போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்தியாவின் டாப் 10 நகரங்கள்!

By Saravana Rajan

பெருநகரங்களின் தலையாய பிரச்னைகளில் ஒன்றாக போக்குவரத்து நெரிசல் மாறியிருக்கிறது. போதிய சாலை கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலையில், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண இயலாத நிலைக்கு பல நகரங்கள் தள்ளப்பட்டிருக்கின்றன.

இந்தநிலையில், போக்குவரத்து நெரிசலில் முதல் 10 இடங்களில் இருக்கும், நகரங்கள் குறித்த புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளன. அந்த விபரங்களை இப்போது ஸ்லைடரில் பார்க்கலாம்.

10. லூதியானா

10. லூதியானா

பஞ்சாப் மாநிலத்திலுள்ள லூதியான, நாட்டின் முக்கிய தொழில்நகரங்களில் ஒன்றாக பெயர் பெற்றது. ஆனால், கடந்த சில ஆண்டுகளில் அந்த நகரத்தின் போக்குவரத்து நெரிசல், அந்நகரின் பாதகமான விஷயங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது.

 09. கான்பூர்

09. கான்பூர்

கான்பூரும் தொழில்துறைக்கு பெயர் பெற்ற நகரம்தான். இதனால், மாசுபடுவதிலும், தொழிற்சாலை கழிவுகளையும் அதிகம் வெளியேற்றும் நகரமாகவும் கூறப்படுகிறது. சமீப காலமாக இந்த நகரின் போக்குவரத்து நெரிசல் மிக மோசமான நிலையை எட்டியிருக்கிறது. இந்த நகரத்தில் வாகனங்களின் சராசரி வேகம் மணிக்கு 16 கிமீ என்பது குறிப்பிடத்தக்கது.

 08. ஜெய்பூர்

08. ஜெய்பூர்

சுற்றுலா நகரமாக பெயர்பெற்ற ஜெய்ப்பூரில் தற்போது வாகன நெரிசல் சொல்ல முடியாத அளவுக்கு அந்நகர மக்களை பாடாய் படுத்தி வருகிறது.

07. புனே

07. புனே

நாட்டின் முக்கிய தொழில்நகரங்களில் ஒன்றான புனேயில் வாகனப் பெருக்கம் அதீத வளர்ச்சி கண்டு வருகிறது. இதனால், பரபரப்பான நேரங்களில் மிக மோசமான போக்குவரத்து நெரிசலை சந்தித்து வருகிறது. பொது போக்குவரத்து சிறப்பாக இல்லாததே, இதற்கு முக்கிய காரணமாக குறிப்பிடப்படுகிறது.

06. சென்னை

06. சென்னை

நாட்டிலேயே மிக மோசமான போக்குவரத்து நெரிசலை சந்திக்கும் நகரங்களில் சென்னையும் இடம்பெற்று இருக்கிறது. ஆனாவல், அதிக வாகனங்களை கொண்ட நகரங்களில் டெல்லி, பெங்களூருக்கு அடுத்து மூன்றாவது இடத்தை பெறுகிறது. கடந்த ஆண்டு புள்ளிவிபரங்களின்படி, சென்னையில் 44 லட்சம் வாகனங்கள் ஓடுகின்றன. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன எண்ணிக்கையில், காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணற வேண்டியிருக்கிறது. மின்சார ரயில் போக்குவரத்து, பொது போக்குவரத்து சாதனங்கள் இருந்தும் இந்தளவு நெரிசலை சந்தித்தாலும், நாட்டின் 5 முக்கிய பெருநகரங்களில் சென்னை தேவலாம் என்ற நிலையை இந்த பட்டியலை வைத்து அறிய முடிகிறது.

 05. ஹைதராபாத்

05. ஹைதராபாத்

மிக மோசமான போக்குவரத்து நெரிசல் பிரச்னையில் சிக்கித் தவிக்கும் நகரங்களில் ஹைதராபாத் 5வது இடத்தை பெறுகிறது. அகலமான சாலைகள் இருந்தும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறுவதே, நெரிசலுக்கு மிக முக்கிய காரணமாக குறிப்பிடப்படுகிறது. இந்த நகரில் 33.8 லட்சம் வாகனங்கள் இருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

 04. கொல்கத்தா

04. கொல்கத்தா

இந்தியாவின் பழமையான நகரமான கொல்கத்தா தற்போது மிக மோசமான போக்குவரத்து நெரிசல் கொண்ட நகரம் என்ற பெருமையையும் உரிதாக்கிக் கொண்டுள்ளது. சரியான நடைபாதைகள் இல்லை, போக்குவரத்து விதிமீறல்கள், சாலை அமைப்பு போன்றவை இந்த நகரத்தின் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணங்களாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், போக்குவரத்து போலீசாரின் சீரிய முயற்சியில் ஓரளவு போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்தப்படுகிறதாம். இல்லையென்றால், முதலிடத்துக்கு வந்துவிடும் நிலை இருக்கிறதாம்.

03. புது டெல்லி

03. புது டெல்லி

நாட்டின் தலைநகரமான புது டெல்லி மிக மோசமான போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது. மேலும், வாகனப் பெருக்கத்தால் சுற்றுச்சூழல் வெகுவாக மாசடைந்த நகரமாகவும் பெயர் பெற்றிருக்கிறது. மெட்ரோல் ரயில் சேவை இருந்தும் டெல்லி போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியாமல் அம்மாநில அரசும், போக்குவரத்துத் துறையினரும் தவிக்கின்றனர். போக்குவரத்து நெரிசலையும், காற்று மாசுபடுதலை குறைக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை அம்மாநில அரசு மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

02. பெங்களூர்

02. பெங்களூர்

தகவல் தொழில்நுட்பத் துறையின் தலைநகரமாக வர்ணிக்கப்படும் பெங்களூர் தற்போது நாட்டிலேயே மிக மிக மோசமான போக்குவரத்து நெரிசல் கொண்ட இரண்டாவது நகரமாக இருக்கிறது. டெல்லிக்கு அடுத்ததாக அதிக வாகனங்களை கொண்ட நகரமும் பெங்களூர்தான். இந்த நகரில் 55.59 லட்சம் வாகனங்கள் இருக்கின்றன. முறையான திட்டமிடல் இல்லாத நகர விரிவாக்கம், குறுகலான சாலைகள், விதிமீறல்கள் போன்றவைகளால் மிக மோசமான போக்குவரத்து நெரிசலை நித்தமும் சந்தித்து வருகிறது.

01. மும்பை

01. மும்பை

நாட்டின் வர்த்தக தலைநகரமாக கருதப்படும் மும்பையின் போக்குவரத்து நெரிசலும், அந்நகரின் தலையாய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. தனியார் வாகனங்கள் மிக அதிக அளவில் இயக்கப்படுவதும் மும்பை நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு மிக முக்கிய காரணமாக கூறலாம். அதேநேரத்தில், டெல்லி, பெங்களூர், சென்னையைவிட மும்பையில் வாகன எண்ணிக்கை குறைவு என்பதையும் குறிப்பிட வேண்டும். ஆம், அங்கு 25 லட்சம் வாகனங்கள் இருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

பீக் ஹவர் டிராஃபிக் ஜாமில் உலகின் மோசமான 10 நகரங்கள்: டாம்டாம் வெளியிட்ட லிஸ்ட்!

பீக் ஹவர் டிராஃபிக் ஜாமில் உலகின் மோசமான 10 நகரங்கள்: டாம்டாம் வெளியிட்ட லிஸ்ட்!

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Top 10 Most Traffic Congested Cities In India.
Story first published: Friday, July 8, 2016, 14:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X