மலிவான கட்டணத்தில் சிறந்த சேவையளிக்கும் டாப்-10 விமான நிறுவனங்கள்!

இன்றைய பரபரப்பான உலகில் விமான பயணங்கள் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. குறித்த இடத்திற்கு விரைவாகவும், எளிதாகவும் சென்றடைவதற்கு விமான பயணங்கள் இன்றிமையாததாகிவிட்டன. அதேவேளை, பிற போக்குவரத்தை காட்டிலும் விமான பயணங்களுக்கான கட்டணங்கள் அதிகம் என்பதையும் மறுக்க இயலாது. இருப்பினும், சில நிறுவனங்கள் குறைந்த கட்டணத்தில் சிறப்பான சேவையளித்து வருகின்றன.

அதை கண்டறியும் விதத்தில் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், உலக அளவில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சேவையளிக்கும் 245 விமான நிறுவனங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு, அதில் குறைவான கட்டணத்தில் சேவையளிக்கும் சிறந்த நிறுவனங்களை தேர்வு செய்து பட்டியலாக வெளியிட்டுள்ளனர். அதில் மிக முக்கிய இடங்களில் இந்தியாவில் சேவையளிக்கும் நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன.


இந்திய நிறுவனங்களுக்கும் இடம்

இந்திய நிறுவனங்களுக்கும் இடம்

சமீபத்தில் இந்தியாவில் சேவையை துவங்கிய ஏர்ஏசியா நிறுவனமும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது. அடுத்தடுத்த ஸ்லைடுகளில் டாப்-10 மலிவு கட்டண விமான நிறுவனங்களின் பட்டியலை காணலாம்.

10. ஸ்கூட்

10. ஸ்கூட்

சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஸ்கூட் நிறுவனம் பட்டியலில் 10வது இடத்தை பிடித்தது. கடந்த 2011ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிறுவனம் கடந்த 2012ம் ஆண்டு ஜூன் முதல் சேவையை துவங்கியது. 12 இடங்களுக்கு 6 விமானங்களை கொண்டு சேவையளித்து வருகிறது.

9.ஜெட்ஸ்டார் ஏசியா

9.ஜெட்ஸ்டார் ஏசியா

அடுத்ததும் சிங்கப்பூரை சேர்ந்த நிறுவனம்தான் இடம்பிடித்துள்ளது. ஜெட்ஸ்டார் ஏசியா என்ற அந்த நிறுவனம் 2004ம் ஆண்டு துவங்கப்பட்டது. மொத்தம் 18 விமானங்களை வைத்து 21 இடங்களுக்கு சேவையளித்து வருகிறது.

Picture credit: Wiki Commons

Tsung TsenTsan

8.வெர்ஜின் அமெரிக்கா

8.வெர்ஜின் அமெரிக்கா

எட்டாவது இடத்தை வெர்ஜின் அமெரிக்கா நிறுவனம் பெற்றுள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு 2004ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிறுவனம் குறைவான கட்டணத்தில் சிறந்த விமான சேவையை வழங்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது. குறைவான கட்டணத்தில் சேவையளிக்கும் பெரும்பாலான நிறுவனங்கள் குறைந்த தூரத்திற்கு இடையில் சேவை வழங்கும் நிலையில், இந்த விமான நிறுவனம் பாயிண்ட் டூ பாயிண்ட் என்று கூறப்படும் இடைநில்லா விமான சேவையை வழங்குவதை கொள்கையாக கொண்டு செயல்பட்டு வருகிறது. 23 இடங்களுக்கு 53 விமானங்களை கொண்டு சேவையளிக்கிறது.

 7.வெஸ்ட்ஜெட்

7.வெஸ்ட்ஜெட்

கனடாவை சேர்ந்த இந்த நிறுவனம் 89 இடங்களுக்கு 120 விமானங்களை கொண்டு சேவையளித்து வருகிறது. 1996ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிறுவனம் கனடாவின் இரண்டாவது பெரிய விமான நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனத்தில் 10,000க்கும் அதிகமான பணியாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 6.ஈஸிஜெட்

6.ஈஸிஜெட்

லண்டனை சேர்ந்த ஈஸிஜெட் நிறுவனத்திடம் 202 விமானங்கள் உள்ளன. 134 நகரங்களுக்கு சேவையளிக்கிறது. 1995ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிறுவனம்தான் ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய குறைவான கட்டண சேவையளிக்கும் விமான நிறுவனம்.

5. இண்டிகோ

5. இண்டிகோ

இந்தியாவை சேர்ந்த இண்டிகோ விமான நிறுவனம் ஐந்தாவது இடத்தை பெற்றுள்ளது. கடந்த 2006ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிறுவனத்திடம் 78 புதிய ஏர்பஸ் ஏ320 விமானங்கள் உள்ளன. 36 நகரங்களை இணைக்கும் விதத்தில் சேவையளிக்கிறது. இந்த விமானங்களில் எக்கானமி கிளாஸ் எனப்படும் சாதாரண கட்டண வகுப்பு கொண்டதாகவே உள்ளன. மேலும், இலவச உணவு போன்றவை கிடையாது.

 4.ஜெட்ஸ்டார் ஏர்வேஸ்

4.ஜெட்ஸ்டார் ஏர்வேஸ்

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜெட்ஸ்டார் விமான நிறுவனம் நான்காவது இடத்தை பெற்றுள்ளது. 73 விமானங்களை வைத்திருக்கும் இந்த நிறுவனம் 35 நகரங்களுக்கு இடையில் சேவையை வழங்குகிறது. கடந்த 2003ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிறுவனம் மெல்போர்ன் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது.

 3. நார்வேஜியன் ஏர்வேஸ்

3. நார்வேஜியன் ஏர்வேஸ்

நார்வேஜியன் விமான நிறுவனம் ஐரோப்பாவின் குறைவான கட்டணம் கொண்ட மூன்றாவது பெரிய விமான நிறுவனம். 1993ல் துவங்கப்பட்ட இந்த நிறுவனத்திடம் 89 விமானங்கள் உள்ளன. 126 நகரங்களுக்கு சேவையளிக்கிறது.

2.ஏர்ஏசியா எக்ஸ்

2.ஏர்ஏசியா எக்ஸ்

மலேசியாவை சேர்ந்த இந்த நிறுவனம் 2007ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த நிறுவனத்திடம் 18 விமானங்கள் உள்ளன. மொத்தம் 19 நகரங்களுக்கு சேவையளிக்கிறது.

 1.ஏர்ஏசியா

1.ஏர்ஏசியா

உலகின் மிகக்குறைந்த கட்டணம் கொண்ட சிறப்பான விமான நிறுவனம் என்ற பெயரை ஏர்ஏசியா பெற்றுள்ளது. இந்தியாவில் சமீபத்தில் சேவையை துவங்கியிருக்கும் இந்த நிறுவனம் போட்டியாளர்களை கிலியை ஏற்படுத்தும் விதத்தில் ரூ.500 என்ற கட்டணத்தில் விமான சேவையை அறிவித்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1993ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிறுவனத்திடம் 169 விமானங்கள் உள்ளன. 88 நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன. இந்த நிறுவனத்திடம் இருக்கும் அனைத்து விமானங்களும் ஏர்பஸ் ஏ320 மாடல்கள் என்பதும் சிறப்பம்சமாக கூறலாம். மேலும், குறைவான கட்டணத்தில் ஒரு பயணி சென்றடையும் இடத்திற்கான கட்டணத்துடன்(0.023 டாலர் கட்டணம்) சேவையளிக்கும் நிறுவனமாகவும் கூறப்படுகிறது.

Picture credit: Wiki Commons

Terence Ong

Most Read Articles
English summary
Based on the World Airline Survey and feedback from respondents representing 105 different nationalities, let's take a look at 10 of the cheapest airlines out there that make a budget holiday possible. The survey covered more than 245 airlines, from the largest international carriers to the smaller domestic airlines.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X