மல்லையா போலவே மதிப்பிழந்த அவரது சொகுசு கார்கள்... அடிமாட்டு விலைக்கு விற்பனை!

By Saravana Rajan

பல்லாயிரம் கோடி கடனை அடைக்க முடியாமல் வெளிநாட்டில் தலைமறைவாகிவிட்ட தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்கள் தொடர்ந்து ஏலம் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், தற்போது அவரது கார்கள், விமானங்கள் போன்றவையும் ஏலம் விடப்பட்டு வருகின்றன.

யுனைடைட் ஸ்பிரிட் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து விஜய் மல்லையா அகற்றப்பட்ட நிலையில், அவரது நிறுவனத்தை கையகப்படுத்திய டியாஜியோ நிறுவனம்தான் தற்போது அவரது கார்களை ஆன்லைன் ஏலம் மூலமாக விற்பனை செய்து வருகிறது. இதில், சமீபத்தில் நடந்த ஏலத்தில் அவரது பல கோடி மதிப்பிலான விண்டேஜ் கார்கள், விலை உயர்ந்த சொகுசு கார்களும் மிக சொற்ப விலைக்கு ஏலம் விடப்பட்டன.

மல்லையாவின் சொகுசு கார்கள் அடிமாட்டு விலைக்கு ஏலம்!

கடந்த ஆகஸ்ட் 25ந் தேதி நடந்த ஏலத்தின்போது மல்லையா கார்கள் எதிர்பார்த்த அளவு விலை போகவில்லை. இதையடுத்து, அடுத்த நாள் 4 மணி வரை ஏலத்திற்கான காலக்கெடு நீடிக்கப்பட்டது. இதில், எதிர்பார்த்த விலை கிடைத்த 8 விண்டேஜ் கார்கள் உள்பட மொத்தம் 30 கார்கள் ஏலம் விடப்பட்டனது.

மல்லையாவின் சொகுசு கார்கள் அடிமாட்டு விலைக்கு ஏலம்!

அதில், அவர் ஆசையாய் வாங்கி பயன்படுத்திய பல கோடி மதிப்புடைய விலை உயர்ந்த கார்கள் மிக குறைந்த விலைக்கு ஏலம் போனது. அதேநேரத்தில், விண்டேஜ் கார்கள் நல்ல விலைக்கு ஏலம் போய் வியக்க வைத்தன. அதில், சில முக்கியமான கார்கள் எவ்வளவு விலைக்கு ஏலம் போனது என்பது உள்ளிட்ட விபரங்களை தொடர்ந்து காணலாம்.

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ்

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ்

ராஜ்சபா உறுப்பினரான மல்லையா தினசரி நாடாளுமன்றம் வருவதற்கு பயன்படுத்தி இந்த கார் வெறும் ரூ.7.8 லட்சத்திற்கு ஏலம் போனது. தற்போது இந்த காரின் அடிப்படை மாடல் கூட ரூ.2 கோடி மதிப்பு கொண்டது.

பென்ட்லீ ஃப்ளையிங் ஸ்பர்

பென்ட்லீ ஃப்ளையிங் ஸ்பர்

கோவாவில், இரவு விருந்துகளுக்கு செல்லும்போது தனது அந்தஸ்தை காட்டுவதற்கு மல்லையா பயன்படுத்தி இந்த பென்ட்லீ சொகுசு கார் ரூ.44 லட்சத்திற்கு ஏலம் போனது. பல கோடி மதிப்புடைய இந்த காரை வந்த விலைக்கு விற்றுவிட்டனர்.

மஸராட்டி குவாட்ரோபோர்ட்டே

மஸராட்டி குவாட்ரோபோர்ட்டே

சொந்தமாக கார் ஓட்ட நினைக்கும்போது மல்லையா அதிகம் பயன்படுத்திய கார் மஸராட்டி குவாட்ரோபோர்ட்டே. இந்த கார் வெறும் ரூ.37 லட்சத்திற்கு ஏலம் போயுள்ளது.

ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட்

ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட்

குதிரை பந்தய மைதானத்திற்கு செல்லும்போது இந்த காரையே மல்லையா அதிகம் பயன்படுத்தினாராம். இந்த கார் ரூ.2.42 கோடிக்கு ஏலம் போயுள்ளது.

 போர்ஷே பாக்ஸ்டர்

போர்ஷே பாக்ஸ்டர்

கோவாவில் பயன்படுத்தப்பட்ட இந்த மஹாராஷ்டிர பதிவு எண் கொண்ட போர்ஷே பாக்ஸ்டர் கார் ரூ.44.5 லட்சத்துக்கு ஏலத்தில் விடப்பட்டது. விடுமுறை தினங்களில் இந்த இரண்டு கதவுகள் கொண்ட ஸ்போர்ட்ஸ் காரில் நெடுஞ்சாலைகளில் பயணிப்பது மல்லையாவுக்கு பிடித்த பொழுதுபோக்குகளில் ஒன்று...!

 மெர்சிடிஸ் பென்ஸ் SLK

மெர்சிடிஸ் பென்ஸ் SLK

இந்த காரும் கோவாவில் இருந்த மல்லையா வீட்டு கராஜில் இருந்த கார். இந்த ஸ்போர்ட்ஸ் கார் ரூ.29.25 லட்சத்திற்கு ஏலம் போயுள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ்

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ்

இந்த காரும் கோவா வீட்டு கராஜில் இருந்தது. பேன்ஸி நம்பர் பிளேட் பொருத்தப்பட்ட இந்த சொகுசு காரும் ஏலத்தில் விடப்பட்டது. ஆனால், எவ்வளவு தொகைக்கு ஏலம் போனது என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம்

ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம்

உலகின் அதிக விலை உயர்ந்த கார்களில் ஒன்றான ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் மல்லையா அரிதாக பயன்படுத்திய கார். இந்த கார் ரூ.77.2 லட்சத்திற்கு ஏலம் போயுள்ளது.

1903 ஹம்பர்

1903 ஹம்பர்

இந்தியாவின் மிக பழமையான கார் மாடலாக கருதப்படும் இந்த ஹம்பர் கார் ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் போய் வியக்க வைத்திருக்கிறது. ஏலத்தில் இந்த காரை எடுப்பதற்கு கடைசி வரை கடும் போட்டி நிலவியது.

வோல்ஸ்லி

வோல்ஸ்லி

மும்பையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மல்லையாவின் இந்த விண்டேஜ் கார் நாடு முழுவதும் விண்டேஜ் கார் ராலி மற்றும் கண்காட்சிகளில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த காரும் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான விலையில் ஏலம் போயுள்ளது.

இதர கார்கள்

இதர கார்கள்

பிஎம்டபிள்யூ 750ஐ, மஹிநதிரா ஜீப் டீசல், பென்ட்லீ சூப்பர் ஸ்போர்ட்ஸ், மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்எல்டி மற்றும் லான்சியா விண்டேஜ் உள்ளிட்ட கார்களும் ஏலம் விடப்பட்டன. மாருதி ஓம்னி, மாருதி ஆல்ட்டோ, டொயோட்டா குவாலிஸ், ஃபோர்டு எண்டெவர், மஹிந்திரா ஸ்கார்ப்பியோ, டொயோட்டா கேம்ரி உள்பட மொத்தமாக 30 கார்கள் ஏலம் விடப்பட்டிருக்கின்றன.

 மலைக்க வைக்கும் மல்லையாவின் விண்டேஜ் கார் கலெக்ஷன்!

தொடர்புடைய சுவாரஸ்யச் செய்திகள்:

  • மலைக்க வைக்கும் மல்லையாவின் விண்டேஜ் கார் கலெக்ஷன்!
  • மல்லையாவின் பிரம்மாண்ட மோட்டார் உலகம்!
Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Read in Tamil: 30 of Mallya's vintage cars were put on the auction block as Global liquor giant Diageo, which controls controlled United Spirits Ltd tried to reduce the company debt, which stood at nearly Rs 4,000 crore as on March 31, 2016.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X