தேசிய நெடுஞ்சாலையில் சுற்றித்திரியும் சிங்கக்கூட்டம் - வாகன ஓட்டிகளே உஷார்..!

Written By:

சாலைகளில் கேட்பாறற்று சுற்றித்திரியும் கால்நடைகள் மூலம் போக்குவரத்து தடைபடுவது இந்தியாவில் அன்றாடம் நாம் காணக்கூடிய ஒரு செயல் தான். ஆனால் இந்த அரிய வகை காட்டு விலங்குகளால் சாலையில் வாகனங்கள் மறிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாக இருக்கக்கூடும்.

காட்டை ஒட்டி இருக்கக்கூடிய சாலைகளில் யானைக் கூட்டங்களால், அல்லது வேறு சில மிருகங்களால் போக்குவரத்து தடை ஏற்படுவது என்பது பொதுவான விஷயமாகவே பார்க்கப்படுகிறது. நாமும் இவற்றை செய்திகளில் கண்டிருப்போம்.

ஆனால் கொலைகார மிருகங்கள் எனக் கருதப்படும் சிங்கங்களால் ஒரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடைபட்டிருப்பது கேட்கவே வினோதமாக இருக்கிறது. ஏனெனில் சிங்கங்களை அவ்வளவு எளிதில் யாரும் பார்த்து விட முடியாது. இவை ஆள்நடமாட்டமில்லா தொலைதூர பிரதேசங்களில் வசிக்கக்கூடியவை.

இந்நிலையில், குஜராத்தில் உள்ள பிபாவாவ் - ரஜூலா தேசிய நெடுஞ்சாலையில் அபூர்வ வகை என கருதப்படும் ஆசிய வகை சிங்கங்களால் வாகனங்கள் மறிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது வாகன ஓட்டிகளிடையே பீதியை கிளப்பியுள்ளது.

ஆசிய வகை சிங்கங்களை, இந்திய சிங்கம் அல்லது பெர்சிய சிங்கம் என் இந்தியாவில் காணப்படும் இந்த வகை சிங்கங்கள் இந்தியாவில் அரிதாகி வரும் விலங்கினப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

இந்த வகை சிங்கக் கூட்டம் ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் சுற்றித்திரிவது ஆச்சரியத்தை ஏற்படுத்த்வதோடு அவைகளால் மனித உயிர்களுக்கும், வாகனஓட்டிகளால் அவற்றின் உயிருக்கும் ஆபத்தை உண்டாக்குவதாக உள்ளது.

இந்த சிங்கங்கள் குஜராத்தின் தேசிய நெடுஞ்சாலைகளில் சுற்றித்திரிவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடீயோவில் இருசக்கர வாகன ஓட்டிகள் காட்டின் ராஜாவான சிங்கள்களிடம் மிக நெருக்கமாக சென்று தங்கள் மொபைலில் படம்பிடிப்பது பதிவாகியுள்ளது. ஒரு நொடியில் கூட அவை இவர்களை அடித்துவிடும் வாய்ப்பு இருப்பதை உணராமல் இந்த இளைஞர்கள் மொபைலில் படம்பிடிப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலக இயற்கை பாதுகாப்பு அமைப்பு மூலம் ஆசிய சிங்கங்கள் அரிதான விலங்கின பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றின் எண்ணிக்கை சொற்ப அளவில் இருப்பதோடு குறைந்து வருவதும் கவலையளிக்கும் விஷயமாகும்.

குஜராத்தில் உள்ள 20,000 சதுர கிமீ பரப்பளவிலான கிர் காடுகளில் 2015ஆம் ஆண்டு சிங்கங்கள் குறித்து எடுக்கப்பட்ட 14வது ஆசிய கணக்கெடுப்பில் ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை 523 என்பது தெரியவந்தது. இதில் 109 ஆண், 201 பெண் மற்றும் 213 குட்டிகள் ஆகும்.

சிங்கங்கள் தேசிய நெடுஞ்சாலைகளில் அனாயசமாக உலவுவதால் வேகமாக கடக்கும் வாகனங்களில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடீயோவை மேலே உள்ள ஸ்லைடரில் காணுங்கள்..

English summary
Read in Tamil about Lions halts traffic on a busy highway in gujarat.
Please Wait while comments are loading...

Latest Photos