வடகொரியா அணு ஆயுத தாக்குதல் நடத்தினால் அமெரிக்க அதிபர் தப்புவதற்கான ரகசிய விமானம் இதுதான்!!

Written By:

வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகளுக்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், போர் தொடுக்கும் வாய்ப்புகள் குறித்தும் பரிசீலித்து வருகிறது. ஆனால், உலகிலேயே மிக அபாயகரமான நாடாக பார்க்கப்படும் வடகொரியா மீது கை வைக்க அமெரிக்கா யோசித்து வருவதும் உண்மையே.

தனது நாட்டாமை குணத்தை நிலைநாட்ட போர் தொடுக்க வேண்டிய நிலைக்கும் அமெரிக்கா தள்ளப்படலாம். இந்த சூழலில் அமெரிக்காவில் அணு ஆயுத தாக்குதல் என்ற வழியை வடகொரியா கையில் எடுக்கும் அபாயம் இருக்கிறது. அவ்வாறு, அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும் பட்சத்தில், அமெரிக்க அதிபரை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்வதற்கான திட்டங்கள் எப்போதும் தயாராகவே இருக்கிறது.

Picture credit: ABPIC/ @Kevin colbran

அவ்வாறான சூழலில் அமெரிக்க அதிபரை மிக பத்திரமாக அழைத்துச் செல்வதற்கு வழக்கமான ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தை அமெரிக்க விமானப்படை பயன்படுத்தாது. ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்திற்கு பதிலாக, அதிபரை அழைத்துச் செல்ல சிறிய ரக ரகசிய விமானங்களை அமெரிக்க புலனாய்வுத் துறை தயார் நிலையில் வைத்திருக்கிறது.

Picture credit: ABPIC/ @Russ Smith

அணு ஆயுத தாக்குதலின்போது அமெரிக்க அதிபரை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்வதற்கு மூன்று கல்ஃப்ஸ்ட்ரீம் சி20சி விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கின்றன.

Picture credit: ABPIC/ @Erik Frikke

வழக்கமாக அமெரிக்க அதிபர் வெளிநாடு அல்லது வெளியிடங்களுக்கு ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செல்லும்போது, இந்த விமானங்கள் ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானத்திற்கு முன்னதாக செல்லும். ஆனால், அவசர சமயங்களில் இந்த விமானங்களே அமெரிக்க அதிபரை காப்பதற்கான ஆயுதமாகவும் பயன்படுத்தப்படும்.

Picture credit: ABPIC/ @Erik Frikke

இந்த விமானங்களில் 12 முதல் 16 பேர் வரை பயணிக்க முடியும். அமெரிக்க அதிபர் மற்றும் உயர் பொறுப்பில் உள்ளவர்கள் இந்த விமானத்தில் செல்ல முடியும்.

Picture credit: ABPIC/ @Erik Frikke

கடந்த 1985ம் ஆண்டு இந்த விமானங்கள் வாங்கப்பட்டன. வாங்கப்பட்ட பல தசாப்தங்களை கடந்துவிட்டாலும், இந்த விமானங்களை அமெரிக்க வான்படை தொடர்ந்து பயன்படுத்துவதற்கு பல முக்கிய காரணங்கள் உண்டு.

Picture credit: ABPIC/ @charlie Stewart

இந்த விமானத்தில் மிகவும் விசேஷ தகவல் தொடர்பு சாதனங்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இந்த விமானங்களின் தகவல் தொடர்பு வசதியை இடைமறித்து கேட்க முடியாத அளவுக்கு மிகவும் பாதுகாப்பு அம்சங்கள் மிகுந்தவை.

இந்த விமானங்களில் பெரிய அளவிலான பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் ஆயுதங்கள் பொருத்தப்படவில்லை. அதேநேரத்தில், சுட்டு வீழ்த்த முடியாத அளவுக்கு விசேஷ பாதுகாப்பு வசதிகளை பெற்றிருக்கிறது.

பழைய டெக்னாலஜியில் இயங்கும் இந்த விமானங்களை அமெரிக்க விமானப்படை பயன்படுத்துவதில் மற்றொரு ரகசியமும் இருக்கிறது. இந்த விமானத்தில் பழைய தொழில்நுட்ப முறையிலான கட்டுப்பாட்டு சாதனங்கள் உள்ளன.

Picture credit: Flickr/ Fasil Avgeek

இதனால், இந்த விமானத்தை குறித்து வைத்து அணு ஆயுத ஏவுகணை ஏவப்பட்டாலும் கூட, அந்த ஏவுகணை இந்த விமானத்தின் சாதனங்களின் மின்காந்த அலைகளை கண்டறிந்து தாக்குதல் நடத்த முடியாதாம்.

Picture credit: Flickr/ TCav

பழைய விமானங்களாக இருந்தாலும், இந்த விமானங்கள் மிகச் சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. எனவே, இவை தொடர்ந்து சிறப்பான முறையில் இயங்குகின்றன. இந்த விமானங்களில் ரோல்ஸ்ராய்ஸ் டே டர்போஃபேன் எஞ்சின்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

Picture credit: Flickr/ Fasil Avgeek

கல்ஃப்ஸ்ட்ரீம் சி20சிஎஸ் விமானங்கள் சராசரியாக மணிக்கு 818 கிமீ வேகம் வரை பறக்கும் திறன் கொண்டது. ஒருமுறை முழுவதுமாக எரிபொருள் நிரப்பினால் 6,760 கிமீ தூரம் வரை பறந்து செல்லும். இந்த விமான மாடல்கள் 1979 முதல் 1986 வரை உற்பத்தியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும்... #ராணுவம் #military
Story first published: Monday, May 8, 2017, 14:26 [IST]
English summary
US President's Secret Planes.
Please Wait while comments are loading...

Latest Photos