நஷ்டத்தில் விற்பனையான பிரபல கார் மாடல்கள்!!

எந்த ஒரு தொழிலிலும் லாபம் இல்லாமல் தொடர முடியாது. குறிப்பாக, பல்லாயிரம் கோடி முதலீட்டில் நடந்து வரும் கார் தயாரிப்பில் லாபம் இல்லாமல் சாத்தியமா?. இல்லைதான். இந்தியாவில் செவர்லே நிறுவனம் கூட நஷ்டத்தில் கார்களை விற்பனை செய்வதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. அதேவேளை, சில கார் மாடல்கள் தயாரிப்பாளர்களுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தினாலும், அவை தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டன, விற்பனை செய்யப்பட்டும் வருகின்றன.

தங்களது தொழில்நுட்ப வலிமையை எடுத்துரைக்கும் விதத்தில் அல்லது பிற காரணங்களுக்காக அந்த கார்களுக்கு விடை கொடுக்க முடியாமல் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதுபோன்று, கோடிகளில் நஷ்டத்துடன் விற்பனை செய்யப்பட்ட, செய்யப்படும் கார் மாடல்களில் அதிக நஷ்டத்தை கொடுத்த டாப் 10 மாடல்களை பெர்ஸ்டியன் என்ற ஆய்வு நிறுவனம் தொகுத்து வெளியிட்டுள்ளது.

 பென்ஸ் ஸ்மார்ட்

பென்ஸ் ஸ்மார்ட்

3 மில்லியன் பவுண்ட்டுகள் என்ற மிகப்பெரும் முதலீட்டில் வடிவமைக்கப்பட்ட சிறிய கார் மாடல்தான் ஸ்மார்ட் ஃபார்டூ(Smart Fortwo). 1997 முதல் 2006 விற்பனை செய்யப்பட்ட இந்த கார் மாடல் ஒட்டுமொத்தமாக 2.82 பில்லியன் பவுன்ட்டுகள் இழப்பை ஏற்படுத்தியது. ஒரு காருக்கு 3762 பவுன்ட்டுகள் நஷ்டத்திற்கு விற்பனை செய்யப்பட்டன.

ஃபியட் ஸ்டைலோ

ஃபியட் ஸ்டைலோ

2001ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை இத்தாலிய நிறுவனமான ஃபியட் விற்பனை செய்த கார் மாடல். ஒட்டுமொத்தமாக ஒவ்வொரு காரையும் 2297 பவுன்ட்டுகள் நஷ்டத்திற்கு விற்றது ஃபியட். ஒட்டுமொத்தமாக 1.77 பில்லியன் பவுன்ட்டுகள் வரை இழப்பு ஏற்பட்டது.

ஃபோக்ஸ்வேகன் பேட்டன்

ஃபோக்ஸ்வேகன் பேட்டன்

2001ம் ஆண்டு ஃபோக்ஸ்வேகன் அறிமுகம் செய்த பேட்டன் காரும் பெரும் நஷ்டத்தை கொடுத்த மாடல். ஒரு காரில் மட்டும் 23,655 பவுன்ட்டுகள் வரை நஷ்டம் ஏற்பட்டது. ஒட்டுமொத்த விற்பனையில் ஃபோக்ஸ்வேகனுக்கு இந்த காரால் 1.68 பில்லியன் பவுன்ட் நஷ்டம் ஏற்பட்டது.

 பீஜோ 1007

பீஜோ 1007

2004ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை பீஜோ நிறுவனத்தால் விற்பனை செய்யப்பட்ட கார். ஒரு காருக்கு 12,947 பவுன்ட் நஷ்டத்தையும், ஒட்டுமொத்தத்தில் 1.59 பில்லியன் பவுன்ட் நஷ்டத்தையும் கொடுத்தது.

பென்ஸ் ஏ கிளாஸ்

பென்ஸ் ஏ கிளாஸ்

1997ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை தயாரிக்கப்பட்ட ஏ கிளாஸ் காரும் பென்ஸ் நிறுவனத்துக்கு பெரும் இழப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. ஒரு காருக்கு 1214 பவுன்ட்டும், ஒட்டுமொத்தமாக 1.44 பில்லியன் பவுன்ட்டும் நஷ்டத்தை கொடுத்தது.

புகாட்டி வேரோன்

புகாட்டி வேரோன்

உலகின் அதிவேகம் கொண்ட காராக புகழப்பெற்ற போதிலும், புகாட்டி வேரோன் காரை ஃபோக்ஸ்வேகன் குழுமம் நஷ்டத்திற்கே விற்பனை செய்து வருகிறது. ஒரு காருக்கு 3,887,051 பவுன்ட்டுகள் நஷ்டம் ஏற்படுகிறதாம். அதாவது, தயாரிப்பு செலவீனத்தை விட குறைவான விலையில் இந்த கார் விற்பனை செய்யப்படுகிறதாம். 2005ம் ஆண்டு முதல் இதுவரை 1.43 பில்லியன் நஷ்டத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாம். ஃபோக்ஸ்வேகனின் தொழில்நுட்ப வலிமையை பரைசாற்றும் விதத்தில் இந்த கார் விற்பனை தொடர்ந்து வருவதாக அந்த நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜாகுவார் எக்ஸ் டைப்

ஜாகுவார் எக்ஸ் டைப்

2001ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை விற்பனை செய்யப்பட்ட ஜாகுவார் எக்ஸ் டைப் காரும் நஷ்டத்திற்கு விற்கப்பட்டது. ஒரு காருக்கு 3945 பவுன்ட்டுகள் வீதம் மொத்தமாக 1.43 பில்லியன் நஷ்டத்தை ஏற்படுத்தியது.

ரெனோ லகுணா

ரெனோ லகுணா

2006ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை ரெனோ விற்பனை செய்த கார் மாடல்தான் ரெனோ லகுணா. ஒரு காருக்கு 2986 பவுன்ட்டுகள் வீதம் மொத்தமாக 1.30 பில்லியன் பவுன்ட் அளவிற்கு ரெனோவுக்கு இழப்பை அளித்தது.

ஆடி ஏ2

ஆடி ஏ2

2000ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை தயாரிக்கப்பட்ட ஆடி ஏ2 காரும் ப்ளாப் மாடல்தான். ஒரு காருக்கு 6340 வீதம் 1.2 பில்லியன் பவுன்ட் இழப்பை கொடுத்தது.

ரெனோ வெல் சேடீஸ்

ரெனோ வெல் சேடீஸ்

2001ம் ஆண்டு முதல் 2009 வரை தயாரிக்கப்பட்ட மாடல். ஒரு காருக்கு 15751 பவுன்ட்டுகள் வீதம் மொத்தமாக ஒரு பில்லியன் பவுன்ட்டுகள் நஷ்டத்தை கொடுத்துவிட்டது.

Most Read Articles
English summary
Anyway, do you know which are the biggest loss making cars on a global scale? Automotive analyst firm Berstein Research has compiled a top 10 list of cars which brought about a losses worth billions of dollars to their manufacturer. You'll also be surprised to know that the car that tops the list is one of the smallest cars in the world. Take a look
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X