இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் கார் எது தெரியுமா?

நம் நாட்டின் கார் மார்க்கெட் நீண்ட பாரம்பரியம் மிக்கது. பெரும் செல்வந்தர்களும், மன்னர்களும் வெளிநாடுகளில் இறக்குமதி செய்து வாங்கிய கார்கள் இன்று அனைவருக்கும் எளிதாக பயன்படுத்தக்கூடிய போக்குவரத்து சாதனமாக மாறிவிட்டது.

இதற்கு இந்தியாவில் கார் தயாரிப்பு துவங்கியதே அடிப்படை காரணம். அவ்வாறு, இந்தியாவில் கார் தயாரிப்புக்கு வித்திட்ட நிறுவனம் எது தெரியுமா? அது எந்த நிறுவனம், மாடல் என்பதை தெரிந்துகொள்ள ஆர்வம் பீறிடுகிறதா? ஸ்லைடரில் தகவல்களும், படங்களும் உங்களுக்காக காத்துக்கிடக்கின்றன.

 முதல் நிறுவனம்

முதல் நிறுவனம்

இந்தியாவின் பழமையான கார் தயாரிப்பு நிறுவனமான ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ்தான் இந்தியாவில் முதல்முறையாக கார் தயாரிப்பை துவங்கியது. ம

பிள்ளையார் சுழி

பிள்ளையார் சுழி

1942ம் ஆண்டு, குஜராத் மாநிலத்தில் இருந்த போர்ட் ஒகா என்ற இடத்தில் கன்ஷியாம்தான் பிர்லா கட்டிய சிறிய ஆலையில்தான் இந்தியாவின் முதல் கார் தயாரிக்கப்பட்டது.

இந்தியாவின் முதல் கார்

இந்தியாவின் முதல் கார்

இங்கிலாந்தை சேர்ந்த மோரிஸ் 10 காரை ரீபேட்ஜ் செய்து இந்தியாவில் ஹிந்துஸ்தான் 10 என்ற பெயரில் அசெம்பிள் செய்யப்பட்டது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் கார் மாடல் இதுதான்.

எச்எம் 10 எஞ்சின்

எச்எம் 10 எஞ்சின்

ஹிந்துஸ்தான் 10 காரில் 1.3 லிட்டர் ஓவர்ஹெட் வால்வ் எஞ்சின் பொருத்தப்பட்டிருந்தது. இந்த எஞ்சின் 4,600 ஆர்பிஎம்.,மில் 37 பிஎச்பி பவரை அதிகபட்சம் வழங்கக்கூடியதாக இருந்தது. இந்த காரில் 4 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டது.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

ஹிந்துஸ்தான் 10 கார் மணிக்கு 100 கிமீ வேகம் வரை செல்லக்கூடியது. இந்த கார் 934 கிலோ நிகர எடை கொண்டது. இந்திய வரலாற்றில் இந்த காருக்கு எப்போதும் நீங்கா இடம் உண்டு.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Have you wondered what the first car ever made in India was? Here is the answer.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X