டிரைவ்ஸ்பார்க் தமிழ் தள வாசகர்கள் வழங்கிய சில சிறந்த கருத்துக்கள்!

By Saravana

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்திற்கு தொடர்ந்து பேராதரவு நல்கி வரும் வாசகர்களுக்கு நன்றி. டிரைவ்ஸ்பார்க் தளத்தின் வளர்ச்சியில் ஏராளமான வாசகர்களின் பங்களிப்பும் உள்ளது. அவ்வப்போது எங்களது செய்திகளை ஊக்கப்படுத்தியும், மேம்படுத்துவதற்கான வழிமுறைகளையும், கருத்துக்களையும் தெரிவித்து வருவதில் மட்டற்ற மகிழ்ச்சி.

மேலும், டிரைவ்ஸ்பார்க் தளத்தின் செய்திகளுக்கு சிறப்பான பின்னூட்டம் தந்து தொடர்ந்து சில வாசகர்கள் ஆதரவும், ஊக்கமும் கொடுத்து வருகின்றனர். வாசகர்கள் வழங்கும் கருத்துக்கள் எங்களது தளத்தின் வளர்ச்சிக்கும், சில கருத்துக்கள் பல ஆயிரக்கணக்கான வாசகர்களுக்கும் பயனுள்ள தகவல்களையும் தருகின்றது. அதுபோன்று, வாசகர்கள் வழங்கிய மிகச்சிறந்த கருத்துக்களை இந்த செய்தியில் தொகுத்துள்ளோம்.

ஸ்லைடரில் வாசகர்களின் சிறந்த கருத்துக்களில் சிலவற்றை காணலாம்.

மாருதியும், டாடாவும்...

மாருதியும், டாடாவும்...

தி டெவில்

Nano is cheaper than any other Indian car.

Nano gives the best mileage among all the Indian cars (petrol).

Why then Nano is still a nah-nah?

Maruti scores over Tata in after sales service and quality of components. Right?

செவர்லே சர்வீஸ் பற்றிய கமென்ட்

செவர்லே சர்வீஸ் பற்றிய கமென்ட்

தி டெவில்

It's not just the cost of service that matters...

I had a few bitter experiences with a company authorised service centre in Guindy (NOT GM). Once I went there at about 9.30 am and asked for a water service. I was told there were 65 cars ahead of my vehicle and so I could collect my car in the evening or next day morning. There could have been 65 cars inside the shed, but not necessarily for water service! I simply left.

On another occasion I reached the service centre at 8.45 am and asked for fitting new wipers in the wind shield. The Service Adviser said, it would take only a mo' to do the job and asked me to wait in the lounge. After 9.30 I kept reminding him once in every half an hour that I have urgent works to do and hence to attend the work immediately. At 11 I raised my voice and asked to return the vehicle. They changed the wipers at once and now took their own sweet time for billing.

I never again went to them afterwards.

செவர்லே சர்வீஸ் பற்றிய கருத்து...

செவர்லே சர்வீஸ் பற்றிய கருத்து...

3. விஜே

chevrolet is the worst after sales service provider in india. since i own a chevrolet sail uva, i know this fact. don't spend unnecessarily extra amount for these

சாலை கட்டமைப்பு மற்றும் ஒழுங்கு குறித்து...

சாலை கட்டமைப்பு மற்றும் ஒழுங்கு குறித்து...

4. ஏழுமலை

இந்தியாவில் சாலையில் நெரிசலைக் கட்டுப்படுத்துவது கடினமான காரியமில்லை. சுலபம்தான். ஆனால் மக்களின் அலட்சியமும், சுயநலமும் மற்றும் அரசாங்கத்தின் அலட்சியம், திட்டமிடாமையும் காரணம். நகர்ப்புறங்களில் பிரதான சாலையில் லேன் இருந்தால் அது வாகன ஓட்டுநர்களுக்குச் சுலபமாக இருக்கும். சாலைகளில் லேன் வரையப்பட்டு அந்த லேன்களை மறித்து வண்டிகள் நிறுத்தப்பட்டால் கடும் அபராதம் விதிக்கலாம். சாலையின் மையப்பகுதியில் மஞ்சள் வர்ண கோடுகளின் மூலம் எல்லைகளை வகுப்பது, சகட்டு மேனிக்கு U திருப்பம் மேற்கொள்வது, சிகப்பு விளக்குகளை அலட்சியப்படுத்துவது, கட்டுப்பாடின்றி ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்குச் செல்வது போன்றவற்றை கட்டுப்படுத்தினாலே முக்கால்வாசி பிரச்சினை தீர்ந்துவிடும். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருப்பதில் 10% கூட இந்திய நகரங்களில் போக்குவரத்து இல்லை. அங்கு மிகப் பிரமாதமாக போக்குவரத்து இருப்பதற்குக் காரணம் அங்கு மக்களிடம் ஒழுங்கும், கட்டுப்பாடும், சுயநலமற்ற தன்மையும் இருப்பதுதான்.

போக்குவரத்து நெரிசலை குறைக்க...

போக்குவரத்து நெரிசலை குறைக்க...

5. நிர்மலா

தினமும் காரில் அலுவலகம் செல்வோர்கள் சற்று சிந்தித்து கார் பூளிங்கில் ஈடுபடலாம். அதற்காக பல இணையதளங்கள் உள்ளன.. அவற்றில் பதிவு செய்து பாதுகாப்பாக வண்டிகளை பகிர்ந்து செல்லலாம்.

6. ஹெல்மெட் செய்தி பற்றி பின்னூட்டம்...

6. ஹெல்மெட் செய்தி பற்றி பின்னூட்டம்...

internetwalker

நல்ல கட்டுரை .. off-road helmet or motocross helmet பற்றியும் கூறி இருக்கலாம்.

நம்ம ஊரில் கிடைக்கும் ஹெல்மெட் பிராண்டு மற்றும் மாடல்களை தரனாய்வு செய்து விமர்சனம் கொடுத்தால் இன்னும் வரவேற்கதக்கது !!

7. ஆக்டிவா ஸ்கூட்டர் பற்றி...

7. ஆக்டிவா ஸ்கூட்டர் பற்றி...

mohankumar

Yes I agree in activa no break wire cut, accelerator wire cut, smooth and very safety vehicle. My activa age 12 years till now no repair, good condition.

8. மாஞ்சா கயிறால் ஏற்படும் பாதிப்பு பற்றி...

8. மாஞ்சா கயிறால் ஏற்படும் பாதிப்பு பற்றி...

Muthusubramaniam

Hello Sir..

18th March 2014 night at around 7:00 PM my friends brother was riding his bike from Porur to Tambaram.

After crossing the Kuthathur Bride, suddenly he saw a Manja Thread flying towards his face.

He tried to stop the thread with his hands, and which teared two of his fingers and reached his neck.

With Gods grace nothing big happened and there were 4 striches in each finger.

It seems like there still guys are using Manja for kites and which should be stopped before the summer leave.

ஸ்டெப்னி பற்றிய கூடுதல் தகவல்

ஸ்டெப்னி பற்றிய கூடுதல் தகவல்

9. தி டெவில்

During World War II several motorcycles (with side cars) carried stepneys!

கொங்கன் ரயில்வேயின் ரோ ரோ சேவை பற்றி...

கொங்கன் ரயில்வேயின் ரோ ரோ சேவை பற்றி...

ஏ1 என்பவர் எழுதியது

பழைய செய்தி தான் இருந்தாலும் இப்போவாவுது வந்ததே சந்தோசம் தான்! மற்ற வழி தடைகளில் சுங்க சாவடி வைத்திருப்பவர்கள் வர விட மாட்டார்கள். நாமக்கல் முதலாளிகள் அவர்களை விட லாபி செயும் வரை!

முக்கிய குறிப்பு

முக்கிய குறிப்பு

இவற்றில் பல கருத்துக்கள் பிற வாசகர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாகவும், சிந்தனையை தூண்டும் விதத்தில் இருந்தவைகளை தொகுத்துள்ளோம். மேலும், மைலேஜ் டெஸ்ட்டிங் என்ற செய்தியில் ஏராளமான வாசகர்கள் தங்களது பைக் மற்றும் காரின் உண்மையான மைலேஜ் விபரங்களை தந்து பலருக்கு பயன் கொடுத்தனர். ஆக்கப்பூர்வமான கருத்துக்களையும், தகவல்களையும் தொடர்ந்து வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அவ்வப்போது இதுபோன்ற கருத்து தொகுப்புகளை வெளியிடவும் முடிவு செய்துள்ளோம். நன்றி.

Most Read Articles
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X