ஒபாமா பயன்படுத்திய காரை பயன்படுத்துவாரா டொனால்டு டிரம்ப்?

சர்ச்சைகளுக்கு பெயர் போன அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றிருக்கும் டொனால்டு டிரம்ப் எந்த காரை பயன்படுத்தப்போகிறார் என்ற சந்தேகத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

By Saravana Rajan

உலகிலேயே அச்சுறுத்தல் அதிகம் கொண்ட தலைவராக அமெரிக்க அதிபர் பார்க்கப்படுகிறார். எனவே, அமெரிக்க அதிபருத்து அந்நாட்டு உளவுத் துறையால் மிக மிக உயரிய பாதுகாப்பு வழங்கப்படுகிறது. மேலும், அதிபருக்காக விசேஷ பாதுகாப்பு வசதிகள் கொண்ட கார், விமானம் போன்றவை பயன்படுத்துவதுடன் அவை சங்கேத பெயரில் அழைக்கப்படுகின்றன.

இந்த நிலையில், அமெரிக்காவின் பெரும் கோடீஸ்வரராக இருந்து அதிபராக பதவியேற்றிருக்கும் டொனால்டு டிரம்ப் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். அவருக்காக புதிய லிமோசின் ரக கார் தயாராகி வருகிறது. அந்த கார் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு இன்னும் சில மாதங்கள் பிடிக்கும் என்ற நிலையில், முன்னாள் அதிபர் ஒபாமா பயன்படுத்திய காரை பயன்படுத்துவாரா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், அந்த சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

 ஒபாமா பயன்படுத்திய காரையே பயன்படுத்தப்போகும் அமெரிக்க அதிபர் டிரம்ப்!

ஆம், அடுத்த சில மாதங்களுக்கு ஒபாமா பயன்படுத்திய காரையே அதிபர் டிரம்ப் அதிகாரப்பூர்வ காராக பயன்படுத்த உள்ளார். உலகிலேயே அதிநவீன பாதுகாப்பு வசதிகள் கொண்டது இந்த கேடில்லாக் லிமோசின் ரக கார். 1993ம் ஆண்டிலிருந்து அமெரிக்க அதிபர் பயன்படுத்துவதற்கான அதிகாரப்பூர்வ லிமோசின் ரக கார் மாடலை ஜெனரல் மோட்டார்ஸ் கீழ் செயல்படும் கேடில்லாக் நிறுவனம் தயாரித்து கொடுத்து வருகிறது.

 ஒபாமா பயன்படுத்திய காரையே பயன்படுத்தப்போகும் அமெரிக்க அதிபர் டிரம்ப்!

பல்வேறு கட்ட வடிவமைப்புப் பணிகள், ஆய்வுகள், சோதனை ஓட்டங்களுக்கு பின்னர் அமெரிக்க உளவுத் துறையின் ஒப்புதல் பெறப்பட்டு, இறுதி வடிவம் கொடுக்கப்படுகிறது. பின்னர்தான், அமெரிக்க அதிபர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. தற்போது ஒபாமா பயன்படுத்தி வந்த கேடில்லாக் லிமோசின் கார் அவர் பதவியேற்றபோது 2009ம் ஆண்டில் பயன்பாட்டிற்கு வந்தது.

 ஒபாமா பயன்படுத்திய காரையே பயன்படுத்தப்போகும் அமெரிக்க அதிபர் டிரம்ப்!

"தி பீஸ்ட்" என்ற அடையாளப் பெயரில் அழைக்கப்படும் இந்த கார் அமெரிக்க அதிபரின் நடமாடும் அலுவலகமாக பயன்படுத்தும் அளவுக்கு வசதிகள் நிறைந்தது. உள்நாட்டு பயணம், வெளிநாட்டுப் பயணம் எந்த நாட்டிற்கு அமெரிக்க அதிபர் இந்த காரில்தான் பயணிப்பார். இந்த காரை வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்வதற்காகவே சிறப்பு விமானம் பயன்படுத்தப்படுகிறது.

 ஒபாமா பயன்படுத்திய காரையே பயன்படுத்தப்போகும் அமெரிக்க அதிபர் டிரம்ப்!

உள்நாட்டில் பயணம் செய்யும்போது முன்புற பானட்டில் ஒருபக்கத்தில் அமெரிக்க கொடி பறக்கும். வெளிநாட்டு பயணங்களின்போது, ஒருபக்கத்தில் அமெரிக்கக் கொடியும், மறுபக்கத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிரு்ககும் நாட்டுக் கொடியும் பறக்கவிடப்பட்டிருக்கும்.

 ஒபாமா பயன்படுத்திய காரையே பயன்படுத்தப்போகும் அமெரிக்க அதிபர் டிரம்ப்!

அமெரிக்க அதிபருக்காக இந்த காரில் விசேஷ இருக்கை கொடுக்கப்பட்டிருக்கும். பின் இருக்கையில் வலது பக்கத்தில்தான் அமெரிக்க அதிபர் அமர்ந்து பயணம் செய்வார். அந்த இருக்கையில் வேறு யாரும் அமர்ந்து செல்வதற்கு அனுமதி கிடையாது. மேலும், அந்த இருக்கையின் அருகில் பல்வேறு கட்டுப்பாட்டு சாதனங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

 ஒபாமா பயன்படுத்திய காரையே பயன்படுத்தப்போகும் அமெரிக்க அதிபர் டிரம்ப்!

டொனால்டு டிரம்ப் பயன்படுத்தப்போகும் காரில் பல்வேறு பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்றுள்ளன. நவீன வகை எந்திர துப்பாக்கிகள், கண்ணி வெடி தாக்குதல்களிலிருந்து பயணிப்பவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையிலான மிக வலுவான விசேஷ கட்டமைப்பு கொண்டது இந்த கார்.

 ஒபாமா பயன்படுத்திய காரையே பயன்படுத்தப்போகும் அமெரிக்க அதிபர் டிரம்ப்!

இந்த காரில் தானியங்கி தீத்தடுப்பு கருவி, நச்சுப் புகை, ரசாயனத் தாக்குதல்களிலிருந்து பயணிகளை காக்கும் வசதி, காற்று சுத்திகரிப்பு வசதி, பகல் மற்றும் இரவு என எந்த நேரத்திலும் காரை சுற்றிலும் படம் பிடிக்கும் திறன் கொண்ட கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. அவசர சமயங்களில் இந்த காரில் பயணிப்பவர்களுக்கான ஆக்சிஜன் வழங்குவதற்கான சிலிண்டர்கள் மற்றும் ரத்த பாட்டில்களும் உண்டு.

 ஒபாமா பயன்படுத்திய காரையே பயன்படுத்தப்போகும் அமெரிக்க அதிபர் டிரம்ப்!

போயிங் 757 விமானத்தில் பொருத்தப்பட்டிருக்கும் கதவுகளுக்கு இணையான தடிமனான கதவுகள் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த காரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் உலோகத் தகடுகள் 8 இன்ச் தடினம் கொண்டதாக இருக்கின்றன. இதன் பெட்ரோல் டேங்க் கூட கண்ணி வெடித் தாக்குதலில் சேதமடையாது என்பதுடன், தீப்பிடிக்காத அம்சத்தையும் பெற்றிருக்கிறது.

 ஒபாமா பயன்படுத்திய காரையே பயன்படுத்தப்போகும் அமெரிக்க அதிபர் டிரம்ப்!

இந்த காரில் அதிகபட்சமாக 7 பேர் பயணிக்கும் வசதி இருக்கிறது. முன் வரிசையில் ஓட்டுனரை சேர்த்து 2 பேர் அமர்ந்து செல்லலாம். பின்புறத்தில் எதிரெதிராக கொடுக்கப்பட்டு இருக்கும் இருக்கைகள் தனி அறை போல தடுக்கப்பட்டு இருக்கிறது. இதில், பின்னோக்கிய இருக்கையில் 3 பேரும், பின் இருக்கையில் அதிபர் மற்றும் மற்றொரு விஐபி.,யும் பயணிக்கலாம்.

 ஒபாமா பயன்படுத்திய காரையே பயன்படுத்தப்போகும் அமெரிக்க அதிபர் டிரம்ப்!

இந்த கார் அதிபரின் நடமாடும் அலுவலகம் போன்று பயன்படுத்தப்படுவதால், செயற்கைகோள் தொலைபேசி, இன்டர்நெட் வசதிகள் உள்ளன. அவசர சமயங்களில் அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் மற்றும் துணை ஜனாதிபதியுடன் உடனடியாக பேசும் வசதியும் உண்டு.

 ஒபாமா பயன்படுத்திய காரையே பயன்படுத்தப்போகும் அமெரிக்க அதிபர் டிரம்ப்!

அமெரிக்க அதிபர் காரை ஓட்டுபவருக்கு அந்நாட்டு சிஐஏ உளவுத் துறை மூலமாக விசேஷ பயிற்சி அளிக்கப்படுகிறது. எந்தவொரு ஆபத்தான சூழலிலும் அதிபரை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்வதற்கான பயிற்சிகள் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. காரை வேகமாகவும், சாதுர்யமாகவும் அவர் ஓட்டுவதற்கு விசேஷ பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

 ஒபாமா பயன்படுத்திய காரையே பயன்படுத்தப்போகும் அமெரிக்க அதிபர் டிரம்ப்!

அமெரிக்க அதிபரின் கார் 5 டன் எடை கொண்டது. இந்த காரில் ரன் பிளாட் டயர்கள் பொருத்தப்பட்டிருப்பதால், கண்ணி வெடித்தாக்குதல்களில் சேதமடைந்தாலும் கூட காரை தொடர்ந்து குறிப்பிட்ட வேகத்தில் செலுத்த முடியும். இந்த கார் 100 கிமீ செல்வதற்கு 30 லிட்டர் எரிபொருள் செலவாகும். அமெரிக்காவின் சுற்றுச்சூழல் மாசு உமிழ்வு விதிகளிலிருந்து இந்த காருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

 ஒபாமா பயன்படுத்திய காரையே பயன்படுத்தப்போகும் அமெரிக்க அதிபர் டிரம்ப்!

இந்த நிலையில், இதைவிட அதிக வசதிகளும், பாதுகாப்பு அம்சங்களும் கொண்ட புதிய லிமோசின் கார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்காக தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கார் தீவிர சோதனை ஓட்டத்தில் இருக்கிறது. ஆய்வுகள் முடிந்து அடுத்த சில மாதங்களில் அந்த புதிய கார் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது.

புதிய கேடிஎம் ஆர்சி200 பைக்கின் படங்கள்!

புதிய கேடிஎம் ஆர்சி200 பைக்கின் படங்களை கீழே உள்ள கேலரியில் சென்று பார்க்கலாம்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
US President Trump will keep Obama-era Cadillac presidential limousine.
Story first published: Saturday, January 21, 2017, 13:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X