தேர்தல் பிரச்சாரத்திற்காக ரூ.5 கோடியில் பென்ஸ் பஸ் வாங்கிய உபி முதல்வர் அகிலேஷ்!

தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்திற்காக ரூ.5 கோடி மதிப்பில் மெர்சிடிஸ் பென்ஸ் பஸ் ஒன்றை வாங்கியிருக்கிறார் உபி முதல்வர் அகிலேஷ் யாதவ். அந்த பஸ்சின் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

Written By:

அடுத்த ஆண்டு உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்காக அம்மாநில அரசியல் கட்சிகள் தீவிர களப்பணியில் இறங்கியிருக்கின்றன.

இந்த நிலையில், மாநிலம் முழுவதும் நேரில் சென்று வாக்காளர்களை சந்திக்க 'விகாஸ் ரத யாத்ரா' என்ற பெயரில் தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்தை துவக்கியிருக்கிறார் அம்மாநில முதல்வரும், சமாஜ்வாடி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ். இந்த பயணத்தை சிறப்பாக முடிப்பதற்காக விசேஷ வசதிகளுடன் கஸ்டமைஸ் செய்யப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் மல்டி ஆக்சில் பஸ்சை அவர் வாங்கியிருக்கிறார். அந்த பஸ்சின் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

சுற்றுப் பயணத்திற்கு ஏற்ற வகையில், பல்வேறு வசதிகளுடன் மெர்சிடிஸ் பென்ஸ் மல்டி ஆக்சில் மினி பஸ் கஸ்டமைஸ் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பஸ்சின் மதிப்பு ரூ.5 கோடி என தெரிவிக்கப்படுகிறது. அப்படி என்னென்ன வசதிகள் இருக்கிறது என்பதை தொடர்ந்து காணலாம்.

பஸ்சின் உட்புற கேபின் இரண்டு அறைகளாக தடுக்கப்பட்டு இருக்கின்றன. ஒரு அறை அலுவலகம் போன்று பயன்படுத்தும் விதத்திலும், மற்றொரு அறையில் ஓய்வாக செல்வதற்கான வசதிகளையும் கொண்டுள்ளது.

முற்றிலும் குளிர்சாதன வசதி, உயர்தர இருக்கைகள் கொண்ட இந்த பஸ்சில் 6 பேர் பேர் வரை செல்ல முடியும். அத்துடன், இந்த பஸ்சில் முதல்வருக்கான ஓய்வு அறையில் ரெஸ்ட் ரூம் ஒன்றும் உண்டு. எனவே, நீண்ட தூரம் பயணித்தாலும் தொந்தரவு இருக்காது.

கூட்டங்களில் பேசுவதற்கு ஏதுவாக, இந்த பஸ்சில் கூரையின் மேல்புறத்திற்கு செல்ல ஏதுவாக லிஃப்ட் வசதியும் உள்ளது. அத்துடன், மைக்செட், ஸ்பீக்கர்கள், விளக்குகளும் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

பஸ்சின் வெளிப்புறம் முழுவதும் சமாஜ்வாடி கட்சியின் சைக்கிள் சின்னத்தை பிரதிபலிக்கும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. பஸ்சின் பாதுகாப்புக்காக விசேஷ பாதுகாப்பு அதிகாரிகளும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சொகுசான பயணம் என்பது மட்டுமின்றி, பாதுகாப்பான பயணமாகவும் அமையும் விதத்தில் இந்த பஸ் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. குண்டு துளைக்காத கண்ணா ஜன்னல்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. பஸ்சை சுற்றிலும் கண்காணிப்பதற்கும், பாதுகாப்புக்காகவும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

இந்த பஸ்சின் எஞ்சின் மற்றும் இதர தொழில்நுட்ப விபரங்கள் குறித்த தகவல் இல்லை. ஆனால், அகிலேஷ் யாதவ் சுற்றுப் பயணத்தை துவங்கிய சில கிலோமீட்டர் தூரத்திலேயே பஸ்சில் பழுது ஏற்பட்டு நடுவழியில் நின்றது.

இதையடுத்து, அணிவகுப்புக்கு வந்த டொயோட்டா லேண்ட்க்ரூஸர் எஸ்யூவியில் ஏறி தனது சுற்றுப் பயணத்தை தொடர்ந்தார் அகிலேஷ் யாதவ். அதன்பிறகு பஸ்சில் தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டது.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
UP chief minister Akhilesh Yadav's Luxurys bus Details.
Please Wait while comments are loading...

Latest Photos