விமானங்களுக்கு வெள்ளை வண்ண பூச்சு கொடுக்கப்படுவதன் ரகசியம் என்ன?

Written By:

துவாக விமானங்களில் வெள்ளை வண்ணப் பூச்சுதான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு தொழில்நுட்ப ரீதியில் பல்வேறு காரணங்கள் அடுக்கப்படுகின்றன. அந்த சுவாரஸ்யத் தகவல்களை இந்த செய்தியில் தொடர்ந்து காணலாம்.

முதல் சாதகமான அம்சம், வெள்ளை நிறம் சூரிய ஒளியை எதிரொலிக்கும் தன்மை கொண்டது. பிற வண்ணங்களைவிட சூரிய ஒளியை எதிரொலிப்பதில் வெள்ளை வண்ணம் சிறந்ததாக இருக்கிறது. இதனால், விமானத்தின் உள்பாகத்தில் வெப்பம் கடத்துவது பெருமளவு தடுக்கப்படுகிறது. உலகின் அதிவேக கான்கார்டு விமானத்தில் அதிக எதிரொலிப்பு தன்மை மிகுந்த வெள்ளை வர்ணம் பயன்படுத்தப்பட்டது.

வெள்ளை வண்ணம் எளிதாக மங்கிப் போகாது. பிற வண்ணங்கள் எளிதில் மங்கிவிடும் என்பதும் மிக முக்கிய காரணமாக இருக்கிறது. இதனால், நீடித்த பயன்பாட்டிற்கு வெள்ளை வண்ணம் சிறப்பாக இருக்கும்.

காற்றின் அழுத்தம், உராய்வு காரணமாக விமானங்களின் உடல் கூட்டில் தெறிப்புகள் ஏற்படுவது வழக்கமான விஷயம். அதனை எளிதாக கண்டறிந்து சரி செய்வதற்கு வெள்ளை நிற பூச்சுதான் சிறந்ததாக இருக்கிறது.

விமானத்தில் எரிபொருள் கசிவு, ஆயில் கசிவு ஏற்படும்போது வெள்ளை வண்ண பூச்சு இருப்பதன் மூலமாக எளிதாக கண்டு கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

பெரும்பாலான விமான சேவை நிறுவனங்கள் விமான தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து குத்தகை அடிப்படையில்தான் விமானங்களை வாங்குகின்றன. வெள்ளை வண்ணமாக இருந்தால், அவற்றை பாலிஷ் செய்து தொடர்ந்து அடுத்த நிறுவனங்களிடம் குத்தைக்கு விட முடியும்.

வெள்ளை நிற விமானங்களில் லோகோவை மட்டும் எளிதாக மாற்றி பிற நிறுவனங்களிடம் குத்தகைக்கு அல்லது விற்பனை செய்துவிட முடியும். மற்றொரு காரணம், வெள்ளை நிற விமானங்களுக்கு மறு விற்பனை மதிப்பு அதிகம்.

விமானத்திற்கு புதிய வர்ணம் பூசும்போது, விமானத்தின் எடை அதிகரித்துவிடுமாம். உதாரணத்திற்கு போயிங் 747 விமானத்தின் எடை வர்ணம் பூசும்போது 250 கிலோ வரை அதிகரித்துவிடுகிறதாம். இதனால், இயக்குதல் செலவு கூடுதலாகிறது. அதேநேரத்தில், வெள்ளை வண்ண விமானத்தை விசேஷ பாலிஷ் மூலமாக புதுப்பொலிவு கொடுத்துவிட முடியும்.

விமானங்களுக்கு புதிய வர்ணம் பூசுவதற்கு ரூ.35 லட்சம் முதல் ரூ.1.50 கோடி வரை செலவாகும். மேலும், குறைந்தது 2 முதல் 3 வாரங்கள் பிடிக்கும். எனவே, பராமரிப்பு செலவை குறைப்பதற்கு பாலிஷ் செய்வதே சிறந்ததாக இருப்பதும் வெள்ளை வண்ணத்தை விமான சேவை நிறுவனங்கள் விரும்புகின்றன.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
Story first published: Tuesday, March 21, 2017, 12:25 [IST]
English summary
Read in Tamil: Why are airplanes mostly painted white colour?
Please Wait while comments are loading...

Latest Photos