உலகின் அதிக சவால்கள் நிறைந்த டாப் - 10 மோட்டார் பந்தயங்கள்!

ரேஸ் டிராக்காக இருந்தாலும், ராலி ரேஸ் பந்தயமாக இருந்தாலும் எந்த வகை மோட்டார்ஸ்போர்ட்ஸ் பந்தயங்களிலும், ஆபத்துக்களும், சவால்களும் அதிகம். ஒவ்வொரு மோட்டார்ஸ்போர்ட்ஸ் பந்தயத்திலும் தடைகள் மற்றும் ஒவ்வொரு வகை சவால்களை எதிர்கொள்ளும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த நிலையில், ஆபத்துக்கள் நிறைந்த மோட்டார்ஸ்போர்ட்ஸ் பந்தயங்களில், அதிக ஆபத்துக்களும் மற்றும் சவால்களும் நிறைந்த உலகின் டாப் - 10 மோட்டார் பந்தயங்களை ஸ்லைடரில் வரிசைப்படுத்தியுள்ளோம்.


டாப் - 10 பட்டியல்

டாப் - 10 பட்டியல்

உலகின் சவால்கள் நிறைந்த 10 மோட்டார்ஸ்போர்ட்ஸ் பந்தய விபரங்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

10.தி கும்பால் 3000

10.தி கும்பால் 3000

குறிப்பிட்ட நாட்டு நகரங்களை இலக்காக கொண்டு நடைபெறும் ராலி ரேஸ் கார் பந்தயம் இது. 3000 மைல்களுக்கு நடைபெறும் இந்த ராலி ரேஸ் பந்தயத்தில் விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகமாகவே இருக்கிறது. அதிக தூரம் பயணிக்கும் வீரர்களின் மனநிலையில் ஏற்படும் மாற்றமே விபத்துக்களுக்கு காரணமாக கூறப்படுகிறது.

 9. ரெயின் ஃபாரஸ்ட் சேலஞ்ச்

9. ரெயின் ஃபாரஸ்ட் சேலஞ்ச்

மலேசியாவில் நடைபெறும் இந்த போட்டியில் மலைப்பாங்கான சாலைகள், சேறு, சகதி நிறைந்த சாலைகள் மற்றும் திக்குதெரியாத காட்டுப்பகுதி என பல்வேறு சவால்களை கடந்து வரும் வகையிலான பந்தயம் இது. வீரர் ஒருவருடன் வழிகாட்டி ஒருவரும் துணைக்கு செல்வார். இந்த பந்தயத்திலும் விபத்துக்களும், ஆபத்துக்களும் அதிகமே. இதே பெயரில் இந்தியாவிலும் பந்தயங்கள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

8. தி நர்பர்கிரிங் 24

8. தி நர்பர்கிரிங் 24

ஆபத்துக்களுக்கும், விபத்துக்களுக்கும் புகழ்பெற்ற நர்பர்க்கிரிங் ரேஸ் டிராக்கில் நடைபெறும் தி நர்பர்க்கிரிங் 24 என்ற கார் பந்தயமும் ஆபத்துக்களும், சவால்களும் நிறைந்தது. 25.3 கிமீ நீளம் கொண்ட இந்த ரேஸ் டிராக்கில் நடைபெறும் இந்த பந்தயத்தில் 200 கார்களும், 700 வீரர்களும் பங்கேற்கின்றனர். 24 மணிநேரத்தில் அதிக தூரத்தை சுற்றி வரும் அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும். இந்த ஆண்டு ஃபீனிக்ஸ் அணி வெற்றி பெற்றது. 24 மணி நேரத்தில் அந்த அணி வீரர்கள் 4,022.7 கிமீ தூரத்தை சுற்றி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

7. பைக்ஸ் பீக்

7. பைக்ஸ் பீக்

அமெரிக்காவின் கொலராடோ பகுதியில் நடைபெறும் பைக்ஸ் பீக் எனப்படும் மலையேற்ற கார் பந்தயம் மிகுந்த சவால் நிறைந்தது. ஏற்றமும், வளைவுகளும் நிறைந்த மலைச்சாலையில் குறிப்பிட்ட தூரத்தை குறுகிய நேரத்தில் கடக்கும் கார் அல்லது பைக் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். கர்ணம் தப்பினால் மரணம் எனும் நிலையில்தான் வீரர்கள் காரை அதிவேகத்தில் செலுத்துகின்றனர். இதே பெயரில் பல்வேறு நாடுகளில் தற்போது கார் பந்தயங்கள் நடக்கின்றன.

6. டபிள்யூஆர்சி

6. டபிள்யூஆர்சி

வேர்ல்டு ராலி சாம்பியன்ஷிப் என்று அழைக்கப்படும் இந்த கார் பந்தயத்தில் பிற கார் பந்தயங்களைவிட ஓட்டுவதற்கு அதிக மனதிடமும், சக வீரரின் ஒத்துழைப்பும் அவசியம். பள்ளம், மேடுகளிலும், வளைவுகளிலும் வேகத்தை குறைக்காமல் பறந்து செல்லும் கார்களை பார்க்கவே பெரும் கூட்டம் கூடுகிறது. இந்த போட்டியும் பெரும் ஆபத்துக்களுக்கு மத்தியிலேயே வீரர்கள் சளைக்காமல் பங்கேற்று திறமையை காட்டுகின்றனர்.

5. எர்ஸ்பெர்க்

5. எர்ஸ்பெர்க்

அதிக சவால்கள் நிறைந்த இந்த சாகச வகை பைக் பந்தயத்தில் 1,000 வீரர்கள் வரை பங்கேற்கின்றனர். ஆனால், முடிவில் எல்லைக் கோட்டை தாண்டும் வீரர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திற்கு வந்துவிடும். 2009ம் ஆண்டில் மொத்தம் 9 வீரர்கள் மட்டுமே எல்லைக்கோட்டை கடந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

4. லீ மான்ஸ் 24 ஹவர்ஸ்

4. லீ மான்ஸ் 24 ஹவர்ஸ்

இந்த பட்டியலில் 4வது இடத்தில் லீ மான்ஸ் கார் பந்தயம் இடம்பெறுகிறது. ரேஸ் டிராக்கில் நடைபெறும் இந்த பந்தயத்தில் 24 மணிநேரத்தில் அதிக தூரத்தை கடக்கும் அணி வெற்றி பெறுகிறது. கார் நிறுவனங்கள் தங்களது தொழில்நுட்ப வலிமையை பரைசாற்றுவதற்கு ஏற்ற களமாக இந்த கார் பந்தயத்தை கருதி அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன.

3 ஐல் ஆஃப் மேன் டிடி

3 ஐல் ஆஃப் மேன் டிடி

இங்கிலாந்திலுள்ள தீவுப் பகுதியில் குறுகிய சாலைகளில் நடைபெறும் இந்த பந்தயத்தில் அதிவேகத்தில் ஆபத்தை கடந்து சீறிப்பாயும் பைக்குகள் மணிக்கு 300 கிமீ வேகம் வரை செல்லும். இதுவரை இந்த பந்தயத்தில் 200 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சித் தகவலையும் கையில் தருகின்றனர்.

2. பாஜா

2. பாஜா

சவால்கள் நிறைந்த ஆஃப்ரோடு கார் பந்தயம் இது. ஆண்டுதோறும் நவம்பர் மூன்றாவது வாரத்தில் இந்த கார் பந்தயம் மெக்சிகோவில் நடைபெறுகிறது. இந்த பந்தயத்தில் கார், பைக் மற்றும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ரேஸ் கார்கள் பங்கேற்கின்றன. 1000 மைல் தூரத்தை இலக்காக கொண்ட நடைபெறும் இந்த பந்தயம் எமது பட்டியலில் இரண்டாவது இடத்தை பெறுகிறது.

1. டக்கார் ராலி

1. டக்கார் ராலி

பாரிஸ் டக்கார் என்று முன்னர் அழைக்கப்பட்ட இந்த டக்கார் ராலி பந்தயமும் ஆஃப்ரோடு என்டியூரன்ஸ் வகை மோட்டார்ஸ்போர்ட்ஸ். 5,600 மைல் தூரத்தை இலக்காக கொண்டு நடைபெறும் இந்த பந்தயத்தில் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட தூரத்தை இலக்காக வைத்து நடத்தப்படுகிறது. ஒரே நாளில் 900 கிமீ தூரத்தை கூட கடக்க வேண்டிய இலக்குடன் போட்டி நடத்தப்படும். பல்வேறு வகையான ஆஃப்ரோடு சாலைகளை கடக்க வேண்டியிருக்கும். மோசமான சாலைகள் மற்றும் மன அழுத்தம் காரணமாக வீரர்கள் சிலருக்கு மாரடைப்பு கூட ஏற்பட்டதுண்டு என்று புள்ளிவிபரம் கொடுக்கின்றனர்.

Most Read Articles
English summary
Every race has its element of danger and a certain amount of risk involved. In this list of the top 10 toughest motorsports in the world, automobiles that are specially built for this purpose are pushed to their limits and beyond.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X