உலகின் நீளமான டாப் 10 நெடுஞ்சாலைகள்... இந்தியாவின் தங்க நாற்கர சாலைக்கும் இடம்!

20ம் நூற்றாண்டில் போக்குவரத்து தேவைகள் அபரிமித வளர்ச்சி கண்டதையடுத்து, பொது போக்குவரத்திற்கு பயன்படும் சாலைகளை தரம் உயர்த்தி நெடுஞ்சாலைகளாக மாற்றினர். சில நாடுகள் ராணுவ துருப்புகளையும், வாகனங்களையும் கொண்டு செல்வதற்காகவும் நெடுஞ்சாலைகளை அமைத்தனர். பின்னர், அவை பொது போக்குவரத்திற்கானதாக மாறியது வரலாறு.

சரக்கு போக்குவரத்து, பயணிகள் போக்குவரத்திற்கு ஒரு நாட்டின் முதுகெலும்பாக நெடுஞ்சாலைகள் மாறியிருக்கின்றன. இந்தநிலையில், உலகிலேயை மிக நீளமான நெடுஞ்சாலைகள் குறித்தத் தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். அமெரிக்காவில்தான் அதிக நீளம் கொண்ட நெடுஞ்சாலைகள் அதிகமிருக்கின்றன. சரி, பட்டியலுக்குள் நுழையலாம்.

10. இன்டர்ஸ்டேட் 80 [ஐ-80], அமெரிக்கா

10. இன்டர்ஸ்டேட் 80 [ஐ-80], அமெரிக்கா

அமெரிக்காவின் 11 மாகாணங்களை இணைக்கும் மிக நீளமான நெடுஞ்சாலைகளில் ஒன்று. இதனை கிறிஸ்டோபர் கொலம்பஸ் என்றும் குறிப்பிடுகின்றனர். இந்த நெடுஞ்சாலை 4,666 கிமீ நீளம் கொண்டது. அமெரிக்காவின் இரண்டாவது நீளமான நெடுஞ்சாலையாகவும் குறிப்பிடப்படுகிறது. கலிஃபோர்னியாவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரின் இன்டர்சேஞ்ச் எனப்படும் சந்திப்பில் துவங்கி, நியூ ஜெர்ஸியில் முடிகிறது.

09. இன்டர்ஸ்டேட் 90 -[ஐ-90], அமெரிக்கா

09. இன்டர்ஸ்டேட் 90 -[ஐ-90], அமெரிக்கா

அமெரிக்காவின் நீளமான நெடுஞ்சாலை இது. இந்த நெடுஞ்சாலை 4,860.2 கிமீ நீளம் கொண்டது. 1950ம் ஆண்டில் இந்த நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் துவங்கி 1985ம் ஆண்டு முடிவடைந்தது. இந்த நெடுஞ்சாலை அமெரிக்காவின் 13 மாகாணங்களை இணைக்கிறது.

08. யுஎஸ் ரூட் 6

08. யுஎஸ் ரூட் 6

இந்த நெடுஞ்சாலை 5,158 கிமீ நீளம் கொண்டது. பிஷப் கலிஃபோர்னியா இன்டர்சேஞ்ச் சந்திப்பில் துவங்கி மாசாசூட்ஸ் மாகாணத்தில் உள்ள புரோவின்ஸ்டவுன் என்ற சிறிய நகரத்தில் முடிவடைகிறது. 1920ம் ஆண்டில் இந்த ரூட் 6 நெடுஞ்சாலை ரூஸ்வெல்ட் ஹைவே என்ற பெயரில் அழைகப்பட்டது.

07. யுஎஸ் ரூட் 20

07. யுஎஸ் ரூட் 20

யுஎஸ் ரூட் 20 நெடுஞ்சாலை 5,415 கிமீ நீளம் கொண்டது. 1926ம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த சாலையானது 1940ம் ஆண்டில் விரிவாக்கப்பட்டது. அமெரிக்காவின் இயற்கை எழில் சூழ்ந்த சாலைகளில் ஒன்றாக புகழ்பெற்றது. நியூபோர்ட்டில் உள்ள யுஎஸ் 101 சாலை சந்திப்பில் துவங்கி, ஒரிகானை கடந்து இடாஹோ என்ற இடத்தில் முடிவடைகிறது.

 06. சீனா தேசிய நெடுஞ்சாலை 010

06. சீனா தேசிய நெடுஞ்சாலை 010

சீனாவின் மிக நீளமான சாலைகளில் ஒன்று. இந்த சாலையானது 5,700 கிமீ தூரத்திற்கு நீள்கிறது. செஜியாங், லியோனிங், ஹெலோன்ஜ்யாங், ஷாங்டாங், ஜிலின், ஃப்யூஜியன், ஜியாங்சூ, ஷாங்காய் மற்றும் குவாங்டாங் ஆகிய மாகாணங்களை இணைக்கிறது. இதனை டாங்சன் எக்ஸ்பிரஸ் வே என்று அழைக்கின்றனர்.

 05. தங்கநாற்கர சாலை கட்டமைப்பு, இந்தியா

05. தங்கநாற்கர சாலை கட்டமைப்பு, இந்தியா

இந்தியாவின் மிக நீளமான சாலை கட்டமைப்பாக இதனை குறிப்பிடலாம். 2001ம் ஆண்டு சாலை பணிகள் துவங்கி 2012ம் ஆண்டில் நிறைவடைந்தது. முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கனவு திட்டமான இந்த சாலை திட்டம் இந்தியாவின் உள்நாட்டு போக்குவரத்தில் முதுகெலும்பாக விளங்குகிறது. இந் சாலை கட்டமைப்பு 5,846 கிமீ தூரத்திற்கு அமைக்கப்பட்டருக்கிறது. சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா ஆகிய நான்கு பெருநகரங்களையும் இணைக்கிறது.

04. டிரான்ஸ் கனடா ஹைவே

04. டிரான்ஸ் கனடா ஹைவே

இந்த சாலை திட்டம் ஒரு பில்லியன் டாலர்களை தாண்டியது. அப்படியெனில், இதன் நீளம். ஆம், இந்த சாலை 7,821 கிமீ தூரத்திற்கு அமைக்கப்பட்டிருக்கிறது. 1950ம் ஆண்டு இந்த சாலையை அமைக்கும் பணிகள் துவங்கின. கனடா நாட்டின் அனைத்து மாகாணங்கள் மற்றும் நகரங்களை இந்த எக்ஸ்பிரஸ் சாலை இணைக்கிறது.

03. டிரான்ஸ் சைபீரியன் ஹைவே

03. டிரான்ஸ் சைபீரியன் ஹைவே

இந்த சாலை 11,000 கிமீ நீளம் கொண்டது. ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் துவங்கி, விளாடிவோஸ்டாக் நகரில் முடிவடைகிறது. உலகின் மிக அழகான சாலையாகவும், கார் ஓட்டுனர்களுக்கு பரவசத்தை வழங்கும் சாலையாகவும் குறிப்பிடப்படுகிறது.

02. ஹைவே 1, ஆஸ்திரேலியா

02. ஹைவே 1, ஆஸ்திரேலியா

இந்த சாலை 14,500 கிமீ தூரத்திற்கு நீள்கிறது. 1955ம் ஆண்டில் இந்த சாலை அமைக்கப்பட்டது. உலகின் இரண்டாவது அதிக நீளமான சாலை கட்டமைப்பாக குறிப்பிடப்படுகிறது. இந்த சாலையில் பல வழித்தட சாலைகளையும், ஒற்றை வழித்தட சாலைகளையும் கொண்டிருக்கிறது. நாள் ஒன்றுக்கு ஒரு மில்லியன் மக்கள் இந்த சாலையை பயன்படுத்துகின்றனராம். ஆஸ்திரேலியாவின் டார்வின், பிரிஸ்பேன் ஆகிய நகரங்களை தவிர்த்து, ஏனைய அனைத்து மாகாணங்களையும் இணைக்கிறதாம்.

01. பான் அமெரிக்கன் ஹைவே

01. பான் அமெரிக்கன் ஹைவே

உலகின் மிக நீளமான சாலையாக இது குறிப்பிடப்படுகிறது. சுமார் 48,000 கிமீ தூரத்திற்கு இந்த சாலைகள் ஒருங்கிணைத்து கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. அடர்ந்த வனப்பகுதிகள், ஆள் அரவமற்ற பாலைவனங்கள் என அமெரிக்காவின் பல்வேறு நில அமைப்புகள் மற்றும் சீதோஷ்ண நிலைகளை கடந்து செல்கிறது. மோட்டார் வாகன பயன்பாட்டுக்கு ஏற்ற உலகின் மிக நீளமான நெடுஞ்சாலையாகவும் இது கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறது.

இந்தியாவின் நீளமான டாப் 10 நெடுஞ்சாலைகள்...!!

இந்தியாவின் நீளமான டாப் 10 நெடுஞ்சாலைகள்...!!

Most Read Articles
English summary
Top 10 Longest Highways In The World.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X