85 ரூபாய் கட்டணத்தில் பறக்கும் டேக்ஸி சேவை அளிக்கவுள்ள ஊபர் நிறுவனம்...!

Written By:

உலகெங்கும் வாடகை கார் சேவையை வழங்கி வரும் அமெரிக்காவைச் சேர்ந்த ஊபர் நிறுவனம் அடுத்தாக பறக்கும் டேக்ஸி சேவை வழங்க தயாராகி வருகிறது.

உலகம் முழுவதும் வாடகை டேக்ஸி சேவைத்துறையில் கிட்டத்தட்ட ஊபர் நிறுவனமே கோலோய்ச்சி வருகிறது எனலாம்.

வாடகை கார் சேவையில் அடைந்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது ஆகாய மார்க்க டேக்ஸி சேவை அளிக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

2020ஆம் ஆண்டில் முதல் பறக்கும் டேக்ஸி சேவையை தொடங்கவிருப்பதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது.

சிறிய ரக எலெக்ட்ரிக் மோட்டார்களுடன் இயங்கக்கூடிய வாகனம் பறக்கும் டேக்ஸிக்காக பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது.

பறக்கும் டேக்ஸிக்கான சோதனை ஓட்டம் விரைவில் தொடங்கவிருப்பதாக ஊபர் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஜெஃப் ஹோல்டர் தெரிவித்தார்.

இந்த பறக்கும் வாகனங்களுக்கு விமான நிலையத்தில் இருப்பதைப் போன்று நீளமான ரன்வே தேவைப்படாது.

மாறாக இவற்றால் ஹெலிகாப்டர்கள் போல செங்குத்தாக மேலே ஏறவும், இறங்கவும் முடியும்.

மேலும் இவை எலெக்ட்ரிக் சக்தியில் இயங்கும் வாகனங்கள் என்பதால் மாசு ஏற்படுத்தாத சுற்றுச்சூழலுக்கு இனக்கமாகவும் உள்ளன.

ஜனநெருக்கடி மிகுந்த நகரங்களில் இவற்றை இடையூறு இன்றி மிக எளிதாக பயன்படுத்த முடியும் என்பது சிறப்பாகும்.

ஊபர் நிறுவனத்தின் முதல் பறக்கும் டேக்ஸி சேவை 2020ஆம் ஆண்டில் டல்லாஸ் , ஃபோர்ட் வொர்த், டெக்ஸாஸ் மற்றும் துபாய் நகரங்களில் துவக்கப்பட உள்ளது.

சான்ஃபிரான்சிஸ்கோவின் மெரினா முதல் சான் ஹோஸ் டவுண்டவுன் இடையேயான சாலைமார்க்க பயண தூரம் இரண்டு மணிநேரமாகும்.

இந்த தொலைவை பறக்கும் டேக்ஸியில் வெறும்15 நிமிடங்களில் கடந்துவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த பறக்கும் டேக்ஸிக்கான கட்டணத்தையும் அந்நிறுவனம் நிர்னயித்துவிட்டதாக தெரிகிறது.

முதல்கட்டமாக பயணி ஒருவருக்கு 1.6 கிமீ தூர பயணத்திற்கு 85 ரூபாய் கட்டணமாக நிர்னயிக்கப்படலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.

இது அதே தொலைவு கொண்ட தூரத்தை விலையுயர்ந்த காரில் கடப்பதற்கும் தற்போது இதே கட்டணம் தான் வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

ஹில்வுட் பிராப்பர்டீஸ் என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து வெர்டிபோர்டுகளை உருவாக்கும் வேலைகளில் ஊபர் நிறுவனம் இறங்கியுள்ளது.

வெர்டிபோர்டுகள் என்றால் என்ன?

இவை ஏர்ஃபோர்ட் எனப்படும் விமான நிலையத்துக்கு இணையானவையாகும்.

அதாவது பேருந்து நிலையம், ரயில் நிலையம் போல இந்த பறக்கும் டேக்ஸிக்களுக்கான பிரத்யேக ஏறுதல்/இறங்குதல் நிலையம்.

இதைத்தான் வெர்டிபோர்ட் என்று ஊபர் அழைக்கிறது.

டல்லாஸ் நகரில் வெர்டிபோர்டுகளுக்கான கட்டுமான வேலைகள் தற்போது துவங்கப்பட்டுள்ளன.

மேலும் இவை மின்சக்தியால் இயங்கும் வாகனங்கள் என்பதால் இவற்றிற்கான மின் தேவையை பூர்த்தி செய்ய சார்ஜிங் நிலையங்களையும் இந்த வெர்டிபோர்டுகளில் நிர்மானிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

பிஃளையிங் அல்லது பறக்கும் டேக்ஸிக்களை தயாரித்துத் தருவதற்காக பெல் ஹெலிகாப்டர், ஆரோரா, பிபிஸ்ட்ரெல், மூனே மற்றும் எம்பிரேயர் ஆகிய நிறுவனங்களுடன் ஊபர் ஒப்பந்தம் செய்துள்ளது.

மேலும் பிரத்யேகமாக சார்ஜிங் நிலையங்களை அமைத்துத்தருவதற்காக பிரபல சார்ஜ்ஃபாயிண்ட் நிறுவனத்துடன் மற்றொரு ஒப்பந்தம் செய்துள்ளது ஊபர்.

2020ஆம் ஆண்டு துபாய் நகரில் பல்வேறு நாடுகள் கலந்து கொள்ளவிருக்கும் 2020 உலக கண்காட்சி நடக்க உள்ளது.

இதையொட்டி தனது பறக்கும் டேக்ஸிக்களை துபாய் நகரில் இயக்க துபாய் அரசுடனும் ஊபர் கைகோர்த்துள்ளது.

தற்போது மொபைல் ஆஃப்களில் ஒரு கிளிக் செய்தால் போதும் சில நொடிகளில் நம் இருப்பிடம் தேடி வாடகை கார்கள் வந்துவிடுகின்றன.

இனி அதே ஒரு கிளிக்கில் நம் முன்னே பறக்கும் டேக்ஸிக்களும் வரப்போகும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரூ, கொல்கத்தா என பல நகரங்களும் தற்போது போக்குவரத்து நெரிசலில் சிக்கி விழிபிதுங்கி வருகின்றன.

இந்நிலையில் வாடகை டேக்ஸி துறையில் முதன்மையானதாக விளங்கும் இந்தியாவில் பறக்கும் டேக்ஸி நிச்சயம் பெரிய தாக்கத்தை உண்டாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஊபர் நிறுவனத்தின் பறக்கும் டேக்ஸி சேவை பற்றிய காணொளியை மேலே காணலாம்.

English summary
Read in Tamil about uber to start flying taxi operations by 2020. ubers starts testing for flying taxi service.
Please Wait while comments are loading...

Latest Photos