கார் பம்பர், டயர்கள் உள்ளிட்ட பாகங்களை கடித்து குதறிய நாய்கள் கூட்டம் - அதிர்ச்சி வீடியோ..!

Written By:

சாலைகளில் சுற்றித்திதிரியும் தெருநாய்க் கூட்டம் ஒன்று சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றினை கடித்துக்குதறும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாய்களால் ஒரு காரை கடித்து சேதப்படுத்த முடியுமா என்ற சந்தேகம் எழலாம். சாலையோரம் காரை நிறுத்திச்செல்பவர்களுக்கு இந்த சம்பவம் ஒரு எச்சரிக்கையாக அமையலாம்.

துருக்கி நாட்டில் பாதுகாப்புக்காக பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா ஒன்றில் தெரு நாய்க் கூட்டம் ஒன்றினால் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த எஸ்யூவி கார் சுக்குநூறாக கடித்துக் குதறப்படும் வீடீயோ காட்சிகள் பதிவாகியுள்ளது.

சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளின்படி நள்ளிரவு நேரத்தில் சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றினை இரண்டு அல்லது மூன்று நாய்கள் முதலில் சுற்றிச் சுற்றி வருவதை காணமுடிந்தது.

பின்னர், ஒரு சில நொடிகளிலேயே எந்த எண்ணிக்கை அதிகரித்து அங்கு பத்திற்கும் மேற்பட்ட நாய்கள் ஒன்றுகூடி அந்த காரை சுற்றி எதையோ மிகவும் ஆக்ரோஷமாக தேடியவாறே திரிந்தன.

நாய்கள் அனைத்தும் எதையோ பார்த்து தொடர்ந்து குரைத்துக்கொண்டே இருந்தன. நேரம் செல்லச் செல்ல ஒவ்வொரு நாயும் காரின் ஒவ்வொரு பாகமாக கடித்துக் குதறத்தொடங்கின.

காரின் அடியில் ஒரு சிறிய பூனை இருந்துள்ளது. அதனை பிடிக்கவே இந்த நாய்க்கூட்டம் அங்கு சுற்றியுள்ளது பின்னர் தான் தெரியவந்தது.

முதலில் சில நாய்கள் காரின் டயரை கடித்துக்கொண்டிருந்தன. பின்னர் அதில் ஒரு நாய் ஒன்று காரின் முன்புற பம்பரை ஆக்ரோஷமாக கவ்வி கடித்துக்கொண்டிருந்தது.

சிறிது நேரத்தில் அந்த எஸ்யூவி காரின் முகப்பு பம்பர் முழுவதுமாக நாய்களால் கடித்து குதறப்பட்டதில் சுக்குநூறாக உடைந்து சாலையில் வந்து விழுந்தது.

இறுதியாக காரின் பாடி உள்ளிட்ட பகுதிகள் நாய்களால் கடுமையாக சேதப்படுத்தப்பட்டிருந்தது. காரின் முகப்பு பகுதி முற்றிலும் உருக்குலைந்து காணப்பட்டது. கடைசியில் அந்த பூனைக்கு என்ன ஆனது என்று அந்த வீடியோவில் தெளிவாக இல்லை.

நாய்க்கூட்டத்தினால் சின்னாபின்னமாக்கப்பட்ட அந்த கார் சாலையோரம் கார்களை நிறுத்திச்செல்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவே அமைந்துள்ளது. அந்த வீடீயோவை மேலே உள்ள ஸ்லைடரில் காணுங்கள்..

Story first published: Wednesday, May 17, 2017, 12:24 [IST]
English summary
Read in Tamil about Stray Dogs ripped parked car into pieces. watch the video
Please Wait while comments are loading...

Latest Photos