பாலியல் புகார் வழக்கில் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்ட அதிகாரி உடனடி நீக்கம்: ஊபர் அதிரடி..!!

Written By:

கால் டாக்ஸி சேவையை வழங்கும் ஊபர் நிறுவனத்தின் ஆசியாவிற்கான வணிக அதிகாரியாக இருந்த எரிக் அலெக்சேண்டரை பதிவியில் இருந்து நீக்கி அந்நிறுவனம் அதிரடியான உத்தரவு பிறப்பித்துள்ளது. 

டெல்லியில் கடந்த 2014ம் ஆண்டில் ஊபர் கால் டாக்ஸியில் பயணம் செய்த பெண், அந்த கார் ஓட்டுநரால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டார்.

இதுதொடர்பான வழக்கு நடைபெற்ற சமயத்தில் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டதற்கான மருத்துவ பதிவேடுகளை பாதிக்கப்பட்ட பெண் வைத்திருந்தார்.

இதனால் ஊபர் நிறுவனத்தின் வளர்ச்சி இந்தியாவில் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்று நினைத்த எரிக், அந்த பெண்ணின் மருத்துவ ஆவணங்களை முறைகேடாக பெற்றார்.

மேலும் இந்த மருத்துவ ஆவணங்களை எரிக், ஊபர் நிறுவனத்தின் முதன்மை துணைத் தலைவாரான எமில் மைக்கேல் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி டிராவிஸ் காலனிக் ஆகியோருக்கும் காண்பித்ததாக கூறப்படுகிறது.

விசாரணையில் இருந்த ஒரு வழக்கின் முக்கிய ஆவணங்களை கையில் முறைகேடாக பெற்று வைத்திருந்ததன் காரணமாக ஊபர் நிறுவனம் எரிக் அலெக்ஸ்சேண்டரை வேலையில் இருந்து நீக்கியுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே, ஊபர் நிறுவனம் துன்புறுத்தல், தொந்தரவு செய்தல், பாகுபடு பார்த்தல் மற்றும் பாலியல் சீண்டல்கள் என பல குற்றங்களுக்காக தனது 20 ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கியுள்ளது .

அவர்களுடன் அந்நிறுவனத்தின் ஆசியவிற்கான வணிக அதிகாரியாக இருந்த எரிக் அலேக்சேண்டரும் நீக்கப்பட்டுள்ளார். இது வணிக உலகில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவ ஆவணங்களை ஒரு வருடத்திற்கும் மேலாக வைத்திருந்தது மற்றும் ஆவணங்களை அழிக்கப்பார்த்தது போன்ற விஷயங்களையும் எரிக் அலெக்ஸ்சேண்டர் நீக்கத்திற்கு ஊபர் காரணமாக கூறியுள்ளது.

ஊபர் ஓட்டுநரால் பாதிக்கப்பட்ட அப்பெண்ணின் வழக்கில் நடைபெற்ற விசாரணைகளில் ஊபர் நிறுவனத்தின் பெயருக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க பல்வேறு சூழ்ச்சியங்களை அந்நிறுவனம் வழக்கில் மேற்கொண்டது.

ஊபரின் அனைத்து சூழ்ச்சியங்களையும் கண்டுபிடித்த வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம், டெல்லியில் ஊபர் கால் டாக்ஸி சேவைக்கு 2015ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தடை விதித்து உத்தரவிட்டது.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Uber Fires Top Executive Over Handling Of Rape Investigation In India. Click for Details...
Please Wait while comments are loading...

Latest Photos