பறக்கும் கார் டாக்சியை அறிமுகப்படுத்த உபேர் நிறுவனம் திட்டம்!

பறக்கும் கார் டாக்சி திட்டத்தை உபேர் நிறுவனம் கையிலெடுத்துள்ளது. இந்த புதிய பறக்கும் கார் எப்படியிருக்கும் என்பது குறித்த தொழில்நுட்ப விஷயங்கள் குறித்தும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

Written By:

வாடகை கார் மார்க்கெட்டில் அமெரிக்காவை சேர்ந்த உபேர் நிறுவனம் புதிய புரட்சியை படைத்தது. முன்பதிவு செய்து அடுத்த சில வினாடிகளில் வாடகை கார் வீட்டு வாசலுக்கு வந்து நிற்கும் அற்புத தொழில்நுட்பத்தின் மூலமாக உலக அளவில் சேவை வழங்கி வருகிறது.

மேலும், ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் கார்களை வடிவமைக்கும் முயற்சியிலும் அந்த நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது தெரிந்ததே. இந்தநிலையில், போக்குவரத்து துறையில் அடுத்த புரட்சியை படைக்கும் நோக்கில், தற்போது அடுத்த கட்டத்திற்கு சென்றிருக்கிறது உபேர்.

பேட்டரி கார்

பேட்டரியில் இயங்கும் புதிய பறக்கும் காரை தயாரிக்கும் முயற்சியில் உபர் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அதாவது, இப்போது வீட்டின் வாசலுக்கு வரும்உபர் வாடகை கார்கள் இனி வீட்டின் மொட்டை மாடிக்கே வந்து இறங்கும்.

தீவிரம்

கேட்கும்போதே ஆர்வம் பீறிடுகிறதல்லவா? இந்த திட்டத்தை சாத்தியப்படுத்தும் நோக்கில் மிக திடமான, தீவிரமான முயற்சிகளில் இறங்கியிருக்கிறது உபர் நிறுவனம். அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ஹெலிபேடுகள் கொண்ட வீடுகளில் இந்த பறக்கும் கார் டாக்சி சேவையை வழங்கஉபர் திட்டமிட்டுள்ளது.

செங்குத்தாக எழும்பும்

இந்த கார் செங்குத்தாக மேல் எழும்பும் திறனை பெற்றிருக்கும். எனவே, ஓடுபாதை தேவையில்லை. எனவே, வணிக வளாகங்கள், அலுவலக கட்டடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளில் இந்த பறக்கும் கார் எளிதாக தரையிறங்கி, மேல் எழும்பி பறக்கும்.

புகையில்லா கார்

இது சுற்றுச்சூழலுக்கு தீங்கு தராத பேட்டரியில் இயங்கும் இலகு வகை பறக்கும் காராக உருவாக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது. மேலும், ஹெலிகாப்டர்கள் போன்று இல்லாமல், டெசிபலைவிட மிகவும் குறைவான சப்தத்தை வெளிப்படுத்தும்.

வேகம்

இந்த கார் மணிக்கு 240 கிமீ வேகத்தில் பறக்கும். ஒருமுறை சார்ஜ் செய்தால் 160 கிமீ தூரம் வரை பறக்கும். தினசரி அலுவலகம் மற்றும் வியாபார விஷயமாக நகரங்களில் செல்ல வேண்டிய தேவை இருப்போருக்கு, இது மிகச் சிறப்பான வசதியாக இருக்கும்.

பைலட் தேவையில்லை

இது பேட்டரியில் இயங்கும் பறக்கும் காராக மட்டும் இல்லை. பைலட் இல்லாமல் இயங்கும் வசதியையும் பெற்றிருக்கிறது. பயணி ஏறியவுடன் செல்லுமிடத்தை பதிவு செய்தால், குறிப்பிட்ட இடத்திற்கு விரைவாக கொண்டு சேர்க்கும். ஆனால், முதல்கட்டமாக இந்த பறக்கும் காரை பைலட் உதவியுடன் இயக்கஉபர் திட்டமிட்டுள்ளது.

கூட்டணி

பறக்கும் கார் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த பறக்கும் கார் டாக்சி சேவையை சாத்தியப்படுத்தஉபர் திட்டமிட்டுள்ளது. இதற்காக, பறக்கும் கார் தயாரிப்பு நிறுவனத்திற்கு முதலீட்டு உதவியையும் தருவதற்குஉபர் திட்டமிட்டுள்ளது.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Uber is working on a flying car project.
Please Wait while comments are loading...

Latest Photos

LIKE US ON FACEBOOK