கெச்சப் விற்கும் ஃபோக்ஸ்வேகன்... கார் நிறுவனங்களின் இன்னொரு முகம் - சுவாரஸ்யத் தொகுப்பு

By Saravana

உங்களுக்கு விருப்பமான கார் நிறுவனம் செடான், எஸ்யூவி, பிரிமியம் கார்களை விற்பனை செய்வதை பார்த்து சந்தோஷமடைந்திருப்பீர்கள். அந்த பிராண்டு மீதும் தீராத பற்றுதல் ஏற்பட்டிருப்பதும் இயற்கையான விஷயம்.

ஆனால், காரை தவிர்த்து சில கார் நிறுவனங்கள் பல்வேறு துறைகளிலும் பிரபலமாக விளங்குகின்றன. கெச்சப் விற்பனை, ரோபோட் தயாரிப்பு, கைத்துப்பாக்கி தயாரிப்பு என பல சுவாரஸ்யமான தயாரிப்புகளை அவை தயாரித்திருக்கின்றன. அந்த வகையில், ஒவ்வொரு கார் நிறுவனமும் இதர துறைகளில் உருவாக்கிய அல்லது தயாரித்த சில சுவாரஸ்யமான தயாரிப்புகள் உங்கள் பார்வைக்காக...


10. ஃபோக்ஸ்வேகன் கெச்சப் & சாஸ்

10. ஃபோக்ஸ்வேகன் கெச்சப் & சாஸ்

உலகின் மிகப்பெரிய வாகன குழுமமான ஃபோக்ஸ்வேகன் கெச்சப் மற்றும் சாஸ் தயாரிப்பிலும் பிரபலமானது. கடந்த சில ஆண்டுகளில் கார்களைவிட அதிக அளவில் கெச்சப் மற்றும் சாஸ் பாட்டில்களை ஃபோக்ஸ்வேகன் கார் நிறுவனம் விற்பனை செய்திருக்கிறதாம்.

9. இன்டர்நேஷனல்

9. இன்டர்நேஷனல்

அமெரிக்காவை சேர்ந்த பழமையான வேளாண் கருவிகள் மற்றும் வாகன தயாரிப்பு நிறுவனமான இன்டர்நேஷனல் திடீரென குளிர்சாதனப் பெட்டிகளையும் தயாரித்து விற்பனை செய்தது. 1950களில் அமெரிக்காவின் பிரபல பிராண்டாக இருந்த இன்டர்நேஷனல் நிறுவனத்தின் டிராக்டர், பிக்கப் டிரக் மற்றும் குளிர்சாதன பெட்டி ஆகியவை பல வீடுகளில் ஒன்றாக இருந்தன.

8. ஜெனரல் மோட்டார்ஸ் கைத்துப்பாக்கி

8. ஜெனரல் மோட்டார்ஸ் கைத்துப்பாக்கி

இரண்டாம் உலகப்போரின்போது ஜெனரல் மோட்டார்ஸ் கார்களுக்கு விளக்குகளை தயாரித்த ஜெனரல் கெய்டு லேம்ப் நிறுவனம்l கைத்துப்பாக்கிகளை தயாரித்தது. இந்த நிறுவனத்தின் எம்3 சப்மரைன் கைத்துப்பாக்கிகள் மிகவும் பிரபலமானவை.

 7. ஃபோர்டு டிரைமோட்டார்

7. ஃபோர்டு டிரைமோட்டார்

விமான போக்குவரத்து அதிகரித்து வருவதை கருதி, ஃபோர்டு மோட்டார் நிறுவனர் ஹென்றி ஃபோர்டு ஸ்டவுட் மெட்டல் ஏர்ப்ளேன் என்ற விமான நிறுவனத்தில் முதலீடு செய்தார். அதன் விளைவாக உருவானதுதான் ட்ரைமோட்டார். 1926 முதல் 1933 வரை 199 விமானங்கள் தயாரிக்கப்பட்டன.

 6. பிஎம்டபிள்யூ பாப்ஸ்லெட்

6. பிஎம்டபிள்யூ பாப்ஸ்லெட்

பனிச்சறுக்கு போட்டிக்கான பாப்ஸ்லெட் வாகனத்தை அமெரிக்க அணியினருக்காக மிகவும் பிரத்யேகமாக கார்பன் ஃபைபரில் உருவாக்கித் தந்தது பிஎம்டபிள்யூ. இதுவரை தயாரிக்கப்பட்ட பாப்ஸ்லெட் வாகனங்களில் மிகவும் பிரத்யேகமானதாக கூறப்படுகிறது.

5. ஃபோர்டு வீடியோ கேம் சாதனம்

5. ஃபோர்டு வீடியோ கேம் சாதனம்

ஃபோர்டு நிறுவனத்தின் அங்கமான பில்கோ வீடியோ கேம் சாதனங்களை தயாரித்து விற்பனை செய்தது.

 4. கிறைஸ்லர் பீரங்கி

4. கிறைஸ்லர் பீரங்கி

1970களில் அமெரிக்காவின் கிறைஸ்லர் நிறுவனம் பீரங்கி தயாரிப்பிலும் இருந்தது. 1982களில் பீரங்கி தயாரிப்பை கிறைஸ்லர் நிறுத்தினாலும், அந்த நிறுவனத்தின் கே கார் எனப்படும் பீரங்கிதான் டர்பைன் எஞ்சினுடன் வந்த முதல் பீரங்கி என்பது குறிப்பிடத்தக்கது.

 3. ஹோண்டா அஸிமோ

3. ஹோண்டா அஸிமோ

ஹோண்டா கார் நிறுவனம் எந்திர மனிதன் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. அந்த நிறுவனத்தின் அஸிமோ என்ற எந்திர மனிதன் பல்வேறு வகையில் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

2. ஏர் ஹாரன்

2. ஏர் ஹாரன்

1950களில் கிறைஸ்லர் நிறுவனம் தயாரித்த படாஸ் ஏர் ரெய்டு சைரன் என்ற ஒலி எழுப்பும் சாதனம் வெளியிடும் ஒலி 40 கிமீ சுற்றளவுக்கு கேட்குமாம். இந்த சைரனில் ஹெமி வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருந்தது.

1.ஜெனரல் மோட்டார்ஸ் லூனார் ரோவர்

1.ஜெனரல் மோட்டார்ஸ் லூனார் ரோவர்

நிலவில் ஆய்வுப் பணிகளுக்காக ஜெனரல் மோட்டார்ஸ் வடிவமைத்துக் கொடுத்த லூனார் ரோவர் இந்த லிஸ்ட்டில் முதலிடத்தை பெறுகிறது. கார் போன்று பல்வேறு அம்சங்களை கொண்ட இந்த லூனார் ரோவரை போயிங் நிறுவனம் வடிவமைத்து கொடுக்க முழுமையான பொறியியல் மற்றும் தொழில்நுட்பங்களை ஜெனரல் மோட்டார்ஸ் கவனித்துக் கொண்டது.

Most Read Articles
English summary
Here are given the ten funny Non-Car Things made by Carmakers.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X