வெறும் ஒரு மணிநேரத்தில் லண்டன் டு நியூயார்க்... ஏர்பஸ் விமான திட்டம்!

By Saravana Rajan

உலகின் மிகப்பெரிய விமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்பஸ் சூப்பர்சானிக் விமானத்தை தயாரிக்கும் திட்டத்தை கையிலெடுத்துள்ளது.

இதற்கான, தொழில்நுட்பம் தொடர்பாக சில காப்புரிமைகளுக்கு அந்த நிறுவனம் விண்ணப்பித்திருக்கிறது. அல்ட்ரா ரேபிட் என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்படும் இந்த அதிவேக பயணிகள் விமானம் எதிர்கால விமான போக்குவரத்தில் புரட்சியை படைக்கும் வாய்ப்பு இருக்கிறது.

கான்செப்ட்

கான்செப்ட்

கான்செப்ட் என்று சொல்லக்கூடிய மாதிரி சூப்பர்சானிக் பயணிகள் விமானத்தை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக, கண்டுபிடிக்கப்பட்ட சில புதிய தொழில்நுட்பங்களுக்கு காப்புரிமை பெற விண்ணப்பித்திருக்கிறது.

ராக்கெட் எஞ்சின்

ராக்கெட் எஞ்சின்

இந்த புதிய விமானத்தில் ராக்கெட்டுகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தில் புதிய எஞ்சின்களை வடிவமைத்து பொருத்த திட்டமிட்டுள்ளனர். அதேபோன்று, டர்போஜெட்டுகளும் கொண்டிருக்கும். மேலும், இந்த புதிய ராக்கெட் எஞ்சின் தொழில்நுட்பத்துக்கும் ஏர்பஸ் அமெரிக்க புவிசார் குறியீட்டு அமைப்பிடம் விண்ணப்பித்திருக்கிறது.

 எஞ்சின் விபரம்

எஞ்சின் விபரம்

இதன் இரண்டு இறக்கைகளிலும் இரண்டு ராம்ஜெட் எஞ்சின்கள் பொருத்தப்பட்டிருக்கும். விமானத்தின் உடல்பகுதியின் முன்பக்கத்தின் கீழ்பகுதியில் இரண்டு டர்போஜெட்டுகள் இருக்கும். பின்பகுதியில் ராக்கெட் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.

எஞ்சின் செயல்பாடு

எஞ்சின் செயல்பாடு

விமானம் புறப்படுவதற்கு, மேலே ஏறி, இறங்குவதற்கு டர்போஜெட்டுகள் பயன்படும். குறிப்பிட்ட உயரத்தை அடைந்ததும், விமானத்தின் டர்போஜெட்டுகள் உள்ளே இழுத்துக்கொள்ளும். அதன்பிறக்கு ராக்கெட் எஞ்சின் உதவியுடன் செங்குத்தாக விமானம் மேலே செலுத்தப்படும். அதன்பிறகு, விமானம் படுக்கை வாட்டில் பறக்கத் துவங்கும். அப்போது ராக்கெட் எஞ்சின்கள் அணைக்கப்பட்டு, இறக்கைகளில் இருக்கும் ராம்ஜெட் எஞ்சின் உதவியுடன் சூப்பர்சானிக் வேகத்தில் பறக்கும்.

 வேகம்...

வேகம்...

அதிவேகத்தில் பறக்கும் திறன் கொண்ட இந்த விமானம் லண்டனிலிருந்து நியூயார்க் இடையிலான ஏழரை மணி நேர பயண தூரத்தை வெறும் ஒரு மணிநேரத்தில் இந்த விமானம் கடந்துவிடும். அதாவது, மாக் 4.5 எனப்படும் ஒலியின் வேகத்தைவிட 4 மடங்கு அதிக வேகத்தில் விமானம் பறக்கும்.

விசேஷ இருக்கைகள்

விசேஷ இருக்கைகள்

விமானத்தின் அதிவேகம் காரணமாக பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இருப்பதற்காக விசேஷ அமைப்புடைய இருக்கைகள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த இருக்கைகள் மிக சொகுசானதாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இது முதல்முறையல்ல...

இது முதல்முறையல்ல...

இதுபோன்று ஏற்கனவே பறக்கும் தட்டு வடிவிலான அதிவேக சாதனம் ஒன்றுக்கும் கடந்த ஆண்டு ஏர்பஸ் விண்ணப்பித்திருக்கிறது. இதைத்தொடர்ந்து, தற்போது சூப்பர்சானிக் விமானத்திற்கு அந்த நிறுவனம் விண்ணப்பம் செய்துள்ளது.

பொழுதுபோக்கு வசதி தரும் தலைகவசம்

பொழுதுபோக்கு வசதி தரும் தலைகவசம்

சூப்பர்சானிக் விமானம் மட்டுமின்றி, விமான பயணிகளுக்கு பொழுதுபோக்கு அம்சங்கள் தரும் ஹெல்மெட் ஒன்றிற்கும் அந்த நிறுவனம் காப்புரிமை பெற விண்ணப்பித்துள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Airbus has filed a patent for a supersonic, "ultra-rapid" plane that would make the trip from London to New York in an hour, traveling at speeds of Mach 4.5 (or four and a half times the speed of sound). Even trips half way round the world — like from Paris to San Francisco or Tokyo to Los Angeles — could be completed in about three hours.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X