Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

நடுரோட்டில் உருண்டு விளையாடி சிங்கங்கள்... அரண்டு நி்ன்ற வாகனங்கள்

Posted by:
Updated: Wednesday, February 13, 2013, 13:05 [IST]


கென்ய தலைநகர், நைரோபி அருகில் நடுரோட்டில் 2 சிங்கங்கள் படுத்து உருண்டு விளையாடிதால் போக்குவரத்து தடைப்பட்டதுடன் பெரும் வாகன நெரிசலும் ஏற்பட்டது. கென்ய தலைநகர் நைரோபியிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில்தான் தேசிய வனவிலங்கு பூங்கா அமைந்துள்ளது. இந்த நிலையில், நைரோபியின் அருகில் உள்ள ஒரு முக்கிய சாலை ஒன்றில் காட்டுக்குள் இருந்து வெளியே வந்த 2 சிங்கங்கள் நேற்று படுத்து உருண்டு விளையாடிக் கொண்டிருந்தன.

நடுரோட்டில் 2 சிங்கங்கள் படுத்துக் கிடப்பதை பார்த்து திகைத்த வாகன ஓட்டிகள் முன்கூட்டியே வாகனங்களை நிறுத்தி ஹாரன் அடித்தனர். ஆனால், இதுதான் படுத்து உருள சரியான இடம் என்று கருதிய சிங்கங்கள் நகர்வது போன்று இல்லை. எனவே, சிலர் சாலை ஓரமாக கடந்து செல்ல முயன்றனர். ஆனால், சிங்கங்கள் அங்கும் இங்கும் சாலையில் உலாத்தியதால் அவர்களால் செல்ல முடியவில்லை. பின்னர் 10 நிமிடங்கள் கழித்து அந்த 2 சிங்கங்களும் தானாகவே சாலையை விட்டு ஓரமாக இறங்கி காட்டுக்குள் மெதுவாக சென்றன.

அதன் பிறகே வாகன ஓட்டிகள் சாலையை கடக்க முடிந்தது. யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்கவில்லை என்றாலும் நடுரோட்டில் சிங்கங்கள் படுத்துக் கிடந்ததால் அந்த சாலையில் இருபக்கமும் பெரும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திவிட்டன. இருப்பினும், டிராஃபிக் ஜாமில் சிக்கிய சில வாகனங்களில் தேசிய வனவிலங்கு பூங்காவை சுற்றி பார்க்க வந்தவர்கள்தான்.கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்ததுபோல் சிங்கங்களை போகும் வழியிலேயே கண்ட மகிழ்ச்சியில் புகைப்படங்களை எடுத்துத் தள்ளிவிட்டனர். படத்தில் காணும் புகைப்படங்களை  பார்கிராபஃப்ட் மீடியாவை சேர்ந்த கரேத் ஜோன்ஸ் கிளிக்கியுள்ளார். அட்டகாசமான கோணங்களில் அவர் எடுத்த புகைப்படங்களை ஸ்லைடரில் காணலாம்.

நடுரோட்டில் உருண்டு விளையாடி சிங்கங்கள்

நடுரோட்டில் உருண்டு விளையாடி சிங்கங்கள்

நடுரோட்டில் உருண்டு விளையாடி சிங்கங்கள்

நடுரோட்டில் உருண்டு விளையாடி சிங்கங்கள்

நடுரோட்டில் உருண்டு விளையாடி சிங்கங்கள்

நடுரோட்டில் உருண்டு விளையாடி சிங்கங்கள்

நடுரோட்டில் உருண்டு விளையாடி சிங்கங்கள்

நடுரோட்டில் உருண்டு விளையாடி சிங்கங்கள்

நடுரோட்டில் உருண்டு விளையாடி சிங்கங்கள்

நடுரோட்டில் உருண்டு விளையாடி சிங்கங்கள்

சிங்கம்லே...!!

Image source: Daily Mail

Story first published:  Wednesday, February 13, 2013, 10:39 [IST]
English summary
Two lions brought rush-hour traffic to a standstill in Nairobi, Kenya when they decided to have a lie down in the middle the street.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil