நீர், நிலம், ஆகாயத்தில் அதிவேக சாதனைகள் படைத்த வாகனங்கள்!!

வேலையிலாகட்டும், சாலையிலாகட்டும் அதிவேகம் என்பது பலருக்கும் பிடித்த ஒன்று. அவ்வாறு, உலகில் இதுவரை அதிவேக சாதனைகளை புரிந்த மோட்டார் வாகனங்களை பற்றிய தகவல் திரட்டை இங்கே காண இருக்கிறோம்.

நீர், நிலம், ஆகாயம் என அனைத்திலும் அதிவேக சாதனைகளை புரிந்த, மெய்சிலிர்க்க வைக்கும் இந்த மோட்டார் வாகனங்கள் பற்றிய முக்கிய தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

01. உலகின் அதிவேக ஆள் இல்லா விண்கலம்

01. உலகின் அதிவேக ஆள் இல்லா விண்கலம்

சூரியன் குறித்து ஆய்வு செய்வதற்காக நாசா அனுப்பிய விண்கலம். முன்னதாக, அனுப்பப்பட்ட ஹீலியோஸ்- 1 விண்கலத்துக்கு ஆய்வில் கூடுதல் வலுசேர்க்க இந்த ஹீலியோஸ் - 2 விண்கலத்தை தயாரித்து அனுப்பியது நாசா. மனிதர் கட்டுப்பாடு இல்லாமல் செல்லக்கூடிய இந்த விண்கலம் ஒரு வினாடிக்கு 70 கிமீ வேகத்தில், அதாவது மணிக்கு 2,52,792 கிமீ வேகத்தில் சீறிச் சென்று சாதனை படைத்தது. பொறியியல் துறையில் இப்போது உள்ள அளவு, நவீன வசதிகள் இல்லாத நிலையில், கடந்த 1976ல் இந்த விண்கலம் இந்த சாதனையை படைத்தது. சுமார் 3 மில்லியன் கிலோமீட்டர் தூரம் இந்த விண்கலம் பயணித்ததும் குறிப்பிடத்தக்கது. 1985 வரை தகவல்களை அனுப்பியது.

02. உலகின் அதிவேக விண்கலம்

02. உலகின் அதிவேக விண்கலம்

கடந்த 2002ம் ஆண்டு கின்னஸ் உலக சாதனைகளில் அப்போலோ 10 விண்கலத்தின் அதிவேக சாதனையும் இடம்பெற்றது. அதாவது, மனிதர்கள் மூலம் அதிவேகத்தில் செலுத்தப்பட்ட விண்கலம் என்ற பெருமையை இந்த விண்கலம் பெற்றது. நிலவில் மனிதன் கால் பதிக்கும் திட்டத்தின் ஒத்திக்கைக்காக தயாரிக்கப்பட்ட மாடல்தான் இந்த அப்போலோ 10. இதனை தாமஸ் ஸ்டாஃபோர்டு, ஜான் டபிள்யூ யங் மற்றும் யூஜின் செர்னன் ஆகியோர் இந்த விண்கலத்தை செலுத்தினார்கள். மணிக்கு 39,896 கிமீ வேகத்தில் இந்த விண்கலம் பறந்தது.

03. அதிவேக படகு

03. அதிவேக படகு

ஸ்பிரிட் ஆஃப் ஆஸ்திரேலியா என்ற அதிவேக படகு கடந்த 1978ம் ஆண்டு அக்டோபர் 8ந் தேதி ஓர் புதிய உலக சாதனையை படைத்தது. அதாவது, மணிக்கு 511.11கிமீ வேகத்தில் சென்று இந்த படகு புதிய அதிவேக சாதனையை படைத்தது. இதனை கென் வார்பி செலுத்தினார். இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

04. அதிவேக விமானங்கள்

04. அதிவேக விமானங்கள்

ஆள் இல்லா விமானம்

எச்டிவி-2 என்ற பெயரிடப்பட்ட இந்த ஆள் இல்லா விமானம், 2010ம் ஆண்டு ஏப்ரல் 22ந் தேதி இன்த விமானம் மணிக்கு 21,245 கிமீ வேகத்தில் பறந்து சாதனை படைத்தது.

பைலட் இயக்கிய அதிவேக விமானம்

வட அமெரிக்கன் எக்ஸ்-15 விமானம்தான் பைலட் மூலமாக இயக்கப்பட்ட உலகின் அதிவேகத்தை பதிவு செய்த விமானம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. கடந்த 1967ம் ஆண்டு அக்டோபர் 3ந் தேதி மணிக்கு 7,258 கிமீ வேகத்தில் பறந்து இந்த விமானம் உலக சாதனை படைத்தது. இதுவும் கின்னஸ் புத்தகத்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.

05. அதிவேக ரயில்கள்

05. அதிவேக ரயில்கள்

உலகின் அதிவேக ரயில் என்ற பெருமையை ஜப்பானின் மாக்லேவ் ரயில் பெற்றிருக்கிறது. கடந்த மாதம் 21ந் தேதி மணிக்கு 603 கிமீ வேகத்தில் சென்று இந்த அதிவேக உலக சாதனையை மாக்லேவ் ரயில் படைத்தது. இது காந்த விசையால் இயங்கும் சக்கரங்கள் இல்லாத ரயில்.

அதுவே, சக்கரங்கள் பொருத்தப்பட்ட ரயில் வகையில், டிஜிவி பிஓஎஸ் வி150 என்ற ரயில் மணிக்கு 574.8 கிமீ வேகத்தை தொட்டு சாதனை படைத்தது. கடந்த 2007ம் ஆண்டு ஏப்ரல் 3ந் தேதி இந்த சாதனை படைக்கப்பட்டது.

06. உலகின் அதிவேக கார்

06. உலகின் அதிவேக கார்

ராக்கெட் கார் என்று அழைக்கப்படும் இந்த அதிவேக வாகனம் மணிக்கு 1,228 கிமீ வேகத்தில் பறந்து தரையில் அதிவேகத்தில் சென்ற வாகனம் என்ற பெருமையை பெற்றது. இந்த வாகனத்தை உயிரையும் துச்சமென மதித்து, ஆண்டி க்ரீன் என்பவர் இயக்கினார். இந்த அதிவேக சாதனையை எஃப்ஐஏ அமைப்பு அங்கீகரித்தது. இருதிசைகளில் வரையறுக்கப்பட்ட தூரத்தில் சென்ற வேகத்தின் சராசரியே அதிவேக சாதனையாக பதிவு செய்யப்பட்டது.

07. அதிவேக மோட்டார்சைக்கிள்

07. அதிவேக மோட்டார்சைக்கிள்

ஏசிகே அட்டாக் என்ற விசேஷமாக தயாரிக்கப்பட்ட ஸ்ட்ரீம்லைனர் மோட்டார்சைக்கிள் மணிக்கு 605.697 கிமீ வேகத்தில் பறந்து புதிய உலக சாதனை படைத்தது. இந்த மோட்டார்சைக்கிளை ராக்கி ராபின்சன் இயக்கினார். கடந்த 2010ம் ஆண்டு செப்டம்பர் 25ந் தேதி இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. இதனையும் எஃப்ஐஏ அமைப்பு அங்கீகரித்திருக்கிறது.

 08. ஜேசிபி டீசல்மேக்ஸ்

08. ஜேசிபி டீசல்மேக்ஸ்

முந்தைய ஸ்லைடில் பார்த்த த்ரஸ்ட் எஸ்எஸ்சி பெட்ரோல் ஜெட் எஞ்சினில் இயங்கக்கூடியது. ஆனால், இது டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட வாகனம். இதனையும் ஆண்டி க்ரீன்தான் இயக்கினார். கடந்த 2006ம் ஆண்டு ஆகஸ்ட் 23ந் தேதி இந்த வாகனம் அதிவேக சாதனையை படைத்தது. அதிவேக சாதனைக்காக தயாரிக்கப்பட்ட இந்த விசேஷ வாகனம் மணிக்கு 563.995 கிமீ வேகத்தில் பறந்தது. இந்த அதிவேக சாதனையை எஃப்ஐஏ அமைப்பு அங்கீகரித்தது.

 09. பக் - ஐ புல்லட்

09. பக் - ஐ புல்லட்

இது மின் மோட்டாரில் இயங்கி அதிவேக சாதனையை படைத்த வாகனம். கடந்த 2010ம் ஆண்டு ஆகஸ்ட் 24ந் தேதி மணிக்கு 495.140 கிமீ வேகத்தில் சென்று இந்த மின்சார வாகனம் புதிய உலக சாதனையை நிகழ்த்தியது. ரோஜர் ஸ்ரோவர் இயக்கினார். இந்த சாதனையை எஃப்ஐஏ அமைப்பு அங்கீகரித்தது.

10. புகாட்டி வேரான் சூப்பர் ஸ்போர்ட்

10. புகாட்டி வேரான் சூப்பர் ஸ்போர்ட்

உலகின் அதிவேக தயாரிப்பு நிலை கார் மாடல் என்ற பெருமையை புகாட்டி வேரான் பெற்றது. கடந்த 2010ம் ஆண்டு ஜூலை மாதம் மணிக்கு 431 கிமீ வேகத்தை தொட்டு இந்த சாதனையை வசப்படுத்தியது. இதனை பியரி ஹென்றி ராஃப்னல் ஓட்டினார். இந்த அதிவேக சாதனையை கின்னஸ் புத்தகம் அங்கீகரித்தது.

 11. ரிமோட் கன்ட்ரோல் கார்

11. ரிமோட் கன்ட்ரோல் கார்

உலகின் அதிவேக ரிமோட் கன்ட்ரோல் கார் என்ற பெருமையை ஆர்சி புல்லட் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 25ந் தேதி இந்த ரிமோட் கார் மணிக்கு 325.12 கிமீ வேகத்தில் சென்று ஆச்சரியப்படுத்தியது. இதனை நிக் கேஸ் என்பவர் இயக்கினார். இந்த சாதனையை கின்னஸ் புத்தகம் அங்கீகரித்துள்ளது.

12. ஆடி ஆர்எஸ்6

12. ஆடி ஆர்எஸ்6

பனிக்கட்டி படர்ந்த தரையில் அதிவேகத்தில் சென்ற கார் என்ற பெருமையை ஆடி ஆர்எஸ்6 கார் பெற்றிருக்கிறது. கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் 6ந் தேதி இந்த கார் மணிக்கு 335.713 கிமீ வேகத்தில் சென்று புதிய உலக சாதனையை படைத்தது. இந்த காரை ஜானி லெய்டினென் இயக்கினார். எஃப்ஐஏ அமைப்பு இந்த அதிவேக சாதனையை அங்கீகரித்துள்ளது.

13. அதிவேக மோட்டார்சைக்கிள்

13. அதிவேக மோட்டார்சைக்கிள்

உலகின் அதிவேக தயாரிப்பு நிலை பைக் என்ற பெருமையை எம்வி அகஸ்ட்டா எஃப்4 ஆர் பைக் பெற்றிருக்கிறது. கடந்த 2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த சாதனை யை நிகழ்ச்சியது எம்வி அகஸ்ட்டா எஃப்4 ஆர் பைக். மணிக்கு 30.2.116 கிமீ வேகத்தை தொட்டு சாதனை புரிந்த இந்த பைக்கை உலகின் அதிவேக தயாரிப்பு நிலை பைக் மாடலாக போனிவில் தேசிய ஸ்பீடுவீக் அமைப்பு அங்கீகரித்தது.

14. உலகின் அதிவேக மிதிவண்டி

14. உலகின் அதிவேக மிதிவண்டி

இது சிறந்த ஏரோடைனமிக் ஷெல் உடையதாக வடிவமைக்கப்பட்ட விசேஷ மிதிவண்டி. மணிக்கு 133.78 கிமீ வேகத்தை இந்த மிதிவண்டி சாதனை படைத்தது. கடந்த 2013ம் ஆண்டு மார்ச் 26ந் தேதி இந்த அதிவேக சாதனை படைக்கப்பட்டது. செபாஸ்டியன் போவியர் இந்த மிதிவண்டியை ஓட்டி சாதனை படைத்தார். சர்வதேச மிதிவண்டி வாகன கூட்டமைப்பு இந்த சாதனையை அங்கீகரித்தது.

15. உலகின் அதிவேக பீரங்கி வண்டி

15. உலகின் அதிவேக பீரங்கி வண்டி

சுழல் பல்சக்கரங்களுடன் அதிவேகத்தில் சென்ற வாகனம் என்ற பெருமையை இங்கிலாந்தின் எஃப்வி101 ஸ்கார்ப்பியான் பீரங்கி வண்டி பெற்றிருக்கிறது. கடந்த 2002ம் ஆண்டு மார்ச் 26ந் தேதி இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. கின்னஸ் புத்தகம் இந்த சாதனையை அங்கீகரித்துள்ளது.

இதர செய்திகள்

இதர செய்திகள்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Top 15 Fastest Man Made Vehicles List.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X