இந்தியர்களின் மனதில் சிம்மாசனம் போட்ட டாப் 10 டூ வீலர் பிராண்டுகள்!

By Saravana

உலக அளவில் மிகப்பெரிய மோட்டார்சைக்கிள் மார்க்கெட்டுகளில் ஒன்றாக இந்தியா திகழ்ந்து வருகிறது. இந்தியாவில் மோட்டார்சைக்கிளுக்கான வரவேற்பும், அபரிமிதமான வர்த்தக வாய்ப்பும் பல நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி படையெடுத்து வருகின்றன.

ஆனால், அதில் சில நிறுவனங்கள் மட்டுமே இந்தியர்களின் நெஞ்சத்தில் தனி இடத்தை பிடித்துள்ளன. செயல்திறன், டிசைன், சிறப்பம்சங்கள் என ஏதோ ஒரு வகையில், சில பிராண்டுகள் இந்தியர்களின் மனதில் சிம்மாசனம் போட்டிருப்பதை அதன் வர்த்தகத்தையும், வரவேற்பையும் வைத்து கணித்து விடலாம். அதுபோன்று, இந்தியர்களுக்கு விருப்பமான டாப் 10 டூ வீலர் பிராண்டுகளை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

-

-

-
 10. கவாஸாகி

10. கவாஸாகி

ஜப்பானை சேர்ந்த கவாஸாகி நிறுவனம் 250சிசி.,க்கு மேலான ரகத்தில் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்து வருகிறது. சமீபத்தில் தனது நின்ஜா எச்2 சூப்பர் பைக்கையும் இந்தியாவில் அறிமுகம் செய்தது. சூப்பர் பைக் மார்க்கெட்டில் பிற பிராண்டுகளைவிட கவாஸாகி நிறுவனத்துக்கு தனி மதிப்பு இருக்கிறது. அதனை உணர்ந்து கொண்டு பல புதிய மாடல்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது கவாஸாகி.

-

-

-
09. ராயல் என்ஃபீல்டு

09. ராயல் என்ஃபீல்டு

உலகின் பழமையான மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ராயல் என்ஃபீல்டு தயாரிப்புகளை பலர் தங்களது கனவாக வைத்திருப்பதை காணலாம். இந்த மோட்டார்சைக்கிள்களின் நீடித்த உழைப்பு, உறுதி ஆகியவையும், கம்பீரமும் வாடிக்கையாளர்களின் மனதில் தனி இடத்தை பெற்றுத் தந்துள்ளது.

-

-

-
08. கேடிஎம்

08. கேடிஎம்

ரூ.2 லட்சத்திலான ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டில் கேடிஎம் முன்னிலை பெற்றிருக்கிறது. தோற்றம், செயல்திறன் மிக்க எஞ்சின், சரியான விலை போன்றவை இந்த பைக்குகளுக்கு இளைஞர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை தேடித்தந்துள்ளது. 4 சிலிண்டர் எஞ்சின் கொண்ட போட்டியாளர்களை சிங்கிள் சிலிண்டர் எஞ்சினை வைத்து கேடிஎம் போட்டுத் தாக்கி வருகிறது.

07. சுஸுகி

07. சுஸுகி

இருசக்கர வாகன மார்க்கெட்டில் ஸ்கூட்டர் செக்மென்ட்டில் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த சுஸுகி நிறுவனத்துக்கு தற்போது ஜிக்ஸெர் பைக்குகள் மூலமாக புதிய முகவரி கிடைத்துள்ளது. அதுதவிர, அந்த நிறுவனத்தின் ஹயபுசா உள்ளிட்ட சூப்பர் பைக் மாடல்களும் இந்த பிராண்டு மீதான மதிப்பை தூக்கிப் பிடிக்கின்றன. சமீபத்திய இளைஞர்களின் ட்ரெண்ட் சுஸுகி ஜிக்ஸெர் பைக்காக உள்ளதை குறிப்பிட்டாக வேண்டும்.

 06. ஹார்லி டேவிட்சன்

06. ஹார்லி டேவிட்சன்

அமெரிக்க மோட்டார்சைக்கிள் கலாச்சார சுவையை இந்தியர்களுக்கு ஊட்டிய பெருமை ஹார்லி டேவிட்சனையே சாரும். அதிசக்திவாய்ந்த எஞ்சின், வசதிகள், சைலென்சர் சப்தம், பிராண்டு மதிப்பு போன்றவை ஹார்லிடேவிட்சன் பைக்குகள் மீதான ஈர்ப்பை வெகுவாக அதிகரித்தது. மேலும், ஹார்லி டேவிட்சன் பிராண்டு ரசிகர்களின் கனவை நிறைவேற்றும் விதத்தில் ஸ்ட்ரீட் 750 பைக்கையும் ரூ.5 லட்சத்திற்குள் அறிமுகம் செய்து தனது ரசிக பட்டாளத்தை அதிகரித்துக் கொண்டுள்ளது.

05. வெஸ்பா

05. வெஸ்பா

பிரத்யேகமான டிசைன், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வெஸ்பா ஸ்கூட்டர் பிராண்டு பிரிமியம் விரும்பிகளின் தாகத்தை தணித்து வருகிறது. பிரிமியம் மாடல் என்பதை பிற வாடிக்கையாளர்கள் உணரும் வகையில், விலையும் அதிகம்தான். பத்தோடு பதினொன்றாக இல்லாத தயாரிப்பையும், நாகரீக வாழ்க்கை முறைக்கான ஸ்கூட்டர் மாடலாக இதனை கூறுவதால் இதற்கு தனி வாடிக்கையாளர் வட்டம் உள்ளது.

04. பஜாஜ்

04. பஜாஜ்

கியர் ஸ்கூட்டர் காலத்திலிருந்து பஜாஜ் பிராண்டுக்கு தனி மதிப்புண்டு. ஆனால், இப்போது மாறுபட்டு பைக் மார்க்கெட்டில் முத்திரை பதித்து வருகிறது. செயல்திறனும், நவீன தொழில்நுட்பமும் கொண்ட எஞ்சின், சரியான விலையில் இந்திய சாலை நிலைகளுக்கு ஏற்றவாறு தயாரிக்கப்படும் சுதேசி பைக் நிறுவனம். ஸ்போர்ட்ஸ் பைக் மற்றும் சாகச பைக் விரும்பிகளின் எண்ணத்தை பட்ஜெட் விலையில் ஈடேற்றும் விதத்தில் புதிய மாடல்களை சரியான விலையில் தந்து வருகிறது. பட்ஜெட் விலையில் சிறப்பான செயல்திறன் கொண்ட மாடல்களை விரும்புவோர்க்கு பஜாஜ் சிறப்பான தயாரிப்புகளை வழங்கி ரசிகர்களை தக்க வைத்து வருகிறது.

 03. யமஹா

03. யமஹா

யமஹா பைக்குகளின் டிசைனும், செயல்திறனும் இளைஞர்கள் மத்தியில் பிரபலமான பிராண்டாக மாற்றியிருக்கிறது. குறிப்பாக, அந்த நிறுவனத்தின் எஃப்இசட் வரிசை மாடல்களும், ஆர்15 மாடலும் அந்த நிறுவனத்தின் வெற்றிகரமான பிராண்டாக தக்க வைத்து வருகின்றன. இளைஞர்களின் முதல் சாய்ஸ் யமஹா பைக்குகள்தான் என்றால் மிகையில்லை.

02. ஹீரோ மோட்டோகார்ப்

02. ஹீரோ மோட்டோகார்ப்

மைலேஜ், பட்ஜெட் விலையிலான சிறப்பான மோட்டார்சைக்கிள்களை வழங்கி இந்தியாவின் நம்பர் 1 பிராண்டு அந்தஸ்தை தக்க வைத்து வருகிறது. குறிப்பாக, 100சிசி ரகத்தில் இந்த நிறுவனத்தை அடிக்க ஆளே கிடையாது என்ற நிலைமை இருந்து வருகிறது. போட்டியாளர்களின் நெருக்கடிகளை ஸ்பிளென்டரையும், பேஷனையும் வைத்து தகர்த்தெறிந்து வருகிறது ஹீரோ.

 01. ஹோண்டா

01. ஹோண்டா

ஸ்கூட்டர் மார்க்கெட்டில் ஹோண்டாதான் நம்பர் - 1. மேலும், ஹோண்டாவின் எஞ்சினுக்கு மயங்காதார் யாருமிலர். அந்தளவுக்கு இந்தியர்களை சுண்டி இழுத்து தன் கூடாரத்துக்குள் இழுத்து வருகிறது ஹோண்டா. ஸ்கூட்டர் மார்க்கெட்டில் நம்பர் -1 ஆக இருந்தாலும், ஹீரோவின் நம்பர் 1 இடத்தை பிடிப்பதே தன் லட்சியமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Ever wondered what the most exciting two-wheeler brand in India is? Well here is a list of top 10 most exciting two-wheeler brand in India. The brands that are in will blow your mind away since there are some very familiar brands, along with some newcomers that have stolen the show away from other brands.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X