கடந்த இரு தசாப்தங்களில் கண்டுபிடிக்கப்பட்ட உயரிய கார் தொழில்நுட்பங்கள்!

தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் அனைத்தும் வெகுஜன பயன்பாட்டிற்கு பரவலாகும்போதுதான் அது வெற்றி பெற்றதாக கருதப்படுகிறது. அவ்வாறு, கடந்த இரு தசாப்தங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட சில ஆட்டோமொபைல் தொழில்நுட்பங்கள் இன்று அனைத்து மக்களுக்கும் சர்வ சாதாரணமாக பெறும் விஷயமாக கிடைக்கிறது.

அவ்வாறு, கடந்த 25 ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டு, இன்று பரவலாக பெறும் சில உயரிய ஆட்டோமொபைல் தொழில்நுட்பங்களை இந்த செய்தித் தொகுப்பில் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் உங்களுக்கு வழங்குகிறது.

1992: நவீன முகப்பு விளக்குகள்

1992: நவீன முகப்பு விளக்குகள்

சாதாரண பல்புகளுடன் வட்ட வடிவில் காட்சியளித்த ஹெட்லைட்டுகள் இன்று பல கட்டங்கள் மேம்பட்டுவிட்டது. பல தசாப்தங்களாக ஒரே மாதிரியாக இருந்த ஹெட்லைட்டுகள், 1990 காலக்கட்டத்தில்தான் வடிவமைப்பிலும், தொழில்நுட்பத்திலும் மாற்றங்கள் தெரிய ஆரம்பித்தன. குறிப்பாக, 1992ம் ஆண்டில் அதிக ஒளி உமிழ்வு திறன் கொண்ட HID ஹெட்லைட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன.

 இரு தசாப்தங்களில் கண்டுபிடிக்கப்பட்ட உயரிய கார் தொழில்நுட்பங்கள்!

அதன்பிறகு, பல்வேறு தொழில்நுட்ப மேம்பாடுகளுடன் 2000ல் LED ஹெட்லைட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. அளவில் மிக சிறியதாகவும், அதிக பிரகாசத்தை வழங்குவதாகவும் இந்த எல்இடி பல்புகள் இருக்கின்றன. வெளிப்புற வெளிச்சத்தை உணர்ந்து கொண்டு சென்சார்களுடன் கூடிய ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுவிட்டன.

 இரு தசாப்தங்களில் கண்டுபிடிக்கப்பட்ட உயரிய கார் தொழில்நுட்பங்கள்!

எல்இடி ஹெட்லைட்டைவிட 1,000 மடங்கு பிரகாசத்தை அளிக்க வல்ல லேசர் ஹெட்லைட்டையும் பிஎம்டபிள்யூ அறிமுகம் செய்திருக்கிறது. எதிரில் வரும் வாகன ஓட்டிகளுக்கு கண்களுக்கு இந்த ஹெட்லைட்டுகள் கூச்சத்தை ஏற்படுத்தாது என்பதும் இதன் விசேஷ அம்சம். அடுத்த ஒரு சில ஆண்டுகளில் சாதாரண கார்களில் கூட இந்த ஹெட்லைட்டுகளை பார்க்க முடியும் என நம்பலாம்.

1995: ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல்

1995: ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல்

1970லிருந்து 1980 வரையிலான காலக்கட்டதில் கார்களின் பாதுகாப்பிற்கு வலுசேர்க்கும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் எனப்படும் பூட்டுதலில்லா பிரேக் சிஸ்டம் உள்ளிட்ட பல தொழில்நுட்பங்கள் மின்னணு தொழில்நுட்பத்தின் உதவியுடன் அறிமுகம் செய்யப்பட்டன. அவ்வாறு, கண்டுபிடிக்கப்பட்ட பாதுகாப்பு அம்சம்தான் Electronic Stablity Control எனப்படும் நவீன கார் பாதுகாப்பு தொழில்நுட்பம். அதாவது, கார் நிலைகுலைந்து கவிழ்வதை தவிர்க்கும் நுட்பம் இது.

 இரு தசாப்தங்களில் கண்டுபிடிக்கப்பட்ட உயரிய கார் தொழில்நுட்பங்கள்!

கார் சறுக்கும் ஆபத்தை சென்சார்கள் மூலமாக தெரிந்துகொண்டு, ஒவ்வொரு சக்கரத்திற்கும் தேவையான அளவு மட்டும் பிரேக் பவரை செலுத்தி, தரைப்பிடிப்பை அதிகரிப்பதுதான் இந்த தொழில்நுட்பத்தின் பணி. இதன் மூலமாக கார் கவிழும் ஆபத்திலிருந்து தப்பும். நவீன வகை ESC தொழில்நுட்பத்தில் சக்கரங்களுக்கு செல்லும் எஞ்சின் பவரை சரியான விகிதத்தில் செலுத்தும் வசதியும் இப்போது கிடைக்கிறது.

 இரு தசாப்தங்களில் கண்டுபிடிக்கப்பட்ட உயரிய கார் தொழில்நுட்பங்கள்!

1990களில் மெர்சிடிஸ், பிஎம்டபிள்யூ ஆகிய நிறுவனங்கள்தான் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தன. அதன்பிறகு, 1997லிருந்து அமெரிக்காவின் கேடில்லாக் உள்ளிட்ட கார் மாடல்களிலும் இந்த ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் தொழில்நுட்பம் அறிமுகமாகின. இப்போது, நம் நாட்டில் விற்பனையாகும் பல கார்களில் இந்த பாதுகாப்பு தொழில்நுட்பத்தை சர்வ சாதாரணமாக காண முடியும்.

1996: டார்க் வெக்டரிங் டிஃபரன்ஷியல்

1996: டார்க் வெக்டரிங் டிஃபரன்ஷியல்

அனைத்து சக்கரங்களுக்கும் எஞ்சினிலிருந்து ஆற்றலை கடத்தும் அமைப்புடைய ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட கார்களில் இந்த தொழில்நுட்பம் இன்று சர்வ சாதாரணம். முன்புறம் மற்றும் பின்புற ஆக்சில்களில் உள்ள டிஃபரன்ஷியல் எனப்படும் பற்சக்கர அமைப்பு எஞ்சினிலிருந்து கிடைக்கும் முறுக்கு விசை ஆற்றலை பிரித்தனுப்பும் பணியை செய்கிறது. ஆனால், ஒவ்வொரு சக்கரத்திற்கும் தேவையான சமயத்தில் சரியான முறுக்குவிசையை பிரித்தனுப்பும் பணியை மின்னணு முறையில் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம்தான் இந்த எலக்ட்ரானிக் டார்க் வெக்டரிங் கன்ட்ரோல்.

 இரு தசாப்தங்களில் கண்டுபிடிக்கப்பட்ட உயரிய கார் தொழில்நுட்பங்கள்!

சாதாரணமாக, 90 சதவீத முறுக்குவிசையானது முன்பக்க சக்கரங்களுக்கும், 10 சதவீதம் பின்புற வீல்களுக்கும் செலுத்தும் வகையில் இருக்கும். ஆனால், மோசமான சீதோஷ்ண நிலையில் இது 50க்கு 50 என்ற விகிதத்தில் மின்னணு கட்டுப்பாட்டு அமைப்பு மூலமாக மாற்றப்படும். இதன்மூலமாக, காரின் தரை பிடிமானமும், கையாளுமையும் மிக சிறப்பாக இருக்கும்.

 இரு தசாப்தங்களில் கண்டுபிடிக்கப்பட்ட உயரிய கார் தொழில்நுட்பங்கள்!

தற்போது பல ஸ்போர்ட்ஸ் கார் மாடல்களில் இந்த தொழில்நுட்பம் நிரந்தரமாக இடம்பிடிக்கிறது. 1990களில் முதல்முறையாக மிட்சுபிஷி நிறுவனம் இந்த தொழில்நுட்பத்தை கண்டறிந்தது. மேலும், தனது எவோலியூஷன் காரில் இந்த தொழில்நுட்ப அமைப்பை அறிமுகம் செய்தது. இப்போது லேண்ட்ரோவர் போன்ற பல மாடல்கலில் இந்த நவீன தொழில்நுட்பம் இல்லாமல் வருவதில்லை. Activ Yaw Control என்று இதனை குறிப்பிடுவதும் உண்டு.

 1996: ODB-II சாதனம்

1996: ODB-II சாதனம்

ஆட்டோமொபைல் வரலாற்றின் மிக முக்கிய தொழில்நுட்பங்களில் ஒன்று ஆன் போர்டு டயாக்னாஸ்டிக் சிஸ்டம் எனப்படும் நிகழ்நேர பழுது கண்டறிந்து எச்சரிக்கும் வசதி. தற்போது பல்வேறு நவீன தொழில்நுட்பங்களுடன் மேம்பட்டு நிற்கும் இந்த வசதி ODB-II என குறிப்பிடப்படுகிறது. இந்த நிகழ்நேர பழுது கண்டறியும் கம்ப்யூட்டர் மூலாமக காரின் எஞ்சின் இயக்கம், அதன் செயல்திறன், மைலேஜ், மாசு உமிழ்வு போன்ற பல தகவல்களை பெற முடிகிறது.

 இரு தசாப்தங்களில் கண்டுபிடிக்கப்பட்ட உயரிய கார் தொழில்நுட்பங்கள்!

இந்த ODBII வசதி மூலமாக கடந்த இரு தசாப்தங்களில் கார்களின் மைலேஜை மேம்படுத்தவும், மாசு உமிழ்வு அளவை தெரிந்துகொள்வதற்கும் கார் எஞ்சின் வடிவமைப்பு பொறியாளர்களுக்கு பெரிதும் துணைபுரிந்திருக்கிறது. இது ஒரு புரட்சிகரமான தொழில்நுட்ப கண்டுபிடிப்பு என்றால் மிகையில்லை.

1996: மின்சார கார்

1996: மின்சார கார்

மரபுசார் எரிபொருள் தீர்ந்து வரும் நிலையில், எதிர்கால போக்குவரத்திற்கு பெரிதும் நம்பியிருப்பது மின்சாரத்தில் இயங்கும் கார்களைத்தான். 1800களிலேயே பேட்டரியில் இயங்கும் மின்சார வாகனத்தை பயன்படுத்தியதாக கூறப்படும் நிலையில், நடைமுறை பயன்பாட்டிற்கு சிறந்த, அதிக அளவில் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்துடன் கூடிய முதல் மின்சார காரை அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ்தான் அறிமுகம் செய்தது. 1991ல் EV1 என்ற பெயரில் அந்த கார் அறிமுகம் செய்யப்பட்டது. ஒரு முறை பேட்டரியை சார்ஜ் செய்தால் 70 முதல் 90 மைல் தூரம் வரை செல்லும் என்று உத்தரவாதம் தரப்பட்டது.

 இரு தசாப்தங்களில் கண்டுபிடிக்கப்பட்ட உயரிய கார் தொழில்நுட்பங்கள்!

அனைத்து ஜிஎம் EV1 கார்களும் குத்தகை அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டதால், குறிப்பிட்ட ஆண்டு பயன்பாட்டிற்கு பின்னர் நிறுவனமே திரும்ப பெறும் நிலை ஏற்பட்டது. எனினும், பேட்டரியில் இயங்கும் நவீன யுக மின்சார கார்களுக்கு அடித்தளமிட்டது ஜெனரல் மோட்டார்ஸ்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. தற்போது அதே ஜெனரல் மோட்டார்ஸ் அறிமுகம் செய்திருக்கும் போல்ட் கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 240 மைல் தூரம் பயணிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

1998: புளூடூத் தொடர்பு வசதி

1998: புளூடூத் தொடர்பு வசதி

காரில் இருக்கும் இன்ஃபோடெயின்மெனட் சாதனத்துடன் கம்பி இல்லா தொழில்நுட்பத்தில் தொடர்பு ஏற்படுத்தி தரும் புளுடூத் வசதிக்கான அடிப்படை தொழில்நுட்பம் 1990களிலிருந்து அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், 2001ம் ஆண்டில்தான் முதல்முறையாக இந்த தொழில்நுட்பத்தின் அடிப்படையில் ஓட்டுனரகள், கம்பி இல்லா தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மொபைல்போன் அழைப்புகளை ஹேண்ட்ஸ் ஃப்ரீ வசதியுடன் பேசும் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு புளுடூத் தொடர்பு அவசியமாக இருக்கிறது.

 1998: உயிர் காக்கும் காற்றுப் பை [ஏர்பேக்]

1998: உயிர் காக்கும் காற்றுப் பை [ஏர்பேக்]

1950களில் ஏர்பேக் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் உயிர் காக்கும் காற்றுப் பைகள் கார்களில் கொடுக்கும் ஆராய்ச்சி துவங்கியது. அதன்பிறகு, இந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்தி, நடைமுறைக்கு சாத்தியப்படுத்துவதற்கு ஃபோர்டு, மெர்சிடிஸ் பென்ஸ் போன்ற பல நிறுவனங்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டன. அதன் பயனாக, 1980களில் மெர்சிடிஸ் பென்ஸ் கார்களில் ஏர்பேக்கை பொருத்தியது.

 இரு தசாப்தங்களில் கண்டுபிடிக்கப்பட்ட உயரிய கார் தொழில்நுட்பங்கள்!

1990களில் போர்டு நிறுவனம் அமெரிக்காவில் விற்பனையாகும் தனது அனைத்து கார்களிலும் ஏர்பேக்கை நிரந்தர பாதுகாப்பு வசதியாக வழங்கியது. அதன்பிறகு, விபத்துக்களில் சிக்கும் பல்லாயிரக்கணக்கானோரை ஏர்பேக்குகள் காப்பாற்றியிருக்கின்றன. அதேபோன்று, தொழில்நுட்ப பிரச்னைகளால் ஏர்பேக் மூலமாக காயமடைந்தோரும் உண்டு.

 1998: ஹைபிரிட் கார்

1998: ஹைபிரிட் கார்

அதிக எரிபொருள் சிக்கனத்தையும், போதிய செயல்திறனையும் ஒருங்கே பெறுவதற்கான ஆகச் சிறந்த கண்டுபிடிப்புதான் இந்த ஹைபிரிட் எரிபொருள் நுட்பம். பெட்ரோல்/ டீசல் எஞ்சினுடன் மின் மோட்டாரை இணைந்து செயலாற்ற செய்வதே இந்த ஹைபிரிட் கார் தொழில்நுட்பம்.

 இரு தசாப்தங்களில் கண்டுபிடிக்கப்பட்ட உயரிய கார் தொழில்நுட்பங்கள்!

1998ம் ஆண்டு முதல்முறையாக டொயோட்டா பிரையஸ் காரில் இந்த தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டது. 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் பேட்டரியில் இயங்கும் மின் மோட்டாருடன் இந்த கார் வந்தது. இதன்மூலமாக, அதிக எரிபொருள் சிக்கனத்தை பெறுவதற்கு ஏதுவானது. ஹைபிரிட் தொழில்நுட்ப புரட்சிக்கு வித்திட்ட டொயோட்டா பிரையஸ் கார் விற்பனையில் 4 மில்லியனை தாண்டியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

 1998: ஸ்மார்ட் சாவி

1998: ஸ்மார்ட் சாவி

Smart key என்று அழைக்கப்படும் காரை இயக்குவதற்கான சாவி தற்போது பல கார்களில் சாதாரண விஷயமாகிவிட்டது. பாக்கெட்டில் இந்த சாவியை வைத்திருந்தால் போதும். பொத்தானை அழுத்தி கார் எஞ்சினை ஸ்டார்ட் செய்வது, காரின் அதிகபட்ச வேகத்தை குறைத்து நிர்ணயிப்பது, கதவுகளை தானாக திறப்பது என இந்த ஸ்மார்ட் சாவிகளின் பயன்கள் ஏராளம். ஆனால், இந்த ஸ்மார்ட் சாவி எப்போது முதல்முறையாக வந்தது தெரியுமா?

 இரு தசாப்தங்களில் கண்டுபிடிக்கப்பட்ட உயரிய கார் தொழில்நுட்பங்கள்!

கடந்த 1998ல் முதல்முறையாக மெர்சிடிஸ் பென்ஸ் கார்களில்தான் இந்த ஸ்மார்ட் சாவி அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது, கிரெடிட் கார்டு அளவு இருந்த ஸ்மார்ட் சாவி இப்போது வடிவத்தில் சுருங்கி, வசதிகளில் மேம்பட்டு இருக்கிறது.

1999: ரேடார் க்ரூஸ் கன்ட்ரோல்

1999: ரேடார் க்ரூஸ் கன்ட்ரோல்

நெடுஞ்சாலைகளில் செல்லும்போது ஓட்டுனருக்கு ஓய்வாக காரை செலுத்துவதற்கு க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் உதவுகிறது. ஓட்டுனர் ஆக்சிலரேட்டரை கொடுக்க வேண்டியதில்லை. குறிப்பிட்ட வேகத்தை க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டத்தில் நிர்ணயித்துவிட்டால், அதே சீரான வேகத்தில் கார் தானாக செல்லும். இந்த தொழில்நுட்பம் இன்று பல கட்ட வளர்ச்சியுடன் பிரம்மிக்க வைக்கிறது. 2000ம் ஆண்டு காலக்கட்டத்தில் ரேடார் தகவல் அடிப்படையில் இயங்கும் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் பிரபலமானது. அதாவது, முன்னால் செல்லும் காருடன் பாதுகாப்பான இடைவெளியில் காரை செலுததும் வசதிதான் இது. இதற்கு ஏற்ப காரின் வேகத்தை தானாக கூட்டிக் குறைக்கும் வசதி கொண்டது. இந்த வசதி 2000 மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் காரில் அறிமுகமானது.

 இரு தசாப்தங்களில் கண்டுபிடிக்கப்பட்ட உயரிய கார் தொழில்நுட்பங்கள்!

தற்போது இதே தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டு தானியங்கி முறையில் காரை விபத்திலிருந்து காக்கும் கொலிஷன் அவாய்டு தொழில்நுட்பமும் வந்துவிட்டது. ஒருவேளை கார் மோதும் அபாயம் ஏற்பட்டால், தானியங்கி பிரேக் மூலமாக காரை நிறுத்தும். தற்போது இந்த தொழில்நுட்பங்களின் மேம்பட்ட வடிவமாக டிரைவரில்லாமல் இயங்கும் கார்கள் தயாரிக்கப்படுகின்றன.

 2000: ஜிபிஎஸ் நேவிகேஷன்

2000: ஜிபிஎஸ் நேவிகேஷன்

ஒரு காலத்தில் வழிகேட்டு செல்வதே பயணத்தை பல மணிநேரம் கூடுதலாக்கிவிடும். வழிகேட்கும்போது அறிமுகமில்லாதவர்களால் ஆபத்தையும் விலைக்கு வாங்கும் நிலை இருந்தது. இந்த பிரச்னைகளுக்கு அருமருந்தான கண்டுபிடிப்புதான் ஜிபிஎஸ் நேவிகேஷன்.

 இரு தசாப்தங்களில் கண்டுபிடிக்கப்பட்ட உயரிய கார் தொழில்நுட்பங்கள்!

செயற்கைகோள் உதவியுடன் காரில் இருக்கும் நேவிகேஷன் சாதனம், எந்த இடத்திற்கு செல்ல வேண்டுமோ அந்த இடத்தை துல்லியமாகவும், சரியான நேரத்தில் சென்றடைவதற்கு வழிகாட்டும். தவிரவும், வழியில் உள்ள போக்குவரத்து நெரிசல் குறித்த எச்சரிக்கை, ஓட்டல்கள், பெட்ரோல் நிலையம், பொழுதுபோக்கு இடங்கள் குறித்த பல தகவல்களை இப்போது பெற முடிகிறது. பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரில் இந்த வசதி அறிமுகமானது. இப்போது வெளிச்சந்தையில் மலிவு விலைக்கு இந்த சாதனங்கள் கிடைக்கின்றன.

2000: டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம்

2000: டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம்

டயரில் காற்றழுத்தம் சரியான அளவில் இருக்காவிடில் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். மைலேஜ் பிரச்னை, டயர் வெடிக்கும் பிரச்னை என்று பாக்கெட்டிற்கும், உயிருக்கும் கேடு விளைவிக்கும் வாய்ப்புள்ளது. எனவே, டயரின் காற்றழுத்தம் சரியாக இருக்கிறதா என்பது குறித்து சென்சா் உதவியுடன் எச்சரிக்கும் வசதிதான் இந்த டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம்.

இரு தசாப்தங்களில் கண்டுபிடிக்கப்பட்ட உயரிய கார் தொழில்நுட்பங்கள்!

1980களில் போர்ஷே 959 காரில் அறிமுகமான இந்த வசதி, 1990களில் மேலை நாடுகளில் பரவலாக அறிமுகமானது. 2000ம் ஆண்டிலிருந்து இந்தியா உள்ளிட்ட வளரும் நாட்டு கார் மார்க்கெட்டுகளிலும் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது மேலை நாடுகளில் இந்த வசதி நிரந்தர பாதுகாப்பு விஷயமாக சேர்க்க வேண்டியது கட்டாயம். இப்போது சில கார்களில் தானியங்கி முறையில் டயரில் காற்றழுத்ததை நிரப்பும் வசதியுடன் மேம்பட்டிருக்கிறது.

 2002: ரியர் வியூ பார்க்கிங் கேமரா

2002: ரியர் வியூ பார்க்கிங் கேமரா

காரை பின்னால் எடுக்கும்போது, பின்புறத்தில் இருக்கும் பொருட்களையும், அங்கு நிற்பவர்களையும் ஓட்டுனர் முழமையாக காண இயலாது. இதனால், விபத்து ஏற்படும் வாய்ப்பு அதிகம். இதற்கு தீர்வாக, பின்னால் இருக்கும் பொருட்களை எளிதாக காணும் வகையில், கேமரா ஒன்றை பொருத்திவிடுவது சரியான தீர்வாக கருதப்பட்டது. அதற்கு ஏதுவாக ஓட்டுனர் எளிதாக பார்த்து ரிவர்ஸ் எடுப்பதற்காக டேஷ்போர்டில் திரையும் கொடுக்கப்பட்டது.

 இரு தசாப்தங்களில் கண்டுபிடிக்கப்பட்ட உயரிய கார் தொழில்நுட்பங்கள்!

இதனால், தற்போது ரிவர்ஸ் எடுப்பது மிக எளிதாகியிருக்கிறத. 2002ம் ஆண்டில் நிசான் நிறுவனத்தின் சொகுசு கார் பிராண்டா இன்ஃபினிட்டி நிறுவனம் தனது க்யூ45 சொகுசு காரில் இந்த வசதியை அறிமுகம் செய்தது. அதனைத் தொடர்ந்து, பின்புறம் மட்டுமல்லாது, காரை சுற்றிலும் ஓட்டுனர் பார்த்து ஓட்டுவதற்கு வசதியாக அரவுண்ட் வியூ மானிட்டர் என்ற வசதியை நிசான் அறிமுகம் செய்தது.

2003: டியூவல் க்ளட்ச் டிரான்ஸ்மிஷன்

2003: டியூவல் க்ளட்ச் டிரான்ஸ்மிஷன்

சாதாரண ஆட்டோமேட்டிக் கார்களின் தொழில்நுட்பத்தில் இருந்த குறைகளை களையும் உருவாக்கப்பட்டதுதான் டியூவல் க்ளட்ச் டிரான்ஸ்மிஷன். அதாவது, ஒரு க்ளட்ச் 1,3 மற்றும் 5 ஆகிய ஒற்றப்படை வரிசையில் அமைந்த கியர்களையும், மற்றொரு க்ளட்ச் அமைப்பானது 2,4 மற்றும் 6 ஆகிய இரட்டை வரிசையில் அமைந்த கியர்களையும் கட்டுப்படுத்துவதான் டியூவல் க்ளட்ச் தாத்பரியம். ஆட்டோமேட்டிக் கார்களில் கியர் மாற்றங்களின்போது எழுந்த கால அளவைவிட விரைவாக கியர்களை இந்த ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாற்றும் என்பதால் சிறப்பான செயல்திறனை இந்த ஆட்டோமேட்டிக் கார்கள் பெற்றன. மேலும், மேனுவல் கியர்பாக்ஸ் கார்களை விடவும் விரைவாக இருக்கும் இதன் கியர் மாற்றம்.

 இரு தசாப்தங்களில் கண்டுபிடிக்கப்பட்ட உயரிய கார் தொழில்நுட்பங்கள்!

1980களில் பந்தய கார்களில் இந்த டியூவல் க்ளட்ச் டிரான்ஸ்மிஷன் பிரபலமடைந்தது. தற்போது ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டிஎஸ்ஜி என குறிப்பிடப்படும் டியூவல் க்ளட்ச் டிரான்ஸ்மிஷன் தொழில்நுட்ப ரீதியில் மிகவும் மேம்பட்டதாக இருக்கிறது. தற்போது லம்போர்கினி, மெர்சிடிஸ் பென்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் பல செயல்திறன்மிக்க கார்களை வடிவமைக்கும் நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன.

2008: டர்போசார்ஜர்

2008: டர்போசார்ஜர்

1960களிலிருந்து எஞ்சின் திறனை அதிகரிக்கும் டர்போசார்ஜர்கள் பயன்படுத்தப்படுகின்றன. சாதாரண எஞ்சின்களில் வளி மண்டலத்தின் அழுத்தத்தின் மூலமாக பிரத்யேக அமைப்பு மூலமாக எஞ்சினுக்குள் வரும் காற்றில் இருக்கும் ஆக்சிஜன் மூலமாக எரிபொருளை எரிக்கப்படும். ஆனால், டர்போசார்ஜர்களில் இருக்கும் விசிறிகள் அதிவேகத்தில் சுழன்று அதிக காற்றை எஞ்சினுக்குள் செலுத்தி, எஞ்சினின் செயல்திறனை அதிகரிக்கச் செய்யும். புகைப்போக்கி அமைப்பிலிருந்து அதிக அழுத்தத்தில் வெளியேறும் கழிவுக் காற்றின் அழுத்தத்தில் டர்போசார்ஜரில் உள்ள விசிறி இயக்கப்படுகிறது.

 இரு தசாப்தங்களில் கண்டுபிடிக்கப்பட்ட உயரிய கார் தொழில்நுட்பங்கள்!

இதுவே சூப்பர்சார்ஜர் என்றால், எஞ்சின் கிராங்சாப்டிலிருந்து விசிறி இணைக்கப்பட்டிருக்கும். இந்த டர்போசார்ஜர் பொருத்துவதன் மூலமாக, எஞ்சினில் சிலிண்டர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய அவசியம் தவிர்க்கப்பட்டது. இதனால், சிறிய வடிவிலான எஞ்சின்களையே அதிக செயல்திறன் மிக்கதாக மாற்றும் வாய்ப்பு கிட்டியது. இந்த டர்போசார்ஜர்கள் பல தசாப்தங்களாக மாற்றங்களை சந்தித்து வந்தது. 2008ம் ஆண்டுகளில் டர்போசார்ஜர் குறிப்பிட்டத்தக்க தொழில்நுட்ப மாறுதல்களை பெற்றன. ஃபோர்டு நிறுவனத்தின் 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் எஞ்சின் கூட சிறந்த டர்போசார்ஜர் எஞ்சினுக்கு உதாரணமாக இருக்கிறது.

Most Read Articles
English summary
Read in Tamil: Top 15 Automotive Tech Milestones of the Last 25 years.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X