இந்த 4 விதிகளை மீறினால் ஓட்டுநர் உரிமம் நிரந்தர ரத்து: கிடுக்குப்பிடி போட்ட தமிழக அரசு..!!

Written By:

வாகனம் ஓட்டும்போது இனி வாகன ஓட்டிகள் அனைவரும் ஹெல்மெட் மற்றும் அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசின் சாலை பாதுகாப்பு குழு ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமை ஏற்றார்.

இந்த கூட்டத்தில் வாகன ஓட்டிகள் சாலையில் செல்லும் போது வைத்திருக்க வேண்டிய ஆவணங்கள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.

இதன்மூலம், உயர்நீதிமன்ற சாலை பாதுகாப்பு குழு முன்வைத்துள்ள சில பரிந்துரைகளை கருத்தில் கொண்டு இந்த கூட்டத்தில் சில கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன.

1.) சாலையில் வாகனம் ஓட்டுபவர்கள் இனி அவர்களது அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

2.) சாலையில் போக்குவரத்து காவலர்கள் ஆய்வின் போது, அசல் ஓட்டுநர் உரிமத்தை காட்ட வேண்டும்.

3.) காப்பீடு சான்றிதழ் இல்லையெனில், வாகனங்கள் போக்குவரத்து காவலர்களால் சிறைபிடிக்கப்படும்.

4.) காப்பீட்டை புதுபிக்க தவறியவர்களுக்கும் இந்த விதி பொறுந்தும்.

5.) செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும்.

6.) சாலை விதிகளை மீறுபவர்களுக்கு உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும்.

7.) சூழ்நிலையை பொறுத்து வாகன ஓட்டிகளுக்கு ஓட்டுநர் உரிமம் நிரந்தமாகவும் ரத்து செய்யப்படும்.

8.) வாகன ஓட்டிகள் ஹெல்மெட்டை கட்டாயம் அணிய வேண்டும்.

9.) வாகன ஓட்டிகள் மட்டுமில்லாமல், பின்னால் அமர்ந்திருப்பவரும் ஹெல்மெட் அணியவேண்டும்.

மேலும் கனரக வாகனங்களுக்கும் சில கட்டுபாடுகளை இந்த குழு விதித்துள்ளது.

அதன்படி, டிரக், லாரி மினிவேன், பிக் அப் போன்ற கனரக வாகனங்களில் அதிக பாரம் மற்றும் அதிக ஆட்களை ஏற்றுவதும் போக்குவரத்து விதிமீறல் தான்.

இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் கனரக வாகன ஓட்டிகளின் உரிமம் தற்காலிகமாக அல்லது விதிமீறலை பொறுத்து நிரந்தரமாக ரத்து செய்யப்படும்.

மாநில சாலைப் பாதுகாப்புக் குழு விதித்துள்ள இந்த கட்டுபாடுகள் வாகன ஓட்டிகளிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதை சரியாக மக்கள் பின்பற்ற தமிழகளவில் உள்ள பாதிப்படைந்த சாலைகளில் சில அடிப்படை சீரமைப்பு பணிகளையாவது அரசு மேற்கொள்ள வேண்டும் என சமூக வலைதளங்களில் பலர் கோரிக்கை வைக்கின்றனர். 

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
New Road Safety Measures have been taken by State Minister Vijayabaskar. Click for details...
Please Wait while comments are loading...

Latest Photos