ஸ்ட்ரீட் லைட்டுகளுக்கு குட்பை சொல்ல வருகிறது ஒளிரும் சிமென்ட் சாலை!

By Saravana

தெருவிளக்குகள் பொருத்தமுடியாத இடங்களுக்கும் பொருத்தமான ஒளிரும் தன்மை கொண்ட சிமென்ட் சாலை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

தமிழகம் போன்று மின்சார பற்றாக்குறை நிலவும் இடங்களுக்கும், மின்சாரத்தை சேமிக்கவும் இந்த புதிய சாலை வரப்பிரசாதமாக அமையும். இந்த சாலை பற்றிய சுவாரஸ்யமான மற்றும் அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்களை ஸ்லைடரில் காணலாம்.

பொறியாளர் குழு

பொறியாளர் குழு

மெக்சிகோ நாட்டிலுள்ள மிகோவாகேன் பல்கலைகழகத்தை சேர்ந்த பொறியாளர்கள் இந்த சாலையை கண்டுபிடித்துள்ளனர்.

 ஒளிரும் சிமென்ட்

ஒளிரும் சிமென்ட்

ஒளியை உமிழும் தன்மை கொண்ட சிமென்ட் ஒன்றை இந்த மிகோவாகேன் பல்கலைகழக பொறியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதில் என்ன விசேஷம் என்கிறீர்களா?

சூரியமின்சக்தி

சூரியமின்சக்தி

இந்த பொறியாளர்கள் கண்டுபிடித்திருக்கும் ஒளிரும் தன்மை கொண்ட சிமென்ட் பகல் நேரத்தில் சூரிய ஒளியிலிருந்து மின்சக்தியை சேமித்துக் கொண்டு இரவில் ஒளிரும்.

 கட்டுப்படுத்தலாம்

கட்டுப்படுத்தலாம்

வாகன ஓட்டிகள், பாதசாரிகளின் கண்களை உறுத்தாத வகையிலும், கண் கூச்சத்தை ஏற்படுத்தாத அளவுக்கு இதன் நீலம் மற்றும் பச்சை வண்ணத்தின் ஒளிரும் தன்மையையும், பிரகாசத்தையும் கூட்டிக் குறைக்க முடியும்.

ஆயுள்

ஆயுள்

பொதுவாக நீங்கள் கடிகாரத்தில் பார்க்கும் ஒளிரும் தன்மையுடைய பொருட்களுக்கு அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் மட்டுமே ஆயுட் காலம் கொண்டது. ஆனால், இந்த ஒளிரும் தன்மை கொண்ட சிமென்ட் நூறாண்டுகளுக்கும் மேலாக ஒளிரும் தன்மையை இழக்காது.

கடின முயற்சி

கடின முயற்சி

இந்த ஒளிரும் சிமென்ட்டை உருவாக்கும் திட்டத்தில் இடம்பெற்றிருந்த பொறியாளர் ஜோஸ் கார்லோஸ் ரூபியோ கூறுகையில், " 9 ஆண்டுகளுக்கு முன் இந்த திட்டத்தை கையிலெடுத்தோம். கடின முயற்சிக்கு பின் இந்த சிமென்ட்டை உருவாக்கியிருக்கிறோம். இந்த சிமென்ட்டுடன் நீர் கலக்கும்போது ஜெல் போன்று மாறிவிடும்.

காப்புரிமை

காப்புரிமை

மணல், களிமன் மற்றும் தூசுகளால் உருவாக்கப்படும் இந்த சிமென்ட் சுற்றுச்சூழலுக்கும் உகந்ததாக இருக்கும். இந்த சிமென்ட்டிற்கு காப்புரிமை பெறப்பட்டிருக்கிறது. உலக அளவில் இந்த சிமென்ட்டை பிரபலப்படுத்தும் முயற்சிகளில் இந்த பொறியாளர் குழு ஈடுபட்டிருக்கிறது.

Photo Credit: 360doc

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
With electricity shortage and outages, scientists have created something unique and can help saving some of the electric energy for the future generation.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X