினாடிகளில் எட்டிவிடும் வல்லமை கொண்டது. இந்த காரில் பொருத்தப்பட்டிருந்த எஞ்சின் 1,100 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. மணிக்கு 390கிமீ வேகம் வரை பறக்கும்.

 5. போர்ஷே 928

5. போர்ஷே 928

உற்பத்தி பிரிவிலிருந்து வெளிவரும்போதே முன்புறம் மற்றும் பின்புறத்திலும் ஃபிளிப் சன்வைசர் கொண்ட ஒரே கார் மாடல் போர்ஷே 928 கார்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

6. போர்ஷே 911

6. போர்ஷே 911

1963ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட போர்ஷே 911 கார் இன்றைக்கும் விற்பனையில் இருந்து வருகிறது. அவ்வப்போது புதுப்பொலிவுடன் நாகரீக மாற்றத்துக்கு ஏற்ப மாறுதல்களுடன் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இன்றைக்கும் நவநாகரீக டிசைன் கொண்டதாக மார்க்கெட்டில் இருந்து வருகிறது.

7. எண்ணம்போல் வண்ணம்

7. எண்ணம்போல் வண்ணம்

ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் போன்றே போர்ஷே நிறுவனமும் வாடிக்கையாளரின் விரும்பிய எந்தவொரு வண்ணத்திலும் காரை பெயிண்ட் செய்து கொடுக்கிறது. ஆனால், அதற்கு கூடுதல் விலையை கொடுக்க வேண்டும். சிவப்பு, வெள்ளை மற்றும் கருப்பு ஆகியவைதான் போர்ஷே நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் வண்ணங்களாக தெரிவிக்கப்படுகிறது.

8. பூஜ்யத்தால் பிரச்னை

8. பூஜ்யத்தால் பிரச்னை

போர்ஷே நிறுவனத்தின் 911 கார் முதலில் 901 என்று அழைக்கப்பட்டது. ஆனால், காரின் மூன்றெழுத்து எண்களை கொண்ட மாடல் பெயர்களின் நடுவில் பூஜ்யத்தை பயன்படுத்துவதை எதிர்த்து பீஜோ நிறுவனம் வழக்குத் தொடர்ந்து வெற்றி பெற்றது. இதையடுத்து, 911 என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

9. முதல் எஸ்யூவி

9. முதல் எஸ்யூவி

ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பில் சிறந்து விளங்கிய போர்ஷே முதன்முதலாக 2003ல்தான் எஸ்யூவி மார்க்கெட்டில் நுழைந்தது. விற்பனை ஆட்டம் கண்டதால், வர்த்தக விரிவாக்க நடவடிக்கையாக எஸ்யூவி தயாரிக்க முடிவு செய்தது.

10. அதிவேக சுற்று

10. அதிவேக சுற்று

நர்பர்க்கிரிங் ரேஸ் டிராக்கில் போர்ஷே 956 காரில் ஸ்டீபன் பெல்லாஃப் என்பவர் அதிவேகத்தில் கடந்து சாதனை புரிந்தார். மணிக்கு சராசரியாக 201கிமீ வேகத்தில் 6.11.13 நிமிடங்களில் ஒரு சுற்றை கடந்து உலக சாதனை படைத்தார்.

டிட்ஸ் பிட்ஸ்- 1

டிட்ஸ் பிட்ஸ்- 1

போர்ஷே நிறுவனம் சூப்பர் என்ற பெயரில் டிராக்டரை தயாரித்தது. இந்த டிராக்டரில் 38 பிஎச்பி பவரை அளிக்கும் 2,625சிசி ஏர்கூல்டு டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருந்தது. 1957 முதல் 1963 வரை டிராக்டர் தயாரிப்பில் ஈடுபட்டது. எப்படி விண்டேஜ் கார்களை பலர் பராமரித்து வருகிறார்களோ, அதேபோன்று போர்ஷே டிராக்டர்களையும் பலர் பராமரித்து அவ்வப்போது நடைபெறும் ஆட்டோமொபைல் கண்காட்சியில் காட்சிக்கு வைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

டிட்ஸ் பிட்ஸ்- 2

டிட்ஸ் பிட்ஸ்- 2

மென்ஸ் கார் என்ற ஜெர்மன் பத்திரிக்கை ஒன்று நடத்திய ஆய்வில் 50 சதவீத போர்ஷே உரிமையாளர்கள் தங்களது வாழ்க்கை துணையை ஏமாற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாழ்க்கைத்துணையிடம் மிகவும் நம்பிக்கைகுரியவர்களாக ஒபெல்- வாக்ஸ்ஹால் உரிமையாளர்கள் இருப்பதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Featuring sleek curves, luxurious styling, and a powerful engine, Porsches are high-performance cars built to trump other vehicles on the road. The following are 10 fun facts about Porsches.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X