ரூ.70,000 மதிப்பில் 3 சக்கர ஸ்கூட்டரை இறக்கும் ஃபோக்ஸ்வேகன்!

By Saravana Rajan

சிறந்த கட்டுமானத் தரம் கொண்ட கார்கள் தயாரிப்பில் ஜெர்மனியை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் பெயர் பெற்று விளங்குகிறது. கார் தயாரிப்பில் ஏராளமான பரிவார பிராண்டுகளுடன் கொடி கட்டி பறந்து வரும் ஃபோக்ஸ்வேகன் மிக குறைவான விலை கொண்ட ஓர் மூன்று சக்கர போக்குவரத்து சாதனத்தை தயாரித்து வருகிறது.

இத்தகவலை அந்நிறுவனத்தின் சிஇஓ., மார்ட்டின் வின்டர்கார்ன் வெளியிட்டிருக்கிறார். "The Last Mile Surfer" என்ற திட்டத்தில் உருவாகி வரும் இந்த புதிய மின்சார மூன்று சக்கர வாகனம் விரைவில் விற்பனைக்கு வர இருப்பதையும் அவர் உறுதி செய்திருக்கிறார்.

இலகு எடை

இலகு எடை

தி லாஸ்ட் மைல் சர்ஃபர் மூன்று சக்கர வாகனம் வெறும் 11 கிலோ எடை கொண்டதாக இருக்கும். எனவே, எளிதாக எந்த இடத்திற்கும் எடுத்துச் செல்ல முடியும்.

ரேஞ்ச்

ரேஞ்ச்

லித்தியம் அயான் பேட்டரிகள் கொண்ட இந்த புதிய மூன்று சக்கர ஸ்கூட்டர் ஒருமுறை சார்ஜ் செய்தால் 20 கிமீ தூரம் வரை செல்லும்.

பயன்பாடு

பயன்பாடு

வீட்டிலிருந்து அலுவலகம் செல்வதற்கும், பெரிய வளாகங்களில் அமைந்திருக்கும் அலுவலங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கும் சிறப்பானதாக இருக்கும். அத்துடன், இதனை காரில் வைத்து எடுத்துச் சென்றும் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும் என்பதே சிறப்பு.

விலை மதிப்பு

விலை மதிப்பு

1000 டாலர் விலை மதிப்பில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதாவது, இந்திய மதிப்பில் ரூ.70,000க்கும் குறைவான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

 அறிமுகம்

அறிமுகம்

அடுத்த ஆண்டு பிற்பாதியில் ஐரோப்பிய நாடுகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக ஃபோக்ஸ்வேகன் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிற நாடுகளில் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுமா என்பது குறித்த தகவல் இல்லை.மேலும், இது செக்வே எனப்படும் இரண்டு சக்கரங்கள் கொண்ட சமநிலைப்படுத்தி ஸ்கூட்டர்களைவிட இது விலை குறைவாக இருப்பதால் அமோக வரவேற்பை பெறும் வாய்ப்புள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
The 'Last Mile Surfer' is part of Volkswagen's new strategy and that is to expand operations to various mobility platforms.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X