டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியை லிமோசின் ரக காராக மாற்றிய டிசி நிறுவனம்!

Written By:

அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் ஃபார்ச்சூனர் கார்களுக்கான கஸ்டமைஸ் பேக்கேஜை டிசி நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

இந்த நிலையில், பழைய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி ஒன்றை லிமோசின் ரக காராக மாற்றியிருக்கிறது டிசி நிறுவனம். அதன் படங்கள் மற்றும் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

முந்தைய தலைமுறை டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியை வாங்கி அதனை இரண்டாக கத்தரித்து, கூடுதல் சேஸியை சேர்த்து லிமோசின் ரக கார் மாடலாக நீளத்தை அதிகரித்துள்ளனர். முகப்பு மற்றும் பின்புறத்தில் அதிக மாறுதல்களையும், உட்புறத்தில் சொகுசு காராகவும் மாற்றியிருக்கின்றனர்.

முன்புறத்தில் புதிய க்ரில் அமைப்பு, புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகளும் இடம்பெற்று இருக்கிறது. பம்பர் டிசைனும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பானட்டில் கூடுதல் ஸ்கூப் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

வலிமையான தோற்றத்தை தரும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட வீல் ஆர்ச்சுகள் கம்பீரத்தை கூட்டுகிறது. காரை சுற்றிலும் பிளாஸ்டிக் பாடி கிளாடிங் சட்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது.

பின்புறத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எல்இடி டெயில் லைட்டுகள், இரண்டு எதிரொலிப்பு தன்மை கொண்ட ஸ்டிக்கர் பட்டைகள் என முற்றிலும் புதிய வடிவம் பெற்றிருக்கிறது. பம்பர் அமைப்பும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

உட்புறத்தில் இரண்டு டேன் லெதர் கவர் போடப்பட்ட கேப்டன் இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு இருக்கைகளையும் விருப்பத்திற்கும், வசதிக்கும் ஏற்ப சாய்த்துக் கொள்ளவோ, நிமிர்த்தி வைத்துக் கொள்ளவோ முடியும். கதவுகளில் கட்டுப்பாட்டு பட்டன்கள் பொருத்தப்பட்டுள்ளன.

முன் வரிசை இருக்கைகள் தனியாக தடுக்கப்பட்டுள்ளன. அந்த தடுப்பில் எல்சிடி டிவி பொருத்தப்பட்டுள்ளது. இரண்டு கேப்டன் இருக்கைகளுக்கும் நடுவில் கை வைக்க வசியாக பெரிய ஆர்ம் ரெஸ்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், அதில் மொபைல்போன் வைப்பதற்கான வசதியும், சிகரெட் லைட்டரும் உள்ளன. ஏசி வென்ட்டுகளும் இரண்டாவது வரிசைக்கு தனியாக இருக்கிறது.

அருணாச்சலப் பிரதேச மாநிலம் இட்டாநகரில் நடந்து வரும் மாருதி சுஸுகி டிஎஸ்டி ராலி சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறும் பகுதியில் இந்த புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி கார் பிரியர்களின் கண்களில் சிக்கியிருக்கிறது.

English summary
Toyota Fortuner Gets Limousine Avatar.
Please Wait while comments are loading...

Latest Photos