உலகின் வித்தியாசமான டாப்- 5 கஸ்டமைஸ் பைக்குகள்!!

By Saravana

சொந்த விருப்பத்தையும், பிறரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சிலர் பைக்குகளை கஸ்டமைசேஷன் செய்கின்றனர். அதில், சில பைக்குகள் முழுக்க முழுக்க உதிரிபாகங்களை கொண்டு புதிதாக உருவாக்கப்படுகின்றன.

சில பைக்குகளில் சில மாற்றங்களை செய்து வாங்குகின்றனர். இந்த நிலையில், வித்தியாசமான டிசைனில் உருவாக்கப்பட்ட சில பைக்குகள் உலக அளவில் பெரிய அளவில் பேசப்பட்டன. அதுபோன்று பேசப்பட்ட உலகின் டாப்- 5 கஸ்டமைஸ் பைக்குகளை ஸ்லைடரில் வழங்கியுள்ளோம். அவற்றின் டிசைனும், சிலவற்றின் விலையும் வியக்க வைக்கின்றன.

 பிளாக் ப்யூட்டி

பிளாக் ப்யூட்டி

1998ல் அமெரிக்காவின் தேசிய மோட்டார்சைக்கிள் கூட்டமைப்பு நடத்திய பந்தயத்தில் சாம்பியனான ரோலண்ட் சான்ட்ஸ், ரேஸ் உலகிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் தனது கஸ்டமைசேஷன் செய்யும் நிறுவனம் மூலம் பல பைக்குகளை வடிவமைத்து வருகிறார். அதில், மிகச்சிறப்பானதாக பெரும் ரசிகர்களை பெற்ற பைக் மாடல் இது. பிளாக் ப்யூட்டி என்ற பெயரிலான இந்த பைக்கில் 90 பிஎச்பி ஆற்றலை வழங்கும் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. கருப்பு நிறத்திலான இந்த பைக்கில் ஆபரணம் பூட்டியது போன்று ஆங்காங்கே தங்க நிற கலவை கொடுக்கப்பட்டுள்ளது. இதில், ட்யூபியூலர் ஸ்டீல் ஃப்ரேம் உள்ளதால் இலகு எடை கொண்டதாக இருக்கிறது. இதனை தயாரிக்க 4 மாதங்கள் பிடித்ததாம். விலையை கேட்டால்தான் தலைசுற்றுகிறது. லட்சங்களில் அல்ல, ஒரு கோடியை தாண்டுகிறது.

ஸ்நாட்ச்

ஸ்நாட்ச்

இந்த பைக்கை பிரபல பைக் டிசைனர் சத்யகிராஸ் வடிவமைத்த மாடல். உலகின் இரண்டாவது சிறந்த கஸ்டமைஸ் செய்யப்பட்ட மாடலாக கூறப்படுகிறது. இந்த பைக்கை ஆர்டரின் பேரில் 6 மாதங்களில் வடிவமைத்து டெலிவிரி கொடுத்தனர். இதில், 100 பிஎச்பி திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்திய மதிப்பில் ரூ.52 லட்சம் மதிப்பு கொண்டது.

ஜிப்ஸி சோல்

ஜிப்ஸி சோல்

இத்தாலியை சேர்ந்த ஹெட்பேங்கர் நிறுவனத்தின் தயாரிப்பு இது. ஜிப்ஸி சோல் என்று பெயரிடப்பட்ட இந்த பைக்கில் 1,500சிசி எஞ்சினும், 6 கியர் பாக்ஸும் பொருத்தப்பட்டிருக்கிறது. இது இந்திய மதிப்பில் ரூ.18 லட்சம் மதிப்பு கொண்டது.

ஹாரியர்

ஹாரியர்

மிக வித்தியாசமான வடிவமைப்பு கொண்ட இந்த பைக்கை ஸ்வீடனை சேர்ந்த ஸ்டெல்லன் ஈஜ்லேண்ட் என்பவர் வடிவமைத்துள்ளார். பிஎம்டபிள்யூ ஆர்1200எஸ் பைக்கில் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது. ஹாரியர் என்று பெயரிடப்பட்ட இந்த பைக்கை 5 மாதங்களில் வடிவமைத்து கொடுத்துள்ளனர். 130 பிஎச்பி ஆற்றல் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

புரொட்டோ ஸ்லக்

புரொட்டோ ஸ்லக்

பிரபல டிசைனர் ஃப்ரெட் டர்பன் கைவண்ணத்தில் உருவான கஸ்டமைஸ் பைக் இது. இது இந்திய மதிப்பில் ரூ.45 லட்சம் விலை கொண்டது. இதில், 130 பிஎச்பி ஆற்றலை அளிக்கும் 2,200சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த பைக்கும் ட்யூபியூலர் ஃப்ரேம் கொண்டதால் இலகு எடை கொண்டது.

இந்த 5 பைக்குகளில் உங்களை கவர்ந்த பைக் மாடல் எது?

Most Read Articles
Story first published: Monday, April 21, 2014, 12:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X