ஆதரவற்றோர் இல்ல பள்ளி மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய ஹார்லி குழு!

By Saravana

பெங்களூரை சேர்ந்த ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள் உரிமையாளர் குழுவினர் பல்வேறு சமூக நலப் பணிகளை செய்து வருகின்றனர். பிற பைக் குழுவினர் போன்று தனிப்பட்ட பைக் பயணங்களுக்காக மட்டுமின்றி, சமூக அக்கறையுடன் கூடிய பைக் பயணங்களை அவர்கள் நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த பைக் பயணத்தை அவர்கள் மேற்கொண்டு பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். இதைத்தொடர்ந்து, ஆதரவற்ற குழந்தைகளின் கல்விக்காக தங்களது உதவிகரங்களை நீட்டியுள்ளனர்.

பேக் டூ ஸ்கூல்

பேக் டூ ஸ்கூல்

ஆதவற்றோர் இல்லத்தில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளனர் பெங்களூர் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர் குழுவினர். பேக் டூ ஸ்கூல் என்ற பெயரில் இந்த சமூக நலப்பணியை அவர்கள் துவங்கியுள்ளனர்.

குடும்பத்துடன் பயணம்

குடும்பத்துடன் பயணம்

பெங்களூர் கூக் டவுனில் உள்ள செயிண்ட் மேரிஸ் ஆதவற்றோர் இல்லத்திற்கு பெங்களூர் ஹார்லி டேவிட்சன் உரிமையாளர் குழுவினர் குடும்பத்துடன் சென்றனர். மொத்தம் 20 மோட்டார்சைக்கிள்களில் அங்கு சென்றனர்.

குழந்தைகளுடன் குதூகலம்

குழந்தைகளுடன் குதூகலம்

அந்த இல்லத்தில் தங்கி படிக்கும் 200க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை செய்தனர். அத்துடன், அவர்கலை தங்களது மோட்டார்சைக்கிளில் வைத்து ஒரு ரவுண்டும் அடித்தனர்.

நிதி உதவி

நிதி உதவி

அங்கு குழந்தைகளுடன் தங்களது நேரத்தை குடும்பத்தினருடன் செலவிட்ட ஹார்லி டேவிட்சன் உரிமையாளர் குழுவினர், அந்த ஆதரவற்றை பிள்ளைகளின் கல்விக்காக ரூ.70,000 நிதி உதவியையும் அந்த பள்ளி நிர்வாகத்திடம் வழங்கினர்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Bangalore H.O.Gs Back to School initiative saw 20 riders and their families ride to St. Mary's Orphanage in Cooke Town, Bangalore.
Story first published: Wednesday, July 1, 2015, 10:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X