இந்தியாவின் டாப் - 10 பட்ஜெட் கார்கள் - சிறப்புத் தொகுப்பு

By Saravana

ஒரு காலத்தில் கார்கள் என்பது கனவு பொருளாகவும், செல்வந்தர்களுக்கு மட்டுமே உரித்தான உடைமையாக இருந்தது. வேகமாக மாறி வரும் இந்த காலக்கட்டத்தில், சாதாரண பொருளாதார பிரிவினருக்கும் ஏற்ற விலையிலான கார்கள் மலிந்துவிட்டன.

அந்த வகையில், ரூ.5 லட்சத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கும் பட்ஜெட் கார்களை இந்த செய்தித் தொகுப்பில் தொகுத்துள்ளோம். புதிய கார் வாங்க திட்டமிட்டிருக்கும் நடுத்தர பொருளாதார பிரிவினருக்கு இந்த செய்தித் தொகுப்பு பயனுள்ளதாக இருக்கும். ஸ்லைடரில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் டாப் -10 கார் மாடல்களை காணலாம்.


டாப் - 10 பட்ஜெட் கார்கள் பட்டியல்

டாப் - 10 பட்ஜெட் கார்கள் பட்டியல்

ரூ.5 லட்சத்திற்கும் விலையில் கிடைக்கும் கார்களின் பெட்ரோல் மாடல்களின் விபரங்கள் மட்டும் தேர்வு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. பேஸ் மாடலின் ஆன்ரோடு விலை விபரத்தை வழங்கியுள்ளோம். ஒவ்வொரு காரின் முழுமையான சிறப்பம்சங்கள், விலை, ஒப்பீடு உள்ளிட்ட தகவல்களை தெரிந்துகொள்வதற்கான இணைப்பும் தரப்பட்டுள்ளது.

10. நிசான் மைக்ரா ஆக்டிவ்

10. நிசான் மைக்ரா ஆக்டிவ்

  • சென்னை ஆன்ரோடு விலை: ரூ.4.79 லட்சம்
  • மைலேஜ்: 19.49 கிமீ/லி
  • கடந்த ஆண்டு மேம்படுத்தப்பட்ட நிசான் மைக்ரா கார் சற்று பிரிமியம் மாடலாகவும், அதில் குறைந்த சிறப்பம்சங்கள் கொண்ட மாடல் மைக்ரா ஆக்டிவ் என்ற பெயரிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. அதில், ரூ.5 லட்சத்திற்குள் பட்ஜெட்டில் சிறந்த தேர்வுகளில் ஒன்றாக இதனை கூறலாம். 67 பிஎச்பி பவரையும், 104 என்எம் டார்க்கையும் வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொண்டது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்ட இந்த காரில் 251 லிட்டர் கொள்ளளவு கொண்ட பொருட்கள் வைப்பதற்கான இடவசதி உள்ளது.

    நிசான் மைக்ரா சிறப்பம்சங்கள்

     9.செவர்லே பீட்

    9.செவர்லே பீட்

    • சென்னை ஆன்ரோடு விலை: ரூ.4.78 லட்சம்
    • மைலேஜ்: 18.6 கிமீ/லி
    • அடக்கமான, துறுதுறுப்பான வடிவமைப்பு கொண்ட இந்த காரின் பெட்ரோல் மாடல் ரூ.5 லட்சம் பட்ஜெட்டில் வாங்கிவிடலாம். இந்த காரில் 79 பிஎச்பி பவரையும், 108 என்எம் டார்க்கையும் வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. டீசல் மாடலிலும் கிடைக்கிறது. 170 லிட்டர் கொள்ளளவு கொண்ட பொருட்கள் வைப்பதற்கான இடவசதி உள்ளது.

      செவர்லே பீட் சிறப்பம்சங்கள்

      8. ஹோண்டா பிரியோ

      8. ஹோண்டா பிரியோ

      • சென்னை ஆன்ரோடு விலை: ரூ.4.76 லட்சம்
      • மைலேஜ்: 18.9 கிமீ/லி
      • இடவசதி, சிறந்த பெட்ரோல் எஞ்சின் கொண்ட இந்த காரின் டிசைன் அனைவரையும் கவரும் என்று சொல்வதற்கில்லை. இந்த காரில் 87 பிஎச்பி பவரையும், 109 என்எம் டார்க்கையும் வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த காரில் 175 லிட்டர் பொருட்களை வைப்பதற்கான இடவசதி உள்ளது.

        ஹோண்டா பிரியோ சிறப்பம்சங்கள்

        7.ஹூண்டாய் ஐ10

        7.ஹூண்டாய் ஐ10

        • சென்னை ஆன்ரோடு விலை:ரூ.4.68 லட்சம்
        • மைலேஜ்: 19.81 கிமீ/லி
        • இந்த பட்டியலில் ஹூண்டாய் ஐ10 கார் 7வது இடத்தில் உள்ளது. இந்த கார் 68 பிஎச்பி பவரையும், 99 என்எம் டார்க்கையும் வழங்கும் 1.1 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது. ஆட்டோமேட்டிக் மாடலிலும் கிடைக்கிறது. 225 லிட்டர் கொள்ளளவு கொண்ட பொருட்கள் வைப்பதற்கான இடவசதி உள்ளது. சிறப்பான டிசைன், போதுமான இடவசதி இதன் ப்ளஸ் பாயிண்டுகள்.

          ஹூண்டாய் ஐ10 சிறப்பம்சங்கள்

          6.மாருதி சுஸுகி செலிரியோ

          6.மாருதி சுஸுகி செலிரியோ

          • சென்னை ஆன்ரோடு விலை: ரூ.4.43 லட்சம்
          • மைலேஜ்:23.1 கிமீ/லி
          • ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் வந்த முதல் கார் செலிரியோ. இந்த காரில் 67 பிஎச்பி பவரையும், 90 என்எம் டார்க்கையும் வழங்கும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.235 லிட்டர் கொள்ளளவு கொண்ட பொருட்கள் வைப்பதற்கான இடவசதி உள்ளது.

            மாருதி செலிரியோ சிறப்பம்சங்கள்

            5. மாருதி வேகன் - ஆர்

            5. மாருதி வேகன் - ஆர்

            • சென்னை ஆன்ரோடு விலை: ரூ.4.35 லட்சம்
            • மைலேஜ்: 20.51 கிமீ/லி
            • டால்பாய் டிசைன் கொண்ட இந்த கார் உயரமானவர்களுக்கும் ஏற்ற சிறந்த பட்ஜெட் கார். தனது விற்பனையின் மூலம் நம்பகத்தன்மையை வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் தெரிவித்து வருகிறது. 67 பிஎச்பி பவரையும், 90 என்எம் டார்க்கையும் வழங்கும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் கிடைக்கிறது. 180 லிட்டர் கொள்ளளவு கொண்ட பொருட்கள் வைப்பதற்கான இடவசதி உள்ளது.

              மாருதி வேகன் ஆர் சிறப்பம்சங்கள்

              4.டட்சன் கோ

              4.டட்சன் கோ

              • சென்னை ஆன்ரோடு விலை: ரூ.3.56 லட்சம்
              • மைலேஜ்: 20.63 கிமீ/லி
              • டட்சன் பட்ஜெட் பிராண்டில் வெளியிடப்பட்ட முதல் கார் மாடல். கிராஷ் டெஸ்ட் முடிவுகளால் பெரும் சர்ச்சைக்கிடமான இந்த கார் மாடல் நேரடி போட்டியாளர்களைவிட சிறப்பான இடவசதி, செயல்திறன் மிக்க எஞ்சின் கொண்டது. 265 லிட்டர் கொள்ளளவு கொண்ட பொருட்கள் வைப்பதற்கான இடவசதி உள்ளது.

                டட்சன் கோ சிறப்பம்சங்கள்

                3.ஹூண்டாய் இயான்

                3.ஹூண்டாய் இயான்

                • சென்னை ஆன்ரோடு விலை: ரூ.3.41 லட்சம்
                • மைலேஜ்: 21.1 கிமீலி
                • வசதிகள், எரிபொருள் வகையை பொறுத்து 20 விதமான வேரியண்ட்டுகளில் கிடைக்கும் சின்ன கார் இயான். 55 பிஎச்பி பவரையும், 75என்எம் டார்க்கையும் வழங்கும் 814சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 215 லிட்டர் கொள்ளளவு கொண்ட பொருட்கள் வைப்பதற்கான இடவசதி உள்ளது.

                  ஹூண்டாய் இயான் சிறப்பம்சங்கள்

                   2.மாருதி ஆல்ட்டோ 800

                  2.மாருதி ஆல்ட்டோ 800

                  • சென்னை ஆன்ரோடு விலை: ரூ.2.97 லட்சம்
                  • மைலேஜ்: 22.7 கிமீ/லி
                  • இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல். 48 பிஎச்பி பவரையும், 69என்எம் டார்க்கையும் வழங்கும் 796சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 177 லிட்டர் கொள்ளளவு கொண்ட பொருட்கள் வைப்பதற்கான இடவசதி உள்ளது. இந்த கார் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொண்டதாகவும் ஆல்ட்டோ கே10 பிராண்டில் விற்பனை செய்யப்படுகிறது.

                    மாருதி ஆல்ட்டோ 800 சிறப்பம்சங்கள்

                     1. டாடா நானோ

                    1. டாடா நானோ

                    • சென்னை ஆன்ரோடு விலை: ரூ.2.34 லட்சம்
                    • மைலேஜ்: 25.4 கிமீ/லி
                    • நகர்ப்புறத்தில் ஓட்டுவதற்கு ஏற்ற கார். பெண்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் பயன்படுத்துவதற்காக இரண்டாவது கார் வாங்குவோர்க்கும் சிறந்த சாய்ஸ். 38 பிஎச்பி பவரையும், 51 என்எம் டார்க்கையும் வழங்கும் 624சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. தற்போது பவர் ஸ்டீயரிங் கொண்டதாகவும் கிடைக்கிறது.

                      டாடா நானோ சிறப்பம்சங்கள்

Most Read Articles
English summary
Here in our list is top 10 small cars one can buy for under INR 5 lakhs.
Story first published: Saturday, January 3, 2015, 15:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X