பிளைன்ட் ஸ்பாட் மிரர் வேண்டவே வேணாம்... சில காரணங்கள்!

கண்ணுக்கு புலப்படாத பகுதியில் அருகில் வரும் வாகனங்களை எளிதாக அறிந்துகொள்வதற்கு பிளைன்ட் ஸ்பாட் மிரரை வாங்கி பலர் ரியர் வியூ கண்ணாடிகளில் பொருத்திக் கொள்கின்றனர்.

வெளிச் சந்தையில் குறைவான விலையில் கிடைப்பதும், எளிதாக ஒட்டிக் கொள்வதற்கு ஏதுவாக இருப்பதும் இந்த பிளைன்ட் ஸ்பாட் மிரர் எனப்படும் ஆடிகளை கார் உரிமையாளர்கள் வாங்கி பொருத்திக் கொள்கின்றனர். ஆனால், இது பல்வேறு பாதுகாப்பு பிரச்னைகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

01. குழப்பம்

01. குழப்பம்

ரியர் வியூ கண்ணாடியை பார்க்கும்போது, அதில் ஒட்டப்பட்டிருக்கும் பிளைன்ட் ஸ்பாட் மிரர் மீது ஓட்டுனர்களின் கவனம் செல்கிறது. இதனால், சாலையிலிருந்து ஓட்டுனர்களின் கவனம் நீண்ட நேரம் ரியர் வியூ மிரர் பக்கம் திரும்பி விடுகிறது. விபத்தை தவிர்க்கப்போய் விபத்தை விலைக்கு வாங்கும் சாதனமாக இது மாறிவிடுவதாக கூறுகின்றனர்.

ARE YOU ON INSTAGRAM? FOLLOW TAMIL DRIVESPARK ON INSTAGRAM - CLICK HERE!

 02. பயனற்ற நிலை

02. பயனற்ற நிலை

பக்கவாட்டையும், பின்புறத்தையும் எளிதாக காட்டும் விதத்தில் ரியர் வியூ கண்ணாடிகள் வடிவமைக்கப்படுகின்றன. ஆனால், பிளைன்ட் ஸ்பாட் மிரரை ஒட்டும்போது, ரியர் வியூ கண்ணாடிகளின் பயன் வெகுவாக குறைவதோடு, பாதுகாப்பு குறைபாடுகளையும் ஏற்படுத்தும்.

 03. கண்கூச்சம்

03. கண்கூச்சம்

இப்போது வரும் ரியர் வியூ கண்ணாடிகள் இரவு நேரங்களில் பின்னால் வரும் வாகனங்களின் ஹெட்லைட் ஒளியை உள்வாங்கி, ஓட்டுனருக்கு கண்கூச்சை தராத வகையில் விசேஷ பூச்சுடன் வடிவமைக்கப்படுகின்றன. ஆனால், பிளைன்ட் ஸ்பாட் மிரர்களில் அந்த விசேஷ பூச்சு இருக்காது என்பதால் ஓட்டுனருக்கு கண்கூச்சத்தை தரும்.

04. பசையை நீக்குவது கடினம்

04. பசையை நீக்குவது கடினம்

ரியர் வியூ கண்ணாடியில் பிளைன்ட் ஸ்பாட் மிரரை நீக்குவதும் கடினம். மேலும், ஒட்டுவதற்கான பசையை திரும்பவும் நீக்குவதும் கடினம். தவறி, காரின் மீது அந்த பசை பட்டால், கார் பெயின்ட்டை பாதிக்கும் ஆபத்து இருக்கிறது.

 05. கவர்ச்சியை கெடுத்துவிடும்...

05. கவர்ச்சியை கெடுத்துவிடும்...

ஹேண்ட்சம்மாக இருக்கும் உங்கள் ரியர் வியூ கண்ணாடியில் பிளைன்ட் ஸ்பாட் மிரர்களை ஒட்டினால், அது சோடா புட்டி போட்ட முகம் போல் மாறிவிடும். பாதுகாப்பானதாக இருந்தால் ஒட்டிக்கொள்ளலாம். ஆனால், இதன் பயனைவிட ஆபத்தும், அழகுக்கு குந்தகம் விளைவிக்கும் காரணங்களும் அதிகம் எனவே, இதனை தவிர்ப்பது நல்லது என்கின்றனர் ஆட்டோமொபைல் துறை வல்லுனர்கள்.

Most Read Articles
English summary
Aftermarket blind spot mirrors, or convex mirrors, or fish eye mirrors, can actually be dangerous for your car. Here’s why.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X