அசத்தல் அம்சங்களுடன் புதிய டொயோட்டா ஆடம்பர படகு அறிமுகம்!

By Saravana

டொயோட்டா நிறுவனம் போனம் வரிசையில் புதிய சொகுசு படகை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. டொயோட்டா போனம் 31 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த புதிய சொகுசு படகு ஸ்போர்ட்ஸ் யுட்டிலிட்டி க்ரூஸர் என்ற புதிய ரகத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

ஜப்பானிலுள்ள 49 டீலர்கள் வழியாக விற்பனை செய்யப்பட இருக்கும் இந்த புதிய சொகுசு படகு பெர்ஃபார்மென்ஸ் மற்றும் பயன்பாட்டில் மிகச்சிறப்பாக இருக்கும் என்று டொயோட்டா தெரிவித்துள்ளது.


பன்முக பயன்பாடு

பன்முக பயன்பாடு

விளையாட்டு, மீன்பிடி வசதி மற்றும் சொகுசு பயணங்கள் என அனைத்திற்கும் ஏற்ற வகையில் இந்த சொகுசு படகு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த படகில் 12 பேர் செல்ல முடியும். போனம் வரிசையில் வடிவமைக்கப்படும் படகுகள் போன்றே இந்த படகும் உறுதிமிக்க ஏ5083 அலுமினியம் அலாய் பாடியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அதிர்வுகள் மற்றும் சப்தம் மிக குறைவாக இருக்கும்.

எஞ்சின்

எஞ்சின்

டொயோட்டா லேண்ட்க்ரூஸர் பிராடோ எஸ்யூவியில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதே 3.0 லிட்டர் டீசல் எஞ்சின்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த படகில் இரட்டை எஞ்சின்களுடன் இயங்குகிறது. இது செயல்திறனில் சிறப்பாக இருப்பதோடு, அதிக எரிபொருள் சிக்கனத்தையும் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப வசதிகள்

தொழில்நுட்ப வசதிகள்

டொயோட்டா டிரைவ் அசிஸ்ட்3 மற்றும் டொயோட்டா வெர்ச்சுவல் ஆன்கர் சிஸ்டம் போன்ற டொயோட்டாவின் பிரபலமான தொழில்நுட்ப வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வசதிகள் மூலம் அதிவேகத்தில் படகு செல்லும்போது கட்டுப்படுத்துவது எளிதாக இருக்கும்.

விலை

விலை

ஒரு படகின் விலை இந்திய மதிப்பில் ரூ.17 கோடி விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது.

விற்பனை இலக்கு

விற்பனை இலக்கு

ஆண்டுக்கு 15 படகுகளை தயாரித்து விற்பனை செய்ய டொயோட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Most Read Articles
English summary
Japanese automobile giant Toyota Motor Corporation has launched a new boat, the "Ponam-31"(1), which will go on sale through a network of 49 companies in domestic market. 
Story first published: Tuesday, October 14, 2014, 11:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X