கேரளாவில் ஃபோக்ஸ்வேகன் ஜெட்டா கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு!

மாசு உமிழ்வு மோசடியில் சிக்கிய ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்திற்கு, இந்தியாவில் மேலும் ஒரு சம்பவம் அவப்பெயரை தந்துள்ளது. அதுகுறித்த தகவல்களை காணலாம்.

Written By:

ஃபோக்ஸ்வேகன் கார்கள் உலகப் புகழ்பெற்றவை என்பதை நாம் அறிவோம். ஆனால் அந்நிறுவனம் மாசு உமிழ்வு மோசடியில் சிக்கி மெல்ல அதிலிருந்து தற்போது மீண்டு வரும் சூழலில் சமீபத்தில் அதன் ஜெட்டா மாடல் கார் ஒன்று பார்க்கிங்கில் நின்றுகொண்டிருந்த போது தானாகவே பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி கேரளாவில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. காரின் உரிமையாளர் அதனை தனது அலுவலகத்தின் பார்க்கிங்கில் நிறுத்திச் சென்ற 5 நிமிடங்களுக்குள்ளாக காரின் எஞ்சின் பகுதியில், திடீரென தீ பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. ஒரு சில நிமிடங்களிலேயே இஞ்சின் பகுதி முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளது.

அலுவலக காவலாளி மூலமாக சம்பவத்தைப் பற்றி கேள்விப்பட்ட காரின் உரிமையாளர், உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று பற்றி எரிந்த தீயை அனைக்க முற்பட்டுள்ளார். 45 நிமிட போராட்டத்திற்கு பின்னர் தீயை அனைத்த பின்னர், காரின் பானெட்டை திறந்த போது அங்கிருந்த இஞ்சின் உட்பட அனைத்து உதிரி பாகங்களும் தீயில் கருகியுள்ளன.

சம்பவத்தின் போது காரில் 75% அளவிற்கு எரிபொருள் இருந்ததாக அதன் உரிமையாளர் தெரிவித்தார், எஞ்சின் அறையைத் தவிர வேறெங்கும் தீ பரவவில்லை, இது குறித்து
ஃபோக்ஸ்வேகன் நிறுவன அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களும் வந்து எரிந்த காரை நேரில் பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.

எரிந்த காரை ஃபோக்ஸ்வேகன் பழுது நீக்கு மையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர், பின்னர் இதுகுறித்து காரின் உரிமையாளர் பல முறை நிறுவனத்தாரிடம் கேட்டும் சரியான பதில் அவருக்கு கிடைக்கவில்லை.

இந்த காரை வாங்கியே ஒன்றரை வருடமே ஆகியுள்ளது என்றும், காரின் கம்பெனி சர்வீஸ் ரெக்கார்டுகள் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்திடம் இருக்கிறது எனவும், சமீபத்தில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தால் திரும்பப்பெறப்பட்ட கார்களில் இவரது காரும் ஒன்று எனக் கூறினார். மேலும் எரிந்த காரை சரி செய்ய ரூ.30 லட்சம் மதிப்பீட்டு கடிதம் வந்துள்ளதாகவும், ஆனால் அவரது கார் வாரண்ட்டியில் இருக்கிறது என்றும் அந்த கார் உரிமையாளர் இறுதியாக தெரிவித்தார்.

ஃபோக்ஸ்வேகன் ஜெட்டா காரின் படங்கள்:

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

Story first published: Friday, February 17, 2017, 11:01 [IST]
English summary
A Volkswagen Jetta caught on fire and has completely destroyed the engine bay. Here;s the experience of the owner.
Please Wait while comments are loading...

Latest Photos