நீண்ட தூர பயணங்களின்போது காரில் இருக்க வேண்டிய டாப்-10 அக்ஸசெரீஸ்கள்!

By Saravana

வியாபாரம், சுற்றுலா சம்பந்தமாக காரில் நீண்ட தூர பிரயாணங்கள் என்பது பலருக்கு சர்வ சாதாரணமாகிவிட்டது. நீண்ட தூரம் பயணிக்கும் அலுப்பு தெரியாமலும், சொகுசாக பயணிப்பது மட்டுமல்ல, அவசர சமயங்களுக்கும் சில அத்தியாவசியமான ஆக்சஸெரீகள் காரில் இருக்க வேண்டியது கட்டாயம்.

அவ்வாறு காரில் இருக்க வேண்டிய சில முக்கியமான ஆக்செஸரீகளை இந்த செய்தித் தொகுப்பில் தொகுத்து வழங்கியிருக்கிறோம். விலை குறைவாகவும், அத்தியாவசியமானதுமான ஆக்செஸரீகளை காணலாம். வாருங்கள் ஸ்லைடருக்கு செல்லலாம்.

01. கார் செக்யூரிட்டி டூல்

01. கார் செக்யூரிட்டி டூல்

ஒவ்வொரு காரிலும் இருக்க வேண்டிய மிக அத்தியாவசியமான ஆக்சஸெரீ. ஏனெனில், சொல்லாமல் கொள்ளாமல் நடைபெறும் விபத்துக்களின்போதும், கார் கதவுகளை திறக்க முடியவில்லை என்றாலும், இந்த கருவியை பயன்படுத்தி ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து வெளியேற முடியும். மேலும், இந்த கருவியில் சிறிய எல்இடி விளக்கும் இருப்பதால், இரவு நேரத்திலும் டார்ச் லைட் போன்று பயன்படுத்தி வெளியேற வாய்ப்புண்டு. ரூ.150 முதல் ரூ.250 வரையிலான விலையில் கிடைக்கிறது.

02. சோலார் ஃபேன்

02. சோலார் ஃபேன்

கடும் கோடை தாக்கத்தில் சிக்கித் தவிக்கும் தமிழகம் போன்ற பிரதேசங்களுக்கு அவசியமான ஒரு சாதனம்தான் சோலார் பவர் ஃபேன். குறிப்பாக, காரை நிறுத்தியிருக்கும்போது இந்த விசிறியை போட்டுவிட்டால், காருக்குள் இருக்கும் வெப்பக் காற்றை வெளியேற்றி ஓரளவு வெப்பத்தை கட்டுப்படுத்தும். இது சூரிய ஒளியிலிருந்து மின்சாரத்தை தருவிக்கும் தொழில்நுட்பம் கொண்டது. எனவே, காரின் சார்ஜரில் இணைக்க வேண்டிய அவசியமில்லை.

03. சுருள் திரைசீலை

03. சுருள் திரைசீலை

நீண்ட தூர பயணங்களின்போது சூரிய ஒளி தொடர்ந்து உடலில் படும்போது எரிச்சலூட்டும். ஏசி ஓடினால் கூட பின் இருக்கையில் அமர்ந்து செல்பவர்களுக்கு அவஸ்தையை தரும். இதற்காக சுருள் போன்று மடக்கி வைத்துக் கொள்ளக்கூடிய விசேஷ திரைசீலைகள் கிடைக்கின்றன. இந்த திரைசீலைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ரூ.500 முதல் ரூ.3500 வரையிலான விலையில் கிடைக்கிறது.

04. இழுவை வடம்

04. இழுவை வடம்

பழுதாகிய காரை இழுத்துச் செல்வதற்கான கேபிள். புதிய கார்கள் கூட நடுவழியில் நின்று அவஸ்தை தரும் சம்பவங்களை காண முடிகிறது. அவ்வாறான சமயங்களில் காரை இதர வாகனங்களில் இணைத்து இழுத்துச் செல்வதற்கு இந்த கேபிள் பயன்படும். ரூ.500 விலையிலிருந்து கிடைக்கிறது.

05. பஞ்சர் கிட்

05. பஞ்சர் கிட்

ஸ்டெப்னி இருந்தாலும், அதில் காற்று குறைவாக இருந்தால் நிலைமை சிக்கலாகிவிடும். எனவே, ஏர் கம்ப்ரஷர், பஞ்சர் கிட்டும் கைவசம் இருப்பது நல்லது. சாதாரண ஜாக்கைவிட ஹைட்ராலிக் ஜாக் காரை உயர்த்துவதற்கு எளிதாக இருக்கும். அத்துடன் மினி ஏர் கம்ப்ரஷர், டயரை பஞ்சர் போடுவதற்கான கருவிகள் அடங்கிய கிட்டும் வாங்கி வைத்துக் கொள்வது அவசியம். ஆள் ஆரவமற்ற அல்லது உதவி கிடைக்காத இடத்தில் சிக்கும்போது இந்த கருவிகள் மூலமாக நமக்கு நாமே பஞ்சரை சரி செய்து கொள்ள முடியும்.

06. HD நைட் வைசர்

06. HD நைட் வைசர்

எதிர் வெயிலில் செல்லும்போது சூரிய ஒளி கண் கூச்சத்தை ஏற்படுத்தும். அப்போது காரில் கொடுக்கப்பட்டிருக்கும் வைசரை இறக்கி விடும்போது, அது பார்வையை மறைக்கும். இந்த பிரச்னையை போக்குவதற்கு எச்டி வைசர் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். கூலிங் கிளாஸ் போடும் பழக்கம் கொண்டவர்களுக்கு கூட இந்த எச்டி நைட் வைசர் மிகச்சிறப்பானதாக இருக்கும். ரூ.250 விலையில் கிடைக்கிறது.

07. எல்இடி திரை

07. எல்இடி திரை

நீண்ட தூர பயணங்களின்போது ஓட்டுனர் சாலையில் கவனம் செலுத்துவதால், அவர்களுக்கு பொழுது கழிந்துவிடும். ஆனால், உடன் வருபவர்களுக்கு பொழுது கழியாது. அதுபோன்ற சமயங்களில் இந்த எல்இடி டிவி திரையை வாங்கி பொருத்திக் கொண்டு சினிமா அல்லது நகைச்சுவை காட்சிகளை பார்த்தால் நேரம் போவதே தெரியாது. பயணமும் உற்சாகமானதாக மாறிவிடும். மேலும், இந்த திரையை ரியர் வியூ கேமராவுடன் இணைத்துக் கொள்ள முடியும். எனவே, பின்னால் வரும் வாகனங்களை பார்க்க முடியும் என்பதோடு, ரிவர்ஸ் எடுக்கும்போதும் பயன்படும். ரூ.5,000 விலையிலிருந்து கிடைக்கிறது.

 08. மினி ஃப்ரிட்ஜ் [கூலர்]

08. மினி ஃப்ரிட்ஜ் [கூலர்]

கடும் கோடை காலத்தில் வெளியூர் செல்லும்போது மணிக்கு ஒருமுறை வழியில் உள்ள குளிர்பான கடைகளில் நிறுத்தி நிறுத்தி வாங்கிக் கொள்வதைவிட, இந்த மினி ஃப்ரிட்ஜ் இருந்தால் குளிர்ச்சியான தண்ணீரையும், குளிர்பானங்களையும் எடுத்துச் செல்வதற்கு உபயோகப்படும். ரூ.1,500 விலையிலிருந்து கிடைக்கிறது.

09. கார் இன்வெர்ட்டர்

09. கார் இன்வெர்ட்டர்

காரில் இருக்கும் 12V சாக்கெட் மூலமாக சார்ஜ் போடும் வசதி இருந்தாலும், இந்த மினி இன்வெர்ட்டர் கையில் இருந்தால் கவலையில்லாமல் லேப்டாப், மொபைல்போன்களை சார்ஜ் செய்து கொள்ள முடியும். ரூ.850 விலையிலிருந்து கிடைக்கிறது.

 10. கார் நேவிகேஷன் சாதனம்

10. கார் நேவிகேஷன் சாதனம்

வெளியூர் செல்லும்போது அவசியமான கார் ஆக்சஸெரீயாக இதனை கூறலாம். வழியில் ஒவ்வொரிடமாக கேட்டு, நேரத்தை விரயம் செய்வதைவிட இந்த சாதனம் இருந்தால் திக்கு தெரியாத இடத்தில் இருந்துகூட எளிதாக ரூட்டை பிடித்து குறித்த நேரத்தில் சென்றுவிட முடியும். வழிகாட்டும் வசதி மட்டுமின்றி, கூடுதல் தகவல்களையும் பெற முடியும். ரூ.3,500 விலையிலிருந்து கிடைக்கிறது.

நீங்கள் காரில் செல்லும் போது பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?

இதேபோன்று, புதிதாக கார் ஓட்ட துவங்கியுள்ள பெரும்பாலானோருக்கு நம் காரில் திடீர் என பிரேக் பிடிக்க வில்லை என்றால் என்ன செய்வது, எப்படி தப்பிப்பது என குழப்பம் இருக்கும். ஏன், நன்றாக கார் ஓட்ட தெரிந்தவர்களுக்குகூட இதை எப்படி கையாள்வது என்பது தெரியாது. வாருங்கள், காரில் செல்லும் போது பிரேக் பிடிக்கவில்லை என்றால் எப்படி கையாள்வது, என்ன செய்ய வேண்டும் என்பதுகுறித்த தகவலை கீழே காணலாம்.

நீங்கள் காரில் செல்லும் போது பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?

கார்களில் நீங்கள் செல்லும் போது பிரேக் பிடிக்கவில்லை என்றால் நீங்கள் செல்லும் ரோடு, உங்களுடைய கார், ஆகியவற்றை வைத்து உங்கள் காரை நிறுத்துவற்காக சில வழிகள் இருக்கின்றன.

நீங்கள் காரில் செல்லும் போது பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?

பொதுவாக பவர் அசிஸ்ட் பிரேக் உள்ள கார்களில் கடினமாக பிரேக்கை அழுத்தினால் பிரேக் பிடிக்காமல் போகும், பெரும்பாலும் மலை ஏற்றங்களிலும் இறக்கங்களிலும் இந்த பிரச்சனைகள் அடிக்கடி வரலாம்.

நீங்கள் காரில் செல்லும் போது பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?

அந்த இடங்களில் செல்லும் போது நம் கார் பிரேக் பிடிக்கவில்லை என்றால் சற்று கஷ்டம் தான் சில நாடுகளில் மலை பகுதி ரோடுகளில் எஸ்கேப் லைன் என்ற தனி பாதையையே இப்பிரச்னையை சந்திப்பவர்களுக்காக வைத்திருக்கிறார்கள். எனினும் எல்லா இடங்களிலும் இல்லை.

உங்கள் காரில் பிரேக் பிடிக்கவில்லை என்றால் அதற்கு என்ன என்ன காரணங்கள் இருக்கும் அதை எப்படி சமாளிப்பது, என் கீழே பார்ப்போம் வாருங்கள்.

நீங்கள் காரில் செல்லும் போது பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?

டிராபிக்கில் இருந்து விடுபடுங்கள்

நீங்கள் காரில் செல்லும் போது திடீர் என பிரேக் பிடிக்கவில்லை என்றால் காரை ரோட்டின் ஓரமாக டிராபிக் இல்லாத பகுதிக்கு கொண்டு செல்லுங்கள், இதில் கவனமாக இருங்கள் நீங்கள் லேன் மாறுகின்றிர்கள் என்றால் பின்னாடி வருபவர்களை கவனித்து சிக்னல் செய்து லேன் மாறி வேண்டும்.

நீங்கள் காரில் செல்லும் போது பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?

ஆக்ஸிலேரட்டர் பிரச்னை

நீங்கள் காரில் செல்லும் போது ரேஸ் செய்யும் பெடல் நீங்கள் காலை எடுத்தும் ரேஸில் இருந்து விடுபடாமல் ரேஸிலேயே இருந்தால் உடனடியாக பிரேக்கை மிதித்து விடாதீர்கள் கார் விபத்தை சந்திக்க நேரிடும், ஒரிரு முறை ரேஸ் பெடலை மிண்டும் கீழ் நோக்கி மதித்து பாருங்கள், அல்லது ரேஸ் பெடலில் ஏதனும் ஒரு பொருள் தடுகிறதா என பாருங்கள் ஃப்ளோர் மேட்டை சரி செய்து கொள்ளுங்கள்.

நீங்கள் காரில் செல்லும் போது பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?

சிக்னல் செய்யுங்கள்

உங்கள் காரில் பிரச்சனை இருக்கிறது என்பதை எதிரில், பின்னால் வரும் கார்களுக்கும் அனைத்து இன்டிகேட்டர் லைட்களையும் எரியவிட்டு சிக்னல் செய்யுங்கள், அதன் மூலம் உங்கள் காரின் போக்கை புரிந்து அவர்கள் தங்களின் வாகனத்தின் போக்கை மாற்றிக்கொள்ள முடியும்.

நீங்கள் காரில் செல்லும் போது பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?

கியரை குறைக்க முயற்சி செய்யுங்கள்

காரில் பிரேக் பிடிக்காது என தெரிந்தவுடன் காரின் கியர்களை குறைக்க முயற்சி செய்யுங்கள் இது உங்கள் காரின் ஆர்பிஎம்மை ஏறவிடாமல் தடுத்து ஒவ்வொரு கியராக குறைக்கும் போதும் உங்கள் காரில் இன்ஜின் பிரேக்கிங் ஏற்பட்டு 5-10 கி.மீ., வேகத்தை இது கட்டுப்படுத்தும்.

நீங்கள் காரில் செல்லும் போது பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?

இது மெனுவல் கியர் காராக இருந்தால் சாத்தியம், ஆட்டோ கியர் கார்களில் மெனுவல் மோடு இருந்தால் மட்டுமே இதை நீங்கள் செய்ய முடியும், காரை மெனுவல் கியருக்கு மாற்றி பெடல் ஸிப்டர் மூலம் காரின் கியரை குறைக்கலாம்.

நீங்கள் காரில் செல்லும் போது பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?

ஆனால் காரில் ரிவர்ஸ் கியர் மட்டும் போட்டு விடாதீர்கள் இது காரின் இன்ஜினை பழுதாக்குவதோடு, காரையும் பெரும் விபத்திற்குள்ளாக்கிவிடும்.

நீங்கள் காரில் செல்லும் போது பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?

ஏ.சி.யை ஆன் செய்யுங்கள்

பொதுவாக காரின் ஏ.சி., பின்பக்க கண்ணாடிக்கான ஹீட்டர் ஆகியவற்றை பயன்படுத்துவதால் காரின் ஆர்.பி.எம். குறையும். ஆக காரின் ஏ.சி.,ஹெட்லைட், ஹீட்டர், இன்டிகேட்டர் என காரில் உள்ள அனைத்தையும் பயன்படுத்தி ஆர்பிஎம்யை குறைக்க முயற்சிக்கலாம்.

நீங்கள் காரில் செல்லும் போது பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?

ஹேண்ட் பிரேக்

காரில் பிரேக் பிடிக்கவில்லை என்றால் ஹேண்ட் பிரேக்கை தான் பிடிக்க வேண்டும் என பலர் யோசனை சொல்லுவார்கள் ஆனால் நீங்கள் வேகமாக செல்லும் போது ஹேண்ட் பிரேக்கை பயன்படுத்த கூடாது.

நீங்கள் காரில் செல்லும் போது பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?

ஆனால் ஹேண்ட் பிரேக் என்பது பின்பக்க வீலில் மட்டுமே செயல்பட கூடியது இதனால் கார் ஸ்கிட் ஆனால் நீங்கள் காரின் கண்ட்ரோலை இழப்பீர்கள் அனால் இதை உபயோக்கிக்கும் போது அதிக கவனம் கொள்ளுங்கள்.

ஒரு வேலை உங்கள் காரில் எலக்ட்ரானிக் ஹேண்ட் பிரேக் இருந்தால் அது தானாக காரை ஸ்கிட் செய்யாமல்பார்த்துக்கொள்ளும்.

நீங்கள் காரில் செல்லும் போது பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?

டோ பிரேக்

டிரெய்லர் லாரிகளுக்கு டிரெய்லர்களுக்கு என தனி பிரேக் வசதி உள்ளது. இதை பயன்படுத்தி லாரின் வேகத்தை குறைக்கலாம். ஆனால் அது அவ்வளவு விரைவாக வேகத்தை குறைக்காது, எனினும் இந்த வசதி சற்று உதவி செய்யும்.

நீங்கள் காரில் செல்லும் போது பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?

ஏற்றத்தை பயன்படுத்தலாம்

பிரேக் பிடிக்காமல் கார் சென்று கொண்டிருக்கும் போது நீங்கள் செல்லும் பாதையின் அருகே ஏதேனும் ஏற்றம் இருந்தால் உடனடியாக காரை அதில் திருப்பி காரின் வேகத்தை விரைவாக குறைக்கலாம்.

நீங்கள் காரில் செல்லும் போது பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?

ரோட்டோரம் செல்லுங்கள்

பிரேக் பிடிக்காமல் செல்லும் போது ரோட்டின் ஒரத்தில் பதிக்கப்பட்டுள்ள கற்களில் மெதுவாக உள்ள காரின் டயரை உரசும் படி சென்று காரின் வேகத்தை குறைக்கலாம். ஆனால் இது சில நேரங்களில் இது பெரும் விபத்தை ஏற்படுத்தி விடும் ஜாக்கிரதை.

நீங்கள் காரில் செல்லும் போது பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?

எலெக்ட்ரிக் கார் பிரேக் பெயிலியர்

நீங்கள் எலக்ட்ரிக் கார் பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதில் பி மோடு என்ற ஆப்ஷனை பயன்படுத்தி நீங்கள் காரை நிறுத்தலாம். சில கார்களில் பி1,2,3,4 என இருக்கும் இதில் அதிக பட்ச ஆப்ஷனை தேர்வு செய்து காரை நிறுத்தலாம்.

நீங்கள் காரில் செல்லும் போது பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?

இதில் நீங்கள் செல்லும் ரோடு, வேகம், மற்றும் காரை ஆகியவற்றை கணக்கில் கொண்டு இதில் எந்த யுக்தியை கையாள முடியுமோ அதை கையாண்டு உங்கள் காரை நிறுத்த முயலலாம்.

நீங்கள் காரில் செல்லும் போது பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?

ஆனால் காரை நிறுத்த சில முயற்சிகளை நீங்கள் கட்டாயம் எடுக்க கூடாது. முக்கியமாக காரின் கியரை நியூட்ரலுக்கு கொண்டு செல்ல கூடாது. காரை ரிவர்ஸ் கியருக்கு போடாதீர்கள், அது பெரும் விபத்தை ஏற்படுத்த நேரிடும். காரை ஆப் செய்யாதீர்கள்,அதனால் உங்கள் காரில் பவர் ஸ்டியங் வேலை செய்யாமல் போய்விடும்.

அதே நேரத்தில் காரை நிறுத்தியுடன் காரின் எச்சரிக்கை விளக்குளை எரிய விடுங்கள் இல்லாவிட்டால் அந்த வழியாக செல்லும் கார்கள் உங்கள் காருடன் மோதும் நிலை உருவாகும்.

Most Read Articles
English summary
Useful Car Accessories You Need For a Long Drive. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X