அமெரிக்க இராணுவத்திற்கான பிரத்யேக செயல்பாடுகளை கொண்ட ஹெலிகாப்டர் ரெடி...!

Written By:

சுழற்சி முறையில் இயங்கும் இணைக்கப்பட்ட இரண்டு சுற்றகங்கள் (co-axial rotor) ஒரே கணைகள் மீது அமர்த்தப்பட்டு உருவாக்கப்படுபவை தான் கோ ஆக்சைல் ஹெலிகாப்டர்கள். பிரபல லாக்ஹீட் மார்டின் நிறுவனம் தனது எஸ்-97 மாடல் ஹெலிகாப்டர்களில் இதே தொழில்நுட்பத்தை பின்பற்றி ஒரு வான் ஊர்தியை தயாரித்துள்ளது.

விண்வெளி, பாதுகாப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களை தயாரித்து வரும் அமெரிக்காவின் லாக்ஹீட் மார்டின் நிறுவனம் புதிய தொழில்நுட்பத்தில் இயங்கும் தாக்கும் திறன் கொண்ட ஹெலிகாப்டரை உருவாக்கியுள்ளது.

இரண்டு சுற்றகங்கள் ஒரே சுழற்சி (co-axial rotor) முறையில் இயங்கும் இந்த ஹெலிகாப்டரை தனது எஸ்-97 மாடல் ஹெலிகாப்டர்களில் ஒன்றில் பொருத்தி உருவாக்கி அதில் லாக்ஹீட் மார்டின் வெற்றியடைந்துள்ளது.

அமெரிக்காவின் ஆயூத படைகளுக்காக தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஹெலிகாப்டரை அடுத்த தலைமுறைக்கான வான் ஊர்தியாக லாக்ஹீட் மார்டின் சந்தையில் அடையாளப்படுத்தி வருகிறது. இதை சோதனை செய்யும் லாக்ஹீட் மார்டினின் வீடியோவும் வெளியாகி ஹெலிகாப்டரின் மீது ஒரு பிரம்பிப்பை ஏற்படுத்தியுள்ளது.

2.5 நிமிடம் ஓடக்கூடிய அந்த விடியோவில் செங்குத்தான விதத்தில் இயக்கப்படுவது போன்று ஹெலிகாப்டரின் சோதனைகள் உள்ளன. இந்த வான் ஊர்தியில் இணை சுழற்சி கொண்ட சுற்றகங்கள், அதற்கு ஏற்றவாறு சுற்றும் பிளேடுகள் மற்றும் உந்து சக்தி கொண்ட ப்ரோப்பலர்கள் உள்ளதால் ஹெலிகாப்டரை செங்குத்தாக இயக்குவது சாத்தயப்படுகிறது.

கருப்பு நிறத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஹெலிகாப்டருக்கான சோதனையில், அது குறைந்த வேகத்தில், குறைந்த உயரத்தில் நகர்ந்து செல்கிறது. அதனுடைய பின்வாங்கும் திறனும் வேகமாக இருக்கிறது. இதன்மூலம் ஹெலிகாப்டர் செயல்பாடுக்கு வர தயார் நிலையில் இருப்பதை நாம் உணர்ந்துகொள்ள முடிகிறது.

அடுத்த தலைமுறைக்கான வான் ஊர்தியாக தயாராகியுள்ள இந்த தந்திரம் வாய்ந்த ஹெலிகாப்டர் கிட்டத்தட்ட 35 டிகிரி செல்ஷியஸ் கொண்ட உச்சபட்ச வெப்பநிலையிலும் சாதரணமாக செயல்படும். மேலும் தரையிலிருந்து 10,000 அடி உயரம் வரை இதனால் பயணிக்க முடியும்.

ரேடார் அலைகளின் இயக்கங்களை கொண்டுயிருக்கும் இந்த ஹெலிகாப்டர் குறைந்த அளவிலான ஒலி எழுப்பும் திறன் பெற்றவை. அதேபோல மற்ற வான் ஊர்திகளை விட இதனுடைய நகர்வு திறன் மேம்படுத்தப்பட்ட நிலையில் இருக்கும். ஏற்கனவே இருக்கும் டேங்குடன் துணை எரிவாயு டேங்கையும் இது கொண்டுள்ளது.

அதனால் சாதரண கிலோ மீட்டர் அளவை விட எஸ்-97 ரக ஹெலிகாப்டரில் 570 கிலோ மீட்டர் வரை கூடுதலாக பயணத்தை நீடித்துக்கொள்ளலாம்.

 

இரண்டு விமானிகளுடன் மேலும் 6 பயணிகள் வரை இந்த ரைய்டர் ஹெலிகாப்டரில் ஏற்றி செல்ல முடியும். இதனுடைய எஞ்சின் 2600 பி.எச்.பி பவர் வழங்கும் ஆற்றல் கொண்டது. இதிலிருக்கும் ட்ர்பைன் பவர் பிளாண்ட் மூலம் இந்த வான் ஊர்தி 4990 கிலோ கிராம் எடை வரை தாங்கும். மேலும் இதனால் ஒரு மணி நேரத்தில் 407 கிலோ மீட்டரை சென்றடைய முடியும்.

லாக்ஹீட் மார்டின் நிறுவனம் தயாரித்திருக்கும் எஸ்-97 ரைய்டர் ஹெலிகாப்ட்டரில் ஏழு மிசைல்களுடன் கூடிய ராக்கெட் குண்டுகள், 2 ராக்கெட்டுகள் , 500 முறை இயங்கக்கூடிய ஒரு கேலிபர் துப்பாக்கி மற்றும் 7.62 மிமீ நீளம் கொண்ட ஒரு துப்பாக்கி ஆகிய ஆயூதங்களை எடுத்து செல்லும் வசதி உள்ளது.

அதிவேகத்தில் இயங்கும் வான் ஊர்திகளை லாக்ஹீட் மார்டின் நிறுவனம் எக்ஸ்-2 தொழில்நுட்பம் என்று குறிப்பிடும். அதன் படி எஸ்-97 ரைய்டர் ஹெலிகாப்டரில் பெரும் தாக்குதல் மட்டுமின்றி, சிறியளவிலான நெருக்கடி சூழ்நிலைகளின் போது இராணு வீரர்கள் பயன்படுத்தலாம்.

தாக்குதலை தவிர தேடுதல் மற்றும் மீட்பு பணிகளுக்கு கூட இந்த வான் ஊர்தியை அவசர காலகட்டத்தில் பயன்படுத்தும் விதத்தில் லாக்ஹீட் மார்டின் நிறுவனம் தயாரித்துள்ளது. விமானியின்றி தானாக ஓட்டக்கூடிய திறனிலும் எஸ்-97 ரைய்டர் ஹெலிகாப்ட்டர் தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Lockheed Martin has released a new video of its two S-97 Raider prototype attack helicopters strutting its aerial stuff.
Please Wait while comments are loading...

Latest Photos