போர்களத்தில் மருத்துவ தேவைக்காக நுண்ணறிவு கொண்ட ஹெலிகாப்டர்கள்

போர்களத்தில் இராணுவ வீரர்கள் படுகாயமடைந்தால் அவர்களை காப்பாற்றி கொண்டுசெல்ல ஆளில்லாமல் இயங்கும் ஹெலிகாப்டர்களை பயன்படுத்த அமெரிக்க நாடு சோதனை செய்து வருகிறது.

By Azhagar

போர்களத்தில் படுகாயமடைந்த இராணுவ வீரர்களை காப்பாற்றி கொண்டுசெல்ல தானாக இயங்கும் ட்வின் ராட்டர் ஹெலிகாப்டர்களை அமெரிக்க இராணுவ ஆராய்ச்சி மையம் உருவாக்கியுள்ளது.

போரில் காயமடைந்தவர்களை காப்பாற்ற ஆளில்லா ஹெலிகாப்டர்கள்!

மனித உயிர்களை ஆபத்துக்காலத்தில் காப்பாற்றுவதில் என்றுமே அமெரிக்கர்கள் உலகளவில் முன்னிலை பெறுகிறார்கள். அதற்காக அவர்கள் உருவாக்கும் தொழில்நுட்ப சாதனங்களும் தனது பயன் அறிந்து திருத்தமாகவும், துல்லியமாகவும் செயல்படுகிறது.

போரில் காயமடைந்தவர்களை காப்பாற்ற ஆளில்லா ஹெலிகாப்டர்கள்!

பல்வேறு கட்ட பரிந்துரை மற்றும் பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு அமெரிக்காவின் இராணுவ மருத்துவ ஆராய்ச்சி மையம், போரின் போது காயமடையும் இராணுவ வீரர்களை கொண்டு செல்ல, விமானியின்றி இயங்கும் ஹெலிகாப்டர்களை உருவாக்கியுள்ளது.

போரில் காயமடைந்தவர்களை காப்பாற்ற ஆளில்லா ஹெலிகாப்டர்கள்!

இன்னும் சோதனை முயற்சியில் உள்ள இந்த ஹெலிகாப்டர்களை எப்போது அமெரிக்க இராணுவம் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது எனபது தெரியவில்லை.

முற்றிலும் இராணுவ தேவைக்காக உருவாக்கப்படும் ஹெலிகாப்டர்களில், உயிருக்கு போராடும் வீரர்களை காப்பாற்ற பயன்படுத்தும் தொழில்நுட்பங்களை உருவாக்கும் முனைப்பில் அமெரிக்க தீவிரமாக உள்ளது.

போரில் காயமடைந்தவர்களை காப்பாற்ற ஆளில்லா ஹெலிகாப்டர்கள்!

போரின் போது வீரர்களுக்கு மருத்துவ சேவையாற்ற, தற்போது போர்களத்தில் பயன்படுத்தப்படும் சி.எச்- 47 சிங்கூஹ் வான் ஊர்தி போல ட்வின் ராட்டர் கொண்ட டி.பி. 14 ஹாக் மாடல் ஹெலிகாப்டர்களை அமெரிக்க இராணுவ ஆராய்ச்சி மையம் உருவாக்கியுள்ளது.

போரில் காயமடைந்தவர்களை காப்பாற்ற ஆளில்லா ஹெலிகாப்டர்கள்!

போரின் போது இராணுவ வீரர்கள் இறந்தாலோ அல்லது படுகாயம் அடைந்தாலோ, அவர்களை தூக்கி சென்று அருகிலிருக்கும் இராணுவ தளத்திற்கு பத்திரமாக எடுத்து செல்லக்கூடிய வகையில் மருத்துவ சேவையாற்றும் வான் ஊர்திகளாக இவைகள் இயங்கும்.

போரில் காயமடைந்தவர்களை காப்பாற்ற ஆளில்லா ஹெலிகாப்டர்கள்!

6 அடி நீளத்தில், 2.0 அங்குல அகலத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த ஹெலிகாப்டர்கள், 430 கிலோ வரையிலான எடையுடன் பறக்க திறன் பெற்றவை. ஒரு மணிநேரத்தில் சுமார் 82 கிலோ மீட்டரை கடந்து செல்ல ஆற்றல் பெற்றவை. இடம், பலம் அறிந்து தானாக பறக்கக்கூடிய அளவில் துல்லியம் வாய்ந்த வகையில் டி.பி. 14 ஹாக் மாடல் ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

போரில் காயமடைந்தவர்களை காப்பாற்ற ஆளில்லா ஹெலிகாப்டர்கள்!

ஒளியை கண்டறிந்து வரையறை செய்துக்கொள்ளும் திறன் (Light Detection and Ranging) அல்லது 3டி லேசர் ஸ்கேனிங் ஆகிய தொழில்நுட்பங்களில் கொண்டு ஹெலிகாப்டர்கள் வானில் பறந்து செல்லும்.

போரில் காயமடைந்தவர்களை காப்பாற்ற ஆளில்லா ஹெலிகாப்டர்கள்!

சுயமாக பறக்கும் திறன், வரம்பு மீறிய சூழலில் பணிபுரிய வேண்டிய ஆற்றல் ஆகியவற்றுக்காக ஹெலிகாப்டரின் நெறிமுறைகள் (algorithms) மேம்படுத்தப்பட்டுள்ளது.

போரில் காயமடைந்தவர்களை காப்பாற்ற ஆளில்லா ஹெலிகாப்டர்கள்!

டி.பி. 14 ஹாக் மாடல் ஹெலிகாப்டர்களை போர்களத்தில் மட்டுமே பயன்படுத்துவதற்கான முயற்சிகளை அமெரிக்க இராணுவ ஆராய்ச்சி மையம் எடுத்து வருகிறது.

ஆனால் இவைகள் மல்டி டொமைன் தேவைகளில் அதாவது, நிலம், நீர், காற்று, விண்வெளி மற்றும் மின்வெளி (cyberspace) என எல்லாவற்றிருக்கும் பயன்படுத்த வாய்புள்ளதா என்பது குறித்த தீவிர ஆராய்ச்சிலும் அமெரிக்க இராணுவ மையம் ஈடுபட்டு வருகிறது.

போரில் காயமடைந்தவர்களை காப்பாற்ற ஆளில்லா ஹெலிகாப்டர்கள்!

போர்களத்தில் சண்டையிட ரோபோக்களை பயன்படுத்த வேண்டும் , அதற்கு ஏற்றவாறான தொழில்நுட்பத்தை உருவாக்கி பரிச்சித்து பார்க்கவேண்டும் என்பது அமெரிக்க இராணுவ ஆராய்ச்சி மையத்தின் நீண்ட நாள் கனவு.

போரில் காயமடைந்தவர்களை காப்பாற்ற ஆளில்லா ஹெலிகாப்டர்கள்!

அதற்கான முதற்கட்டமாகத்தான் தான் தற்போது தானாக செயல்படக்கூடிய திறன் படைத்த டி.பி. 14 ஹாக் மாடல் ஹெலிகாப்டர்களை அமெரிக்கா நாடு, போர் சூழல்களில் சோதனை செய்து பார்க்க விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
U.S. Army could soon call on unmanned helicopters to evacuate the wounded to nearby aid stations
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X