கண்ணாடிகளாலான இரயில் பெட்டியை அறிமுகப்படுத்திய இந்திய ரயில்வேதுறை

Written By:

பரவசம் ஏற்படுத்தும் ரயில் பயணங்களை வழங்க இந்திய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதில் முதற்கட்டமாக விசாகப்பட்டணம் முதல் கிரண்டல் வரை செல்லும் பயணிகள் இரயிலின் ஒரு பெட்டி முற்றிலும் கண்ணாடிகளால் அமைக்கப்பட்டுள்ளன.

கண்ணாடிகளாலான பெட்டியை, பூபனேஸ்வரிலிருந்து கானொளி காட்சி மூலம் மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கொடியசைத்து துவங்கி வைத்தார்.

விசாகப்பட்டணம், கிரண்டல் பயணிகள் இரயிலில் கண்ணாடிகளாலான பெட்டி இணைக்கப்பட்டுயிருப்பதற்கு காரணமாக இருப்பது அராக்கு பள்ளதாக்கும். மலைவாசஸ்தளமான இது, விசாகப்பட்டணத்திலிருந்து 128 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

விசாகப்பட்டணம், கிரண்டல் பயணிகள் இரயிலில் கண்ணாடிகளாலான பெட்டி இணைக்கப்பட்டுயிருப்பதற்கு காரணமாக இருப்பது அராக்கு பள்ளதாக்கு. மலைவாசஸ்தளமான இது, விசாகப்பட்டணத்திலிருந்து 128 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

நீண்ட பெரிய மரங்கள், குளிர்ந்த வானிலை, பச்சை விரிப்பு போத்திய புல்வெளிகளுக்கு பெயர் பெற்ற அழகிய பள்ளதாக்கை இனி விசாகப்பட்டணம், கிரண்டல் இரயிலில் பயணிப்பவர்கள் கண்கள் விரிய இரயிலில் இருந்தவாறே வெளிப்புற அழகை ரசிக்கலாம்.

ரூ.3.38 கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த கண்ணாடிப்பெட்டியில் 40 இருக்கைகள் உள்ளன. அதிக இடைவெளி விட்டு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதால், பயணிகள் அனைவரும் 360 டிகிரியில் வெளிப்புறத்தை இரயிலின் உள்ளே இருந்து பார்க்கலாம்.

தானியங்கி கதவுகள், பல அடுக்கு கொண்ட உடமைகளுக்கான சட்டம் (rack) என ஆடம்பர வசதிகள் பலவும் இந்த பெட்டியில் உள்ளதாக இதுக்குறித்து ரயில்வே துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அராக்கு பள்ளதாக்கு மட்டுமில்லாமல், தெலங்கானா மாநிலத்தின் அனந்தகிரி மலை, ஆந்திர பிரதேசத்தின் முற்றிலும் பசுமையான லம்பாஸிங்கினி கிராமம், பெரியளவில் சுற்றுலாவாசிகளை ஈர்க்கும் போரா குகை போன்றவற்றில் இந்த பயணிகள் இரயில் கடந்து செல்லும்.

சோதனை முயற்சியில் ஒரே ஒரு பெட்டி மட்டும் விசாகப்பட்டணம் முதல் கிரண்டல் வரை செல்லக்கூடிய இந்த பயணிகள் இரயிலில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான வரவேற்பு அதிகரிக்கும் பட்சத்தில் சுற்றுலாவாசிகளை ஈர்க்கக்கூடிய அனைத்து பகுதிகளிலும் இதுபோன்ற கண்ணாடிகள் இரயில் பெட்டிகள் அமைக்கப்படும்.

இதபோன்ற கண்ணாடி இரயில் பெட்டிகளை கொண்ட தொடர்வண்டி ஒன்று விரைவில் வடகிழக்கு பகுதிகளில் இருக்ககூடிய வழிப்பாதைகளில் வெளியிடப்படும் என மேலும் இரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Minister Suresh Prabhu flags off Train with Vistadome coach along Vizag-Araku route. Contains double-wide reclining seats with 360 degrees rotation for better sightseeing experience.
Please Wait while comments are loading...

Latest Photos